திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்தவர் சம்பந்தம் (58). இவர் பழனி வட்டார கல்வி அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். தோ்தல் பணிக்காக நேற்று நத்தம் வந்தார். நத்தம் கோசுகுறிச்சி வாக்குச்சாவடி மையத்தில் பணியாற்றி வந்தார்.
இன்று காலை குளிப்பதற்காக பாத்ரூம் சென்ற அவர், அப்போது வழுக்கி விழுந்ததில் தலையில் அடிப்பட்டு மயக்கமடைந்தார். அருகிலிருந்து அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சம்பந்தத்தை பரிசோதித்தபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என்று தெரிவித்தனர்.
தேர்தல் பணிக்கு வந்த இடத்தில் வட்டார கல்வி அலுவலக கண்காணிப்பாளர் இறந்தது சக பணியாளர்கள் இடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியது.
இதேபோல், சிவகங்கை மாவட்டத்தில் தேர்தல் பணியாற்றிய உடற்கல்வி ஆசிரியர் உயிரிழந்துள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
Join WhatsApp Group | WhatsApp Group |
To Follow Telegram : | Telegram Link |
To Follow Facebook | Facebook Link |
To Follow Twitter | Twitter Link |
To Follow Instagram | Instagram Link |
To Follow Youtube | Youtube Link |