அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
29 C
Tamil Nadu
Tuesday, May 30, 2023
அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

Unemployed computer teachers story | Tamil Nadu Computer teachers demand to appoint them in government schools, MK Stalin, Anbil Mahesh Poyyamozhi | Tamil Nadu latest education news

சமச்சீர் கல்வியில் கலைஞர் கொண்டு வந்த கணினி அறிவியல் பாடத்தை மீண்டும் அரசு பள்ளிக்கு கொண்டுவர முதல்வருக்கு கணினி ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை!


அரசுப்பள்ளியில் பயிலும் கிராமப்புற ஏழை எளிய அரசு மாணவர்களுக்கு கணினி கல்வி தந்த கலைஞர். அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்திற்கு முக்கியத்துவம் தந்து மேல்நிலைப்பள்ளிகளில் 1998ம் ஆண்டு கணினி அறிவியல் பாடத்தை கொண்டு வந்தார்.
அரசுப் பள்ளிகளில்தான் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள், முதல் தலைமுறையாக கல்விக் கூடங்களில் காலடி எடுத்து வைக்கும் வாய்ப்பு பெரும்பாலும் இருக்கிறது. அப்படி இருக்கும்பொழுது கிராமப்புற ஒடுக்கப்பட்ட, ஏழை – எளிய குடும்பங்களைச் சேர்ந்த இருபால் மாணவர்களுக்குக் கணினி கல்வி அவசியம்  என எண்ணி அவர்களின் எதிர்காலம் ஒளிமயமாக அமைய கணினி அறிவியல் பாடத்திற்கு ஒளியேற்றி தந்தார்.

தமிழகத்தில் கடந்த 2009 -ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் மாண்புமிகு கலைஞர் அவர்களால் சமச்சீர் கல்வித்திட்டம் கொண்டு வரப்பட்டது. அப்போது 6 ஆம் வகுப்பு மற்றும் 10 ஆம் வகுப்புகளில் சமச்சீர் கல்வி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. தனியார் மாணவர்கள் கற்றுக் கொண்டிருந்த கணினி அறிவியல் கல்வியை  அரசு பள்ளி மாணவர்களும் கணினி கல்வி கற்க சமச்சீர் கல்வித் திட்டம் கொண்டு வரப்பட்டது.

2011-12 கல்வி ஆண்டில் அனைத்து வகுப்புகளிலும் சமச்சீர் கல்வி அறிமுகம் செய்யப்பட்டது. அதே ஆண்டின் மே மாதம் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை சுமார் 28 லட்சம் மாணவர்களுக்கு ரூ.150 கோடியில் அச்சடிக்கப்பட்ட கணினி அறிவியல் பாட புத்தகங்கள் ஆட்சி மாற்றம் காரணமாக கணினி பாடப்புத்தகம் மட்டும் இன்று வரை கிடங்குகளில் உறங்கிக் கொண்டிருக்கின்றன.

ஏழை மாணவர்களின் கணினி அறிவியல் பாடப்புத்தகம் குப்பைகளாக மாற்றப்பட்டது ஆர்டிஐ  அதிர்ச்சி தகவல் தந்துள்ளது. சமச்சீர் கல்வித்திட்டம் கொண்டு வரப்பட்டதால் பி.எட் கணினி ஆசிரியர் படிப்பை முடித்த சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்களுக்கு அரசுப்பள்ளிகளில் வேலை கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருந்தோம். ஆனால், அரசுப்பள்ளிகளில் பி.எட் படித்த கணினி ஆசிரியர்களுக்கு முந்தய அதிமுக ஆட்சியில் பகுதி நேர ஆசிரியர் பணி  கூட கிடைக்கவில்லை.

தமிழக கலைத்திட்டத்தில் ஐந்து பாடம் என்ற நிலைமாறி ஆறாவது பாடமாக கணினி அறிவியல் பாடம் கலைஞர் அவர்களால் உருவாக்கப்பட்டது. கணினி அறிவியல் பாடம் இன்றைய காலகட்டத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மிகவும் முக்கியமானதாகும். இதனை உணர்ந்து 2011ஆம் ஆண்டு கணினி அறிவியல் பாடம் சமச்சீர் கல்வியில் தனி பாடமாக கொண்டுவரப்பட்டது.


