ஒமிக்ரோன் வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தில் தொடக்க பள்ளிகளில் ஜனவரி 10ம் தேதி வரை நேரடி வகுப்புகளுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், தமிழக அரசு சற்றுமுன் முக்கியமான செய்தியை வெளியிட்டுள்ளது.
அந்த உத்தரவில், பண்டிகை காலங்களில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இன்று தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. பல்வேறு துறை அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
பரவி வரும் உருமாறிய கொரோனா ஒமிக்ரோன் வைரஸ் கருத்தில் கொண்டு ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜனவரி 10ம் தேதி வரை விதிக்கப்பட்டுள்ளன.
பள்ளியை பொருத்தமட்டில், ஏற்கனவே நடைமுறையில் உள்ளவாறு மழலையர் மற்றும் நர்சரி, பிரைமரி பள்ளிகள் செயல்பட அனுமதியில்லை என்று இந்த புதிய உத்தரவில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 8ம் வகுப்பு வரை 10.01.2022 முடிய நேரடி வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதே சமயத்தில் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளி வகுப்புகள், கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து தொடக்க, நடுநிலை பள்ளி மாணவர்கள் மீண்டும் ஆன்லைன் கல்வி நோக்கி நகர உள்ளனர்.
Join WhatsApp Group | WhatsApp Group |
To Follow Telegram : | Telegram Link |
To Follow Facebook | Facebook Link |
To Follow Twitter | Twitter Link |
To Follow Instagram | Instagram Link |
To Follow Youtube | Youtube Link |