You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

டிபிஐ வளாகத்தில் ஆசிரியர்கள் இரவு, பகலாக போராட்டம்

|

தமிழக பள்ளி கல்வித்துறையில் மாற்றுதிறன் மாணவ, மாணவிகளுக்கு பயிற்றுவிக்கும் பயற்றுநர்களுக்கு ஊதிய உயர்வு வழங்காததை கண்டித்து, சென்னை டிபிஐ வளாகத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். கடந்த 18 ஆண்டுகளாக எந்த ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை என அவர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். 200க்கும் மேற்பட்ட பயிற்றுநர்கள் இரவு, பகலாக தொடர் போராட்டம் நடத்தி வருவதால், பரபரப்பு நிலவுகிறது.

அறந்தாங்கி, அருகே மதிய உணவு திட்டத்தில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட முட்டையில் உயரிழந்த நிலையில் கோழிகுஞ்சு இருந்ததால், மாணவர்களும், பெற்றோர்களும் அதிருப்தி அடைந்தன. காலாவதியான முட்டை வழங்குவதாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் சக்கந்தி உயர்நிலை பள்ளி, மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட விழாவில், அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டு நேற்று பேசியதாவது, 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் மூலம் 405 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பிற்கு தேர்வாகி உள்ளனர். நீட் தேர்வில் தமிழ்நாட்டு மாணவ, மாணவிகளின் நலன் கருதி, தமிழ்வழி பாடத்திட்டத்தில் இருந்துதான் அதிக அளவிலான கேள்விகள் கேட்கப்படுகிறது. தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வித்தரம் உயர்த்துவதற்கு போட்டி தேர்வை எதிர்கொள்வதற்கு இந்த அரசு தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த ஆண்டு பள்ளி மாணவர்களுக்கான காலணி வழங்கப்படும், இவ்வாறு அவர் கூறினார்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றிய கிராமங்களில் உள்ள நூலகங்களை மினி கிளினிக்குகளாக மாற்றுவதற்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஒத்தை ஆலங்குளம், சாக்கிலிபட்டி உள்ளி கிராமங்களில் உள்ள நூலகத்தில் உள்ள நூல்கள் அகற்றப்பட்டு, கிளினிக்களாக மாற்றப்பட்டுள்ளன. புதிய கட்டிடம் கட்டுப்பட்டு, கிளினிக் திறக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ராணிபேட்டை மாவட்டத்தில் 90 சதவீதம் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வருவதாக முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார் தெரிவித்துள்ளார்.