மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு “பேச்சுப் போட்டி”, “கட்டுரை போட்டி” மற்றும் “ஒரு சொல் ஒரு நிமிட உடனடி பேச்சுப் போட்டி” ஆகிய போட்டிகள் A-28 முதல்தளம், டான்சி கட்டிடம், திரு.வி.க தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை-32ல் இயங்கி வரும் மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வருகின்ற 11.01.2021 அன்று காலை 10 மணிக்கு நடத்தப்பட உள்ளன.
பேச்சுப் போட்டி – கைப்பொருள் தன்னில் மெய்ப்பொருள் கல்வி, எனக்கு பிடித்த தலைவர், விரல்கள் பத்தும் மூலதனம் ஆகிய தலைப்புகளில் ஏதேனும் ஒன்றில் 5 நிமிடங்களுக்கு மிகாமலும் கட்டுரை போட்டி – இந்தியா கிராமங்களில் வாழ்கிறது, இன்றைய சேமிப்பு நாளைய பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மேலாண்மை ஆகிய தலைப்புகளில் ஏதேனும் ஒன்றில் 5 பக்கங்களுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். ஒரு சொல் ஒரு நிமிட உடனடி பேச்சுப் போட்டிக்கான தலைப்பு போட்டியின் போது வழங்கப்படும்.
இப்போட்டிகள் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் 17வயது முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் என இரு பிரிவுகளாக நடத்தப்பட உள்ளது. இப்போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.250/-, ரூ.500/- மற்றும் ரூ.750/- மதிப்பிலான புத்தகங்கள் மற்றும் சான்றிதழ் தேசிய இளைஞர் தினமான 12.01.2021 அன்று மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் இளைஞர் தின விழாவில் வழங்கப்பட உள்ளது.
எனவே இப்போட்டிகளில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இத்தகவலை, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, கிண்டி, சென்னை அவர்கள் தெரிவித்துள்ளார்.