அறிவியல் தொழில்நுட்ப திருவிழா 2022ல், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பங்கேற்க மண்டல அறிவியல் மையம், கோயம்புத்தூர் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மாவட்ட அறிவியல் அலுவலர், பழனிசுவாமி, வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன நிலையில், இந்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப துறையின் விஞ்ஞான் பிரசார் அமைப்பு தேசிய அறிவியல் தினமான பிப்ரவரி 28 சிறப்பாக கொண்டாடும் வகையில் நாட்டின் 75 முக்கிய நகரங்களை தேர்வு செய்து, பிப்ரவரி 22ம் தேதி முதல் 28 வரை, ஒரு வார காலத்திற்கு அறிவியல் தொழில்நுட்ப திருவிழா நடத்தப்படுகிறது. அதன்படி தமிழகத்தில் கோவை, சென்னை, திருச்சி, மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் அறிவியல் திருவிழா நடைபெற உள்ளது.
கோவையில் மண்டல அறிவியல் மையத்தில் அறிவியல் திருவிழாவின் துவக்க விழா பிப்ரவரி 22 காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளது. நாகராஜன், முதன்மை விஞ்ஞானி, வன மரபியல் மற்றும் மரம் வளர்ப்பு நிலையம், சுற்றுச்சுழல் மற்றும் காலநிலை மாற்ற துறை, இந்திய அரசு, கோயம்புத்தூர் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு இந்திய அறிவியல் தொழில்நுட்பத்தின் 75 ஆண்டுகால வரலாறு மற்றும் வளர்ச்சி, மற்றும் அறிவியல் அறிஞர்களின் அறிவுசார் கண்டுபிடிப்புகள் குறித்தான அறிவியல் கண்காட்சியினை திறந்து வைத்து சிறப்பு உரையாற்ற உள்ளார்.
பிப்ரவரி 23ம் தேதி அன்று, எஸ்என்எம்வி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூரில், சந்தோஷ்குமார், விஞ்ஞானி, ஐசிஎம்ஆர், சென்னை அவர்களின் அறிவியல் சார்ந்த சொற்பொழிவுகள் நடைபெற உள்ளது. மேலும், அன்று மாலை காந்திநகா் மைதானம் உடுமலைப்பேட்டையில், பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பார்வைக்கு வான்நோக்கி நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
Also Read: சூரியம்பாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளி – மாணவர்களை மகிழ்விக்கும் மழலையர் வகுப்பு
பிப்ரவரி 24 அன்று, ஜெய் ஸ்ரீராம் பொறியியல் கல்லூரி, திருப்பூரில், சுதாகரன் மூத்த விஞ்ஞானி சிஎஸ்ஐஆர் – சிஇசிஆர்எல், காரைக்குடி அவர்களின் அறிவியல் சார்ந்த சொற்பொழிவுகள், ஜிவிஜி கல்லூரி, உடுமலைபேட்டையில் நெல்லை முத்து, முன்னாள் விஞ்ஞானி ஐஎஸ்ஆர்ஒ, அவர்களின் அறிவியல் சார்ந்த சொற்பொழிவுகள் நடைபெற உள்ளது. கோவை ஆஸ்ட்ரோ கிளப், ஒத்தகால்மண்டபத்தில் பள்ளி மாணவர்களுக்கான, அறிவியல் சார்ந்த பல்வேறு போட்டிகளும், பயிற்சி பட்டறையும் நடைபெற உள்ளது. மேலும் அன்று மாலை ஜிவிஜி கல்லூரியில் பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பார்வைக்கு வான்நோக்கி நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
பிப்ரவரி 25ம் தேதி அன்று, மண்டல அறிவியல் மையம், கோயம்புத்தூர் அப்புவராஜ், தலைமை விஞ்ஞானி, டிஆர்டிஒ டெல்லி, அவர்களின் அறிவியல் சார்ந்த சொற்பொழிவுகள், சரஸ்வதி தியாகராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொள்ளாச்சியிவல் லட்சுமி நரசிம்மன், முதன்மை விஞ்ஞானி, சிஎஸ்ஐஆர், சிஇசிஆர்ஐ, காரைக்குடி அவர்களின் அறிவியல் சார்ந்த சொற்பொழிவு, கமலம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, உடுமலை பேட்டையில் சிவசாமி, தலைமை விஞ்ஞானி சிஎஸ்ஐஆர் – சிஎல்ஆர்எல் சென்னை, அறிவியல் சார்ந்த சொற்பொழிவுகள் நடைபெறுகிறது. ஸ்ரீ ஜிவிஜி விஷாலட்சுமி பெண்கள் கல்லூரி, உடுமலை பேட்டையில் மகேந்திரன், மூத்த விஞ்ஞானி, சாய்கான், கோயம்புத்தூர் அறிவியல் சாா்ந்த சொற்பொழிவுகள் நடைபெற உள்ளது.
மேலும் மண்டல அறிவியல் மையம் கோயம்புத்தூரில் கல்லூரி மாணவர்களுக்கான அறிவியல் சார்ந்த போட்டிகளும், கோவை ஆஸ்ட்ரோ கிளப், ஒத்தகால்மண்டபத்தில் பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் சார்ந்த பல்வேறு போட்டிகளும் நடைபெற உள்ளது. அன்று மாலை, செல்லம் குடியிருப்பு மைதானம், உடுமலைபேட்டையில் பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பார்வைக்கு வான்நோக்கி நிகழ்ச்சி நடைபெறுகிறது.
பிப்ரவரி 25 அன்று மண்டல அறிவியல் மையம் கோயம்புத்தூரில், பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் சார்ந்த பல்வேறு போட்டிகளும், புத்தக கண்காட்சி மற்றும் அறிவியல் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. அன்று மாலை பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பார்வைக்கு வான்நோக்கி நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
பிப்ரவரி 27ம் தேதி ஜான்சன் தொழில்நுட்ப கல்வி நிறுவனம், கோயம்புத்தூரில், லோகமாதேவி, தாவரவியல் துறை, என்ஜிஎம் கல்லூரி, பொள்ளாச்சி மற்றும் கீதா, முதன்மை கல்வி அலுவலர், கோயம்புத்தூர் அவர்களின் அறிவியல் சார்ந்த சொற்பொழிவு நடைபெறுகிறது.
மேற்கண்ட தினங்களில் நடைபெறும் அறிவியல் சார்ந்த சொற்பொழிவுகள் அனைத்து இஸ்ரோ, ஐசிஎம்ஆர், சிஎஸ்ஐஆர் – சிஎல்ஆர்ஐ மற்றும் சாய்கான் போன்ற நிறுவனங்களின் விஞ்ஞானிகளால் வழங்கப்படுகிறது.
பிப்ரவாி 28ம் தேதி அன்று, நடைபெறும் நிறைவு நாள் நிகழ்ச்சியில், மீனாட்சி கணேசன், விஞ்ஞானி, இந்திய தர நிர்ணய அமையகம், நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் உணவு வழங்கல் அமைச்சரகம், இந்திய அரசு, மற்றும் கீதா முதன்மை கல்வி அலுவலர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு போட்டிகளில