கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கும் காரணத்தால், 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழக அரசு விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளது.
செய்தி மக்கள் தொடர்பு துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனா பெருந்தொற்று காரணமாக 1 முதல் 9 வரையிலான வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, தற்போது 10 முதல் 12 வரையிலான வகுப்புகள் மட்டும் செயல்படுகின்றன.
இந்த நிலையில் அதிகரித்து வரும் கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக மாணவர்களின் நலன் கருதி வரும் 31ஆம் தேதி வரை 10, 11 மற்றும் 12 உள்ளிட்ட அனைத்து வகுப்புகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது.
இதையடுத்து வரும் 19ம் தேதி அன்று தொடங்கி 10 மற்றும் 12ஆம் நடக்க விருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுகின்றன. தேர்வு குறித்து பின்னர் அறிவிக்கப்படும். என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10, 11, 12ஆம் வகுப்புகளுக்கு விடுமுறை
முன்னதாக, தமிழக அரசு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிக்காக, 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. பின்னர், சுகாதாரத்துறை சார்பில் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளகளில் கடந்த இரண்டு வாரங்களாக தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இதில் பெரும்பாலான மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி முடிக்கப்பட்டது.
இருந்தபோதிலும், கடந்த சில நாட்களாக தமிழகதத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகாித்து வருகிறது. அதே சமயத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடத்தவும், பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது.
இதற்கிடையில் சமூக ஆர்வலர்கள், ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு, கொரோன தொற்று குறையும் வரை, 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தனர். இதனை தொடர்ந்து, தமிழக அரசு இந்த முடிவு எடுத்துள்ளது.