அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
26.6 C
Tamil Nadu
Friday, December 1, 2023

அடிப்படை வசதியின்றி தவிக்கும் பள்ளிகள், கட்டணம் வசூலிக்கக்கோரி ஆசிரியர்களுக்கு நெருக்கடி

ஜெயங்கொண்டம் – கும்பகோணம் பிரதான சாலையில் உள்ள ஓரம் கடைவீதியில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்று சுவர் இல்லாததால், சமூக விரோதிகள் உள்ளே நுழைந்து அட்டகாசம் செய்து வருகின்றனர். கடந்தாண்டு மழையின் போது, பாழடைந்த கட்டிடம் மற்றும் சுற்றுசுவர் இடிந்து விழுந்தது. தற்போது வரை புதிய சுற்றுசுவர் கட்ட மாவட்ட கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் எழுந்தது. இதனால், குடிமகன்கள் பள்ளி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

குடியாத்தம் அடுத்த வளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் அடிப்படை வசதி இல்லாததால், ஆசிரியர்கள், மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். குறிப்பாக, கழிப்பறை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 443 மாணவிகள், 25க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உள்ளனர். இதனால், மாணவர்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.

சேலம் மாவட்டத்தில், தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் செலுத்தாத மாணவர்களின் வீட்டுக்கே சென்று கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்று ஆசிரியர்களை வற்புறுத்துவதால், ஆசிரியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். ஆனால், அவர்களுக்கான ஊதியம் முறையாக வழங்கப்படுவதில்லை எனவும், மெட்ரிக் பள்ளி இயக்குனர் கருப்புசாமி இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு, உரிய தீர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜெயலலிதா கல்வி துறைக்கு அதிக சலுகை அளித்ததால், தமிழகத்தில் பட்டதாரிகள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது என தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

மாணவர்களின் தொடர் போராட்டம் காரணமாக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூாியை சுகாதாரத்துறையின் கீழ் கொண்டு வந்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த கல்லூரி கடலூர் அரசு மருத்துவ கல்லூரியாக செயல்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இருந்தபோதிலும் கல்வி கட்டணம் குறையும் வரை போராட்டம் தொடரும் என மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய அளவிலான கலா உத்சவ் போட்டியில் கோவை கிணத்துக்கடவு அரசு மேல்நிலை பள்ளி மாணவி கிருத்திகா மூன்றாம் இடம் பிடித்தார். தெருக்கூத்து, மயிலாட்டம் உள்ளிட்டவை விசூவல் 3டி ஆர்ட் வரைந்து போட்டியில் அசத்தினார். நாட்டுபுற கலைகள் மீட்டெடுப்பு என்ற தலைப்பில் அவர் இதனை வரைந்தார்.

மாவட்ட வேலை வாய்ப்பு சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் பிப்ரவரி 9ம் தேதி கோபியில் நடக்கும் என ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவன் தெரிவித்துள்ளார்.

கட்டணத்தை குறைக்கக்கோரி, பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் நுழைவு வாயில் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர் நியமனத்தில் திட்டமிட்டு தாமதம் செய்யப்பட்டு வருவதாக பேராசிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Related Articles

Latest Posts