தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் – #TNAU – Tamil Nadu Agricultural University, வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழுகம் கொரோனா தொற்று காலத்தில் ஏப்ரல் 2020 முதல் மாணவர்களுக்கு தடையற்ற கல்வியை இணையவழி மூலம் கற்பித்தலும், பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி துறையில் சிறந்த கல்வியை மாணவர் சமுதாயத்திற்கு நல்குவதிலும், சிறந்து விளங்குகிறது.
35 முதுநிலை மேற்படிப்பு 29 ஆராய்ச்சி படிப்புகளின் தேர்வுகளை இணையவழி மூலமாக வெற்றிகரமாக நடத்தி சாதனை படைத்துள்ளது. பல்கலைக்கழக ஆசிரியர்கள் கொரோனா பெருந்தொற்று காலத்திலும், பாட நெறிப்பணிகளையும், மாணவர்களி்ன் ஆராய்ச்சிகளையும் தொடர்ந்து நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசு வழிகாட்டுதலின்படி வரும் 12ம் தேதி முதல் இருந்து ஆராய்ச்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு சிறந்த வேலைவாய்ப்பினை பெறுவதற்கு ஏதுவாக முதுகலை கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன. அனைத்து வேளாண்மை உறுப்பு கல்லூரிகளும், மாணவர்களை பாதுகாப்பான விதிமுறைகளை அதாவது சமூக இடைவெளி கடைப்பிடித்தல், முககவசம் அணிதல், மற்றும் சோப்பு போட்டு கை கழுவுதல் ஆகியவற்றி பின்பற்றி செயல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.