அரசு கலைக்கல்லூரி -யில் மாணவர் சேர்க்கை இன்று முதல் தொடக்கம்
தமிழகத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை இன்று முதல் தொடங்குகிறது. மாணவ, மாணவிகள் கல்லூரி இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
தமிழகத்தில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான (2022-2023) விண்ணப்பங்களை www.tngasa.in மற்றும் www.tngasa.org என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம்.
இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் கல்லூரி உதவி மையங்கள் (Admission Facilitation Centre – AFC) மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இம்மையங்களின் பட்டியல் மேற்குறித்த இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. அதனை AFC மையங்களிலும் போதிய அளவில் கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
READ ALSO THIS: தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மறுகூட்டல் விண்ணப்பிக்கும் முறை
Table of Contents
ஒரு கல்லூரிக்கு விண்ணப்ப கட்டண விவரம்
- விண்ணப்ப கட்டணம் – ரூ.48
- பதிவு கட்டணம் – ரூ.2
- எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ஏதும் இல்லை
- பதிவு கட்டணம் ரூ.2 மட்டுமே
அரசு கல்லூரியில் விண்ணப்பம் மற்றும் பதிவு கட்டணம்
விண்ணப்ப கட்டணம் மற்றும் பதிவு கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் டெபிட் காா்டு, கிரெடிட் கார்டு, நெட் பேக்கிங், மூலம் இணையதள வாயிலாக செலுத்தலாம். இணையதள வாயிலாக கட்டணம் செலுத்த இயலாத மாணவர்கள் கல்லூரி சேர்க்கை உதவி மையங்களில் “The Director, Directorate of Collegiate Education, Chennai – 6” என்ற பெயரில் 22.6.2022 அன்று அல்லது அதற்கு பின்னர், வங்கி வரைவோலை அல்லது நேரடியாகவும் செலுத்தலாம். மாணவர் சேர்க்கை வழிகாட்டு மற்றும் கால அட்டவணையை மாணவர்கள் மேற்குறித்து இணையதளங்கள் மூலம் அறிந்துகொள்ளலாம்.
- இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய துவங்கும் நாள் 22.6.2022
- இணையதள வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்த இறுதிநாள் 7.7.2022
அரசு கலைக்கல்லூரி உதவி எண்
ஏதாவது சந்தேகம் இருந்தால் தொடர்பு கொள்ளுங்கள் – 044 – 28260098/28271911
Join WhatsApp Group | WhatsApp Group |
To Follow Telegram : | Telegram Link |
To Follow Facebook | Facebook Link |
To Follow Twitter | Twitter Link |
To Follow Instagram | Instagram Link |
To Follow Youtube | Youtube Link |