24.6 C
Tamil Nadu
Sunday, July 3, 2022

ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கொரோனா இல்லை – அமைச்சர், பள்ளி மாணவர்கள் தர்ணா,

9, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி மாதம் வகுப்புகள் தொடங்க, பெற்றோரிடம் கருத்து கேட்கப்படும், பின்னர் வகுப்புகள் தொடங்குவது குறித்து தமிழக முதல்வர் அறிவிப்பார் என கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோன தொற்று என்ற செய்தி தவறானது, 2 ஆசிரியர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக மட்டும் கொரோனா பரிசோதனை செய்துள்ளனர். அவர்களுக்கு தொற்று பாதிப்பு ஏதும் உறுதி செய்யப்படவில்லை, இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் அவர் கூறியதாவது, உடற்கல்வி ஆசிரியர்கள் பணி நியமன ஆணை பெற்றவர்கள், பணியில் அமர்ந்துவிட்டனர். இந்த மாத இறுதியில் புதிய தேர்வு அட்டவணை வெளியிட உள்ளோம். எவ்வளவு பணியிடம் காலியாக உள்ளதோ அந்த பணியிடங்கள் நிரப்பபடும். ஆசிரியர் தேர்வாணையம் மூலம் 2013, 2014 மற்றும் 2017ம் ஆண்டில் தேர்வானவர்கள் 82 ஆயிரம் பேர் உள்ளனர், இவ்வாறு அவர் நிருபர்களிடம் தெரிவித்தார்.

லேப்டாப் வழங்காத பள்ளி கல்வித்துறையை கண்டித்து முன்னாள் அரசு பள்ளி மாணவிகள் சுமார் 40 பேர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கூடி திடீர் தர்ணர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏறப்பட்டது. கடந்த 2017-18ம் கல்வியாண்டில் படித்த மாணவ, மாணவிகளுக்கு பள்ளி கல்வித்துறை இலவச லேப்டாப் தற்போது வரை வழங்கவில்லை என குற்றம்சாட்டினர். பின்னர், போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர்.

பணி நிரந்தரம் செய்யக்கோரி, பகுதிநேர ஆசிாியர்கள் உளுந்தூர்பேட்டைக்கு பிரசாரத்திற்கு வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் மனு வழங்கினார்.

9ம் வகுப்பிற்கு குறைக்கபட்ட பாடத்திட்டத்தை பள்ளி கல்வித்துறை நேற்ற வெளியிட்டது.

தொழிற்சாலைகளில் சிறுவர்களை பணிக்கு அமர்த்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய குழந்தைகள் உரிமைகள் ஆணைய உறுப்பினர் டாக்டர். ஆர்.ஜி ஆனந்த் எச்சரித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் படிக்கும் மாணவ, மாணவிகளின் சுகாதார மேம்பாட்டுக்காக மொபிஸ் இந்திய நிறுவனம் சார்பில் கோவிட் 10 பாதுகாப்பு பொருட்கள் வழங்கும் விழா, ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் பெரிய காஞ்சிபுரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது.

கோவை மாவட்டத்தில் 3.41 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிவகாசியில் நடந்த மாநில அளவிலான தடகள விளையாட்டு போட்டிகளில் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு விடுதியை சேர்ந்த மாணவிகள் 4 தங்கம், 2 வெள்ளி, 3 வெங்கலம் என 9 பதக்கங்களை குவித்து வெற்றிபெற்றனர்.

கொரோன பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, பள்ளி மாணவர்களை அந்தந்த பள்ளிகளிலேயே பொது தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநில தலைவர் இளமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கல்வி கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மாணவர்கள் நேற்று 48வது நாளாக தொடா் போராட்டம் செய்து வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் அருகே 2 குழந்தைகளுடன் இரு சக்கர வாகனத்தில் வந்த தனியார் பள்ளி ஆசிரியையிடம், மர்மநபர்கள் 2 பவுன் தங்க ஆபரணத்தை பறித்து சென்றனர்.

Join WhatsApp Group WhatsApp Group
To Follow Telegram : Telegram Link
To Follow Facebook Facebook Link
To Follow Twitter Twitter Link
To Follow Instagram Instagram Link
To Follow Youtube Youtube Link

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Posts