ஆனால் அந்த புத்தகம் இன்றளவும் மாணவர்களுக்கு பயன்படாத வண்ணம் உள்ளது. நமது சமச்சீர் கல்வியை பின்பற்றி கேரளா ,தெலுங்கானா போன்ற அண்டை மாநிலங்கள் கணினி அறிவியல் பாடத்தை ஒன்றாம் வகுப்பிலிருந்து கட்டாய தனி பாடமாக வைத்துள்ளது. இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களும் கணினி அறிவியல் பாடத்திற்கு முக்கியத்துவம் தந்துள்ளது.


மற்ற மாநிலங்களில் கட்டாய கல்வியாக கணினி அறிவியல் பாடம் இருப்பதால் கணினி அறிவியல் பாடத்தில் தேர்ச்சி பெற்றால்தான் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற முடியும் என்ற நிலையை உருவாக்கியுள்ளது. கணினி அறிவியல் பாடத்திற்கு முக்கியத்துவம் தந்து அதற்கான கணினி ஆசிரியர்களை நியமித்து வருகின்றது மற்ற மாநில அரசு. இதன் காரணமாக  வருடம் வருடம் மாணவர் சேர்க்கை அரசு பள்ளிகளில் உயர்ந்து கொண்டே வருகிறது. இன்று கேரள அரசு பள்ளிகளில் 100 சதவீத கணினி ஆய்வுகளும் அதற்கான ஆசிரியர்களும் அனைத்து நிலைகளிலும் கணினி அறிவியல் பாடம் முக்கிய பாடமாக நடைமுறையில் இருப்பதற்கான சான்று.

https://kite.kerala.gov.in/KITE/


கேரள மாநிலம் இந்தியாவில் கணினி அறிவியல் கற்பித்தலில் முதல் மாநிலமாக திகழ்கிறது. ஆனால் கணினி அறிவியல் பாடத்தை முதன்முதலாக சமச்சீர் கல்வியில் வாயிலாக அறிமுகப்படுத்திய நாமும் பின்னோக்கி சென்று கொண்டிருக்கின்றோம்.

கணினிக் கல்விக்காக வந்த 900 கோடி நிதி!


 2011ஆம் ஆண்டு மத்திய அரசு அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கணினி ஆய்வகம் மற்றும் கணினி கலவி வழங்குவதற்கு ரூபாய் 900 கோடி நிதியை ஒதுக்கிய கணினி கல்விக்காக பயன்படுத்தாமல் எட்டு ஆண்டுகள் வைத்திருந்து  மத்திய அரசுக்கே திரும்ப அனுப்ப இருந்தது ஏழை மாணவர்களின் கனவு கல்வியான கணினி கல்வி அதோடு நின்று போய்விடும் என்று எண்ணி அப்போது மாபா பாண்டியராஜன் அவர்கள் கல்வித் துறை அமைச்சராக இருந்தார்.

அவரிடம் இதைப் பற்றி புகார் தெரிவிக்கவும் உடனடியாக மத்திய அரசிடம் பேசி அந்த நிதியை தமிழகத்திற்கு வாங்கி தந்தார் அதனை கூட இரண்டு வருடங்களாக பயன்படுத்தாமல் 2019ஆம் ஆண்டு அனைத்து உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளுக்கும் கணினி ஆய்வகங்கள் அமைக்கப்பட்டு எவ்வித பயனும் அளிக்கவில்லை இன்று வரை.  கணினி ஆய்வகம் . சமச்சீர் கல்வியில் கணினி அறிவியல் பாடம்  தனி பாடமாகவும் கொண்டுவரப்பட்டது ஆனால் புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்பட்டு அதில் அறிவியல் பாடத்துடன் இணைப்பாக மூன்று பக்கங்களை மட்டும் பெயருக்காக இணைத்தது. இதற்கு ஆசிரியர்கள் மற்றும் செய்முறை வகுப்புகளில் ஏதுமின்றி இந்த பாடத்தை மத்திய அரசின் நிதிக்காக மட்டுமே உருவாக்கியது

அதிமுக ஆட்சி காலத்தில் கணினி அறிவியல் பாடத்தின் நிலை..

கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சிக்காலம்  நடைபெற்றது 2011ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் சமச்சீர் கல்வியில் தொடங்கிய பிரச்சனையில் கணினி அறிவியல் பாடம் மட்டும் அரவம் இல்லாமல் நீக்கப்பட்டது தொடர்ந்து. கணினி பாடத்திட்டத்தை கொண்டுவரக்கோரி கணினி ஆசிரியர்கள் தொடர்ந்து பல அமைச்சர்களிடமும் கல்வித்துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எவ்வித பலனும் அளிக்கவில்லை. பள்ளிக்கல்வித்துறைக்கு மட்டும் கடந்த 10 ஆண்டுகளாக எட்டு அமைச்சர்கள் மாறி மாறி இருந்தனர். அனைவருக்குமே சமச்சீர் கல்வியில் நீக்கப்பட்ட கணினி பாடத்தை கொண்டுவரக்  கோரிக்கை மனு கொடுக்கப்பட்டும் எவ்வித பயனும் இல்லை. கணினி ஆசிரியர்களின் கோரிக்கை மட்டும் கிடப்பில் கிடந்தது.


ICT யின் நிதிக்காக அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடம் ‌
புதிய பாடத்திட்டத்தில் கணினி அறிவியல் பாடம் அறிவியல் பாடத்தில் இணைப்பு பாடமாக பெயரளவில் மூன்று பக்கங்கள் மட்டும் இணைக்கப்பட்டது. ஆட்சியின் இறுதித் தருவாயில் கணினி அறிவியல் பாடம் கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் கல்வி நலன் கருதியும் அரசு பள்ளிகளில் கணினி பாடத்தை கொண்டு வருவதாக கூறியது. ஆனால் அதற்காக செய்முறை தேர்வு தனி புத்தகங்களோ இன்றி கணின பாடத்தை உருவாக்குவதாக வெற்றி அறிக்கையாக கொடுத்ததே  தவிர அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி முறையாக சென்று சேரவில்லை என்பதே உண்மை.

கணினி ஆசிரியர்களின் நிலை அதிமுக ஆட்சி காலத்தில்:
சமச்சீர் கல்வியில் கணினி அறிவியல் பாடம் நடைமுறைப்படுத்தினால் அரசு பள்ளிகளில் கணினி அறிவியலில் படித்தவர்களுக்கும் வாழ்வாதாரம் உண்டு என நம்பி இருந்தோம் ஆனால் நடந்தவை என்னவென்றால் சமச்சீர் கணினி பாட புத்தகத்தோடு எங்கள் வாழ்வாதாரமும் குழியில் புதைக்கப்பட்டது .2011ஆம் ஆண்டு 16 ஆயிரம் பகுதிநேர சிறப்பாசிரியர்களே நியமனம் செய்தது அதிமுக அரசு.
இதில் கணினி பயிற்றுநர்களும் அடக்கம் பிஎட் பயின்ற கணினி பயிற்றுனர்களுக்கு முன்னுரிமை தராமல் எவ்வித கல்வித்தகுதி இன்றியும் பதிவு மூப்பு தேர்வு இலலாமல் பணி நியமனம்  செய்துள்ளது. ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வை கொண்டுவந்த அதிமுக அரசு கணினி பயிற்றுநர் பகுதிநேர ஆசிரியர்களின் எவ்வித தகுதியும் இன்றி பலர் இன்று வரை அரசுப் பள்ளியில் பணிபுரிகின்றனர். ஒரு சிலர் மட்டுமே 2011 ஆம் ஆண்டு கணினி பாடத்தில் பிஎட் முடித்தவர்கள் ஆக உள்ளனர் என்று தகவல் அறியும் உரிமைச் சட்டம் கூறுகின்றது.

முதுகலை கணினி பயிற்றுநர் காண ஆசிரியர் தகுதி தேர்வு. :
கணினி பயிற்றுநர் தேர்வு மாதிரி தேர்வு போன்று நடைபெற்றும் அதற்கு அவசர கோலத்தில் ஆசிரியர் நியமனம் செய்தது அதிமுக அரசு பல்வேறு குளறுபடிகள் முறைகேடுகளும் இந்தத் தேர்வில் நடைபெற்றது.

