இந்திய மாணவர் சங்கத்தின் மாநில தலைவர் ஏ.டி.கண்ணன், மாநில செயலாளர் மாரியப்பன் கூட்டாக வெளியிட்ட அறிக்கை:
இந்தியாவின் தொன்மையான பல்கலைக்கழகமான சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் 120 க்கும் மேற்பட்ட கல்லூரிகள் இயங்கி வருகிறது. இக்கல்லூரிகளில் லட்சக்கணக்கான மாணவர்கள் உயர்கல்வி பயின்று வருகிறார்கள். முதல் தலைமுறையாக கல்வி பெரும் மாணவர்கள் முதல் பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட பல ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்த பல்லாயிரம் மாணவர்கள் இப்பல்கலைக்கழகத்தின் கீழ்பயின்று வருகின்றனர்.
அம்மாணவர்களின் கல்வி தேவையை பூர்த்தி செய்யும் ஒரே புகலிடமாக சென்னை பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இன்றைய நவீன தாரளமயக் கொள்கைகளால் அரசு சார் பணியிடங்கள் கிடைப்பது குதிரை கொம்பாகா மாறியுள்ளது. படிப்பை முடித்து கற்பித்தல் பிரிவில் ஏதேனும் பங்களிப்பு செலுத்தலாம் என விரும்பும் பல மாணவர்கள் தங்கள் முதுகலைப் பட்டம் முடித்ததும் எம்பில் பட்ட படிப்பை ஒரு வருடத்தில் முடித்து பல கல்லூரிகளில் கெளரவ விரிவுரையாளராக பணிபுரியும் வாய்ப்புள்ளது. குறைந்தபட்ச அந்த வாய்ப்பை பறிக்கும் விதமாகவே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்படுகிறது.
பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்ப சூழலால் பெரிதும் பாதிக்கப்படும் மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதால் அனைவராலும் பிஹெச்டி எனும் முனைவர் பட்டம் படித்திட இயலாது. எனவே பல மாணவர்கள் எம்பில் பட்டம் பெறுவதை விரும்புகிறார்கள். மேலும் முனைவர் பட்ட கல்வி படிப்பதற்கு முன்பு எம்பில் படிப்பது ஆய்வாளருக்கான பல அடிப்படையான அம்சங்களை கற்றுக்கொள்ள உதவுகிறது.
புதியக்கல்வி கொள்கையில் எம்ஃபில் போன்ற பல அடிப்படையான பட்டங்களை நீக்கியும் கல்வியை வணிகமயமாக்கி நேரடியாக போட்டித்தேர்வுகளையும், நுழைவுத்தேர்வுகளையும் நடத்தி பண கொள்ளையடிக்கவும், ஏழை, எளிய மாணவர்கள் ஆய்வாளர்களாக உருவாகுவதை தடுக்கும் விதமாகவே பல மோசமான அறிவிப்புகள் இக் கல்விக்கொள்கையில் அடங்கியுள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தின் அறிவிப்பு மோசமான தேசியக்கல்விக்கொள்கை திட்டத்தை நிறைவேற்றுவதாகவே உள்ளது.
தமிழக அரசும் தேசியக் கல்வி கொள்கையை எதிர்த்துள்ள நிலையில் சென்னை பல்கலைக்கழகம் மாணவர்களின் நலன் கருதி எம்பில் பட்ட படிப்பை தொடர்ந்து நடத்தவேண்டும். தற்போதைய அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். தமிழக அரசு இப்பிரச்சினையில் உடனே தலையிட வேண்டும் என இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலகுழு சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு, அவா்கள் தெரிவித்துள்ளனர்.
Join WhatsApp Group | WhatsApp Group |
To Follow Telegram : | Telegram Link |
To Follow Facebook | Facebook Link |
To Follow Twitter | Twitter Link |
To Follow Instagram | Instagram Link |
To Follow Youtube | Youtube Link |