SMC FORM PDF DOWNLOAD பள்ளி மேலாண்மை குழு சீரமைப்பு நிகழ்வு நாளை நடக்கிறது
SMC FORM PDF DOWNLOAD
பள்ளி மேலாண்மை குழு தொடர்பாக அனைத்து தகவல் படிக்க - இங்கே கிளக் செய்க
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலை மற்றும் உயர் நிலை பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மை குழு மறு சீரமைத்தல் நிகழ்வு நாளை 9ம் தேதி சனிக்கிழமை அன்று பள்ளி கல்வித்துறையால் நடத்தப்பட உள்ளது.
இதனை வெற்றிகரமாக நடத்துவதற்கு மாணவர்களின் பெற்றோர் பங்களிப்பு மிகவும் இன்றியமையாதது. எனவே, அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களும் தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கீழ்காணும் அறிவுரை வழங்கப்பட வேண்டும்.
- வரும் ஜூலை 6,7,8 ஆகிய மூன்று நாட்களில் காலை வணக்கம் கூட்டம் நடத்தப்பட வேண்டும்.
- அதேபோன்று, அனைத்து மாணவர்களுக்கும் மேற்படி பள்ளி மேலாண்மை குழு சீரமைப்பு 9.7.2022 அன்று நடைபெற உள்ள விவரத்தை தெரிவிக்க வேண்டும்.
- அச்சீரமைப்பு கூட்டத்திற்கு தங்கள் பெற்றோர்களை கலந்துகொள்ள செய்ய மாணவர்கள் மேற்காணும் மூன்று நாட்களிலும் உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும்.
- இதனை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்.
- இதுதொடர்பாக உரிய அவசர நடவடிக்கை எடுக்க அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களும் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
SMC RECONSTITUTION FORM PDF DOWNLOAD HERE