அரசு பள்ளியில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பல ஆண்டுகளாக கணினி ஆசிரியர் துறைத்தேர்வு சந்தித்து வந்தனர். இந்நிலை மாற பல அரசியல் கட்சிகளின் உந்துதலின் பெயரால் பல ஆண்டுகள் போராடி 742 கணினி ஆசிரியர்களை 2018ஆம் ஆண்டு நியமனம் செய்து இசைந்து  இருந்தது. இதில் மொத்தம் 814 பணியிடங்கள் உருவாக்கப்பட்டது. இதற்கான தகுதி தேர்வு 2019 ஆம் ஆண்டு நடைபெற்றது இதை தேர்வு என்று சொல்வதைவட பயிற்சித் தேர்வு என்று சொன்னால் மிகையகாது. இந்தத் தேர்வை வைத்து ஆசிரியர் நியமனம் செய்து அழகு பார்த்தது ஆண்ட அதிமுக  அரசு அனைத்து துறை தேர்வுகளும் குறிப்பாக முதுகலை ஆசிரியர் தேர்வு இருமொழிக் கொள்கை பின்பற்றப்படுகிறது.

ஆனால், கணினி ஆசிரியருக்கான முதுகலை கணினி பயிற்றுநர தேர்வில் இருமொழிக் கொள்கை பின்பற்றப்படவில்லை . மாண்புமிகு மேனாள் முதல்வர் கலைஞர் அவர்கள் தமிழக மாணவர்கள் கணினித்தறையில் சிறந்த விளங்கிட  அரசுப் பள்ளியில் நிரல், மென்பொருள் முதன்மை நினைவகம் என என தமிழ் மொழியில் கணினி பாடத்தை கற்கின்ற போது அதனைக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் இரு மொழிகளிலும் ஆசிரியர் தெளிவு பெற்றிருக்க வேண்டும். ஆனால் தமிழகத்தில் நடந்த தேர்வில் ஒரு வினாக்கள் கூட தமிழ் மொழியில் இல்லை என்பது வேதனைக்குரியதாக உள்ளது.


பத்தாம் வகுப்பு மற்றும் #டிஎன்பிஎஸ்சி போன்ற துறைத்தேர்வுகள் குறித்த நேரத்தில் நடைபெறுகின்ற இந்த சமயத்தில் முதன்முதலாக ஆன்லைன் வாயிலாக கணினி பயிற்றுநர்களுக்கு தேர்வு நடைபெற்றது இதில் 10 மணிக்கு தொடங்கிய தேர்வு. ஒரே ஒரு வினா தலைக்கொண்டு இரவு 8 மணி வரை நடைபெற்றது இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அதிமுக அரசு அவசர கோலத்தில் பணி நியமனம் செய்தும் அழகு பார்த்தது. பல தேர்வு மையங்களில் பல்வேறு குளறுபடிகள் உடன் இந்த தேர்வு நடைபெற்றது கணினி பயிற்றுநர்கள் கைபேசியுடன் தேர்வு எழுதினர்.

இன்று பல்வேறு ஊடகங்கள் வழியாக நாம் கண்டும் இருந்தபோதிலும் இதுதொடர்பாக வழக்கு இன்றும் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள நிலையில் அவசர கோலத்தில் பணி நியமனம் செய்தது முந்தைய அரசு இந்த கணினி ஆசிரியர் பணி நியமனத்தை உற்றுநக்கி நல்லதொரு முடிவெடுக்க கணினி ஆசிரியர் சார்பாக வலியுறுத்துகின்றோம்.


வாழ்வாதாரம் இன்றி வாழும்60000 கணினி ஆசிரியர்களின் இன்றைய நிலை:


தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கணினி அறிவியலில் பிஎட் பட்டம் பெற்றுள்ளோம் ஆனால் தமிழக தனியார் பள்ளிகளில் கூட பணி வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இங்கு   கூட பணிபுரிய இயலாத சூழல் கணினி ஆசிரியர்களுக்கு மட்டுமே உள்ளது மற்ற ஏனைய பாட ஆசிரியர்கள் முதுகலை இளங்கலை பட்டத்துடன்  பிஎட் பட்டம் கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும். ஆனால் கணினி ஆசிரியர் பணியிடங்கள் மட்டும் தனியார் பள்ளிகளிலும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் பிஎட் பட்டம் கட்டாயமில்லை என்ற நிலையில் உள்ளது. கணினி ஆசிரியர்களுக்கு உரிய அரசாணை இல்லாததால் இன்று அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகங்களிலும் பி.எட் பட்டம் பெற்றும் இன்று பயனில்லாமல் வாழ்வை இழந்த நிலையில் உள்ளோம்.


