அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
35.7 C
Tamil Nadu
Thursday, March 30, 2023

தமிழ்நாடு ஆன்லைன் கல்வி வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு – Tamil Nadu government online education guidelines releases in Tamil

தமிழக அரசு Tamil Nadu online education guidelines வெளியிட காரணம் என்ன?

சமீபத்தில் சென்னை பிஎஸ்பிபி பள்ளி (PSSB – #Padma Seshadri Bala Bhavan school at Chennai) ஆசிரியர் ராஜகோபலன் ஆன்லைன் வகுப்பின் போது, மாணவர்களிடம் கீழ்தரமாக நடந்துகொண்டார். மாணவிகள் புகாரின் பேரில் போலீசார் சம்மந்தப்பட்ட ஆசிரியரை போக்சோ Pocso act 2020 கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர். இந்த விவகாரம் தொடர்ந்து, ஆன்லைன் கல்வி வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடப்படும் என தெரிவித்தது.

What says Tamil Nadu Online Education online guidelines, தமிழ்நாடு ஆன்லைன் கல்வி வழிகாட்டு நெறிமுறைகள் என்ன கூறுகிறது?

தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையிலேயே, பள்ளி குழந்தைகள் பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாப்பது குறித்து வழிகாட்டுதல், இணைய வழி வகுப்புக்கான நெறிமுறைகள் என்று தெரிவித்துள்ளது.

அதில், அனைத்து கல்வி வாரியங்கள் சேர்ந்த அனைத்து பள்ளிகள் அதாவது from government schools to CBSE, etc இந்த வழிகாட்டு நெறிமுறைகள் பொருந்தும்.

ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர் பாதுகாப்பு ஆலோசனை குழு அமைக்கப்படும். பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர் இருவர், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர் இருவர், பள்ளி நிருவாக உறுப்பினர் ஒருவர், ஆசிரியரல்லாத பணியாளர் ஒருவர் மற்றும் தேவைக்கேற்ப பள்ளி சாரா வெளிநபர் ஒருவர் என உறுப்பினராக இருப்பார்.

இதற்காக, மாநில அளவில் கட்டுப்பாட்டு அறை ஒரு மாத்தில் உருவாக்கப்படும், இதில் அனைத்து தரப்பினரும் கட்டணமில்லா, மின்னஞ்சல் வாயிலாக தங்களது குறைகளை எளிதாக தெரிவிக்கலாம்.

எந்த புகாராக இருந்தாலும் உடனடியாக மாநில கட்டுப்பாட்டு அறைக்கு மாணவர்கள் பாதுகாப்பு ஆலோசனைகுழு தெரியப்படுத்த வேண்டும்.

இந்த மையம் புகார் பதிவு செய்வது மட்டுமின்றி, அதுசார்ந்து பின்பற்ற வேண்டிய அனைத்து வழிகாட்டு நெறிமுறைகைள சம்மந்தப்பட்ட அமைப்புகளுக்கு வழங்கும். இந்த மையத்தில் நன்கு பயிற்றுவிக்கப்பட்ட பல்துறை வல்லுநர் இருப்பர். இந்த மையத்தின் தகவல் அனைத்து மந்தண தன்மையுடன் பாதுகாக்கப்படும்.

பள்ளிகளை சார்ந்து அனைத்து அங்கத்தினருக்கும் போக்சோ சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பாலியல் ரீதியான குற்றங்கள் குறித்த முழு புரிதல் உண்டாகும் வகையில் வருடந்தோறும் பயிற்சிகள் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பான விழிப்புணர்வு கட்டகம் (orientation module) பள்ளி கல்வித்துறையால் கட்டகம் உருவாக்கப்பட்டு வழங்கப்படும்.

பள்ளிகளில் பாதுகாப்பை மேம்படுத்தவும், சுய தணிக்கை செய்வதை உறுதி செய்யவும் பள்ளிகல்வித்துறையால் கட்டகம் உருவாக்கப்பட்டு வழங்கப்படும்.

இணையவழிக் கற்றல் – கற்பித்தல் நிகழ்வில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வகுப்பறை சூழல்கேற்றவாறு கண்ணியமாக உடை அணிய வேண்டும்.

இணையவழி கற்றல்-கற்பித்தல் நிகழ்வுகளை முழுமையாக பதிவு செய்வதோடு, அப்பதிவுகளை குறிப்பிட்ட இடைவெளியில் மாணவர் பாதுகாப்பு ஆலோசனை குழுவைச் சேர்ந்தவர்கள் தொடர் ஆய்வு செய்ய வேண்டும்.

புகார் மற்றும் மாணவர்களின் கருத்துகளை எளிதே தெரிவிப்பதற்காக பள்ளி வளாகத்தில் பாதுகாப்பு பெட்டிகள் வைக்கப்படும். மாணவர் பாதுகாப்பு ஆலோசனை குழு மாணவர்களிடம் பெறப்பட்ட கருத்துகளை ஆய்வு செய்து தக்க நடவடிக்கை எடுக்கும்.

மாணவர் பாதுகாப்பு ஆலோசனை குழு, பள்ளியில் பெறப்பட்ட அனைத்து புகார்களையும் பதிவு செய்ய தனியாக ஒரு பதிவேட்டை பராமரிக்கும். புகாரானது எந்த முறையில் பெறப்பட்டாலும் (வாய்மொழி உள்பட) இந்த பதிவேட்டில் பதியப்பட வேண்டும்.

அனைத்து பள்ளிகளிலும் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 15ம் தேதி முதல் 22 வரை குழந்தை துன்புறுத்தலை தடுக்கும் வாரம் என விழிப்புணர்வு நிகழ்வு நடத்தப்படும்.

இவ்வாறு, தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Posts