தொழிற்கல்வி பாடத்தேர்வு – பள்ளி கல்வித்துறை விளக்கம்
To join in Telegram Group – CLICK HERE
பத்தாம் வகுப்பு பொதும தேர்வில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள தொழிற்கல்வி பாடத்தில் தேர்ச்சி பெறுவது அவசியம் இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது.
நேற்று அறிவிக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையில் புதிதாக தொழிற்கல்வி பாடம் சேர்க்கப்பட்டு, அதற்கு மே இருபத்தி ஒன்றாம் தேதி தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேசிய கல்விக் கொள்கையின் முக்கிய அம்சமான தொழிற்கல்வி பாடத்திற்கு தேர்வு என்பதை தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொண்டு, அதன் அடிப்படையில் அந்த தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Also Read This : இந்திய மாணவர்கள் மருத்துவ படிப்பு படிக்க வெளிநாடு செல்வது ஏன்?
இதனை மறுத்துள்ள பள்ளிக்கல்வித்துறை தேசிய கல்விக் கொள்கையில் உள்ள எந்த அம்சத்தையும் தமிழ்நாடு அரசு இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை என்று கூறியுள்ளது. மாநிலம் முழுவதும் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தொழிற்கல்வி பாடப் பயின்று வரும் நிலையில் அவர்களது திறனை மேம்படுத்தவே, பொதுத்தேர்வு அட்டவணையில் தொழிற்கல்வி பாடம் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source > Puthiyathalaimurai