*அரசு பகுதி நேர ஆசிரியர் பணியிடங்களில் கூட கணினி அறிவியலில் b.ed படித்தவர்களை  புறந்தள்ளி உள்ளது.
*AEEO ,DEO ,TET தேர்வில் கூட பாக்கு கொள்ள இயலாத ஒரு சூழ்நிலையில் உள்ளோம்.

கணினி ஆசிரியர்களின் பிரதான கோரிக்கை அரசு பள்ளி மாணவர்களின் கல்வியில் மாற்றம் பெறுவதற்கான கோரிக்கை:

கணினி அறிவியல் பாடத்தை ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை தனி பாடமாகவும் ஆறாம் வகுப்பிலிருந்து கட்டாயப் பாடமாக கொண்டு வரவண்டும்.
தொடக்க ,நடுநிலை ,உயர்நிலை,மேல்நிலைப் பள்ளிகளுக்கு குறைந்தபட்சம் பள்ளிக்கு ஓர் கணினி ஆசிரியர் என்ற வீதம் நியமனம் செய்ய வேண்டுகிறோம்.
*பாடத்திட்டத்தில் மட்டும் மாற்றம் கொண்டு வரமல் கலைத் திட்டத்தில் மாற்றம் கொண்டு வரவேண்டும்.


முந்தய அரசு  பாடத்திட்டத்தில் உள்ள ஐந்து பாடங்களை மட்டும் மாற்றி மாற்றி உருவாக்கியது இதனால் மாணவர்களுக்கு எவ்வித பயனும் இல்லை. கலைத்திட்டத்தில் கணினி அறிவியல் பாடத்தை 6-வது படமாக கொண்டு வந்து மாபெரும் புரட்சியை கல்வித்துறையில் மாற்றிட வேண்டும்.

மாண்புமிகு முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஐயா அவர்கள்”கலைஞர் தந்த கணினி அறிவியல் பாடம்” 


கலைஞரின் கனவு கல்வியான கணினி கல்வியை அனைத்து கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் கிடைக்கும் வகையில் அரசுப் பள்ளிகள் அனைத்தையும் கணினி பள்ளியாக மாற்ற வேண்டுகிறோம் .இதனால் வருடந்தோறும் அரசுப் பள்ளியின் மாணவர் சேர்க்கையும் உயரும் அரசுப் பள்ளியும் தரமும் உலகத்தரத்திற்கு ஈடாக உயரும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
60,000 கணினி ஆசிரியர் குடும்பங்களும் நம்பி வாழ்வது  சமச்சீர் கல்வியில் கலைஞர்  கொண்டுவந்த கணிணி அறிவியல் பாடத்தையும் மாண்புமிகு முதல்வர் ஆட்சியில் அமர்ந்த சில மாதங்களிலேயே அனைத்து துறைகளையும  புதிய புத்துணர்வுடன்  கொண்டு சென்று இருக்கின்றார்.

மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கணினி துறை சார்ந்தவர் என்பதால் இக்கோரிக்கையை மாண்புமிகு முதல்வர் பார்வைக்கு கொண்டு சென்று விரைவில் எங்களின் வாழ்வாதாரத்தை  காத்திட வேண்டுகிறோம். கணினி காலத்தின் கட்டாயம் என்பதாலும் கல்விக்கு செல்லும்போது அரசுப்பள்ளி மாணவர்கள் அனைவரும்  கணினி சார்ந்த கல்வியும் கற்றுக் கொண்டு செல்லவேண்டும்.


தமிழக அரசின் நிதி நிலையை கருத்தில் கொண்டு கணினி ஆசிரியர்களை பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் வாயிலாகவோ அல்லது SSA (PAB) வாயிலாக குறைந்தபட்ச ஊதியத்தில் பணியமர்த்தி அரசு பள்ளி மாணவர்கள் வாழ்விலும் கணினி ஆசிரியர்களாகிய எங்கள் வாழ்விலும் ஒளி விளக்கு ஏற்றி தரும்படி தாழ்மையுடன் இக்கோரிக்கையை சமர்ப்பிக்கின்றோம்.


திரு வெ.குமரேசன்,மாநிலப் பொதுச் செயலாளர் ,9626545446 ,தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் பதிவு எண்:655/2014

Related Articles

1 COMMENT

Comments are closed.

Latest Posts