தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் கடந்த ஆண்டு பல ஆண்டுகளாக கணினி பாடத்திட்டத்தை தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் அறிமுகப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்து வருகிறது.
குறிப்பாக, தனியார் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு கணினி கல்வி கிடைக்கிறது, அரசு பள்ளியில் கணினி கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது என்பதே அவர்களின் பிராதானமான கேள்வியாக உள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு மவுனமாகவே உள்ளது.
தற்போது, அவர்கள் அரசுப்பள்ளி மேன்மை பெற 2021 சட்டமன்றத் தேர்தல் அறிக்கைக்கு கணினி ஆசிரியர்களின் ஐந்து கோரிக்கையை முன்வைத்து அவற்றை நிறைவேற்ற வேண்டும் என வேண்டுகோள் வைக்கின்றனர்.
அதன் கோரிக்கை விவரம்:
அரசுப்பள்ளி கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் கல்வியில் மேன்மை
அடையவும் ,அரசுப்பள்ளியின் தரத்தை உயர்த்தவும், 60000 கணினி ஆசிரியர் குடும்பத்தின் கோரிக்கையை தேர்தல் அறிக்கைக்கு..
அ).அரசுப்பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்தை ஒன்றாம் வகுப்பிலிருந்தே ஆறாவது பாடமாக கொண்டுவர வேண்டும்.
(தமிழக அரசு தற்போது நடைமுறையில் இருக்கும் புதிய பாடதிட்டத்தில் அறிவியல் பாடத்தில் வெறும் மூன்று பக்கங்களை மட்டும் பெயருக்காக இணைத்துள்ளது.கணினி அறிவியல் பாடத்தை தனிப்பாடமாக வழங்கிட வேண்டுகிறோம் )
ஆ).சமச்சீர் கல்வியில் கொண்டுவந்த கணினி அறிவியல் பாடத்தை மீண்டும் நடைமுறைபடுத்த வேண்டும்”
*சமச்சீர் கல்வியில் 2011ம் ஆண்டு(6 முதல் 10ம் வகுப்பு வரை)கொண்டுவரப்பட்ட கணினி பாட புத்தகம் பல கோடி செலவில் அச்சிடப்பட்டு மாணவர்களுக்கு பயன்படாத வண்ணம் இன்று வரை முடக்கப்பட்டுள்ளதை நடைமுறை படுத்த வேண்டும்.
இ).கணினியும்,ஆய்வகமும் அனைத்து தமிழக அரசுப்பள்ளிகளிலும்:”
*அனைத்து பள்ளிகளிலும் 50கணினிகளுடன் கணினி ஆய்வகங்களை உருவாக்கிட வேண்டும்.(இலவச மடிக்கணினி கொடுப்பதை காட்டிலும் மாணவர்கள் பயன் பெறும் வகையில் கல்வியாக வழங்கிட வேண்டுகிறோம்)
ஈ).அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும் கணினி பாடப்பிரிவை கட்டாயமாக்க வேண்டும்”.
*கணினி பாடத்திற்கு மூன்று புத்தகங்கள் வழங்கிய அரசு 2011லிருந்து இன்று வரை தரம் உயர்த்தப்பட்ட அரசு மேல்நிலை பள்ளிகளில் கணினி பாடப்பிரிவு உருவாக்கித்தரவேண்டும்.
உ). பள்ளிக்கு ஓர் கணினி ஆசிரியரை நியமிக்க வேண்டும்”.
*கணினி இன்றியமையாத சூழலில் தொடக்க(1-5), நடுநிலை(6-8), உயர்நிலை(9-10), மேல்நிலைப்) பள்ளிகளுக்கு(11-12 குறைந்தது பட்சம் ஓர் கணினி ஆசிரியரையாவது நியமனம் செய்யவேண்டும்.
(NCERT விதியின் படி முதல் வகுப்பிலிருந்து கணினி பாத்தை தனிப்பாடமாக மற்ற மாநிலங்கள் போல தமிழகத்திலும் கொண்டுவர வேண்டும்.)
“கணினி அறிவியல் பாடத்தை நடைமுறைப்படுத்தினால் தமிழகத்தில் வாழும் கோடிக்காணக்கான கிராமப்புற அரசு பள்ளி ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறுவார்கள்”.
திரு வெ.குமரேசன்,
மாநிலப் பொதுச்செயலாளர்,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.
Join WhatsApp Group | WhatsApp Group |
To Follow Telegram : | Telegram Link |
To Follow Facebook | Facebook Link |
To Follow Twitter | Twitter Link |
To Follow Instagram | Instagram Link |
To Follow Youtube | Youtube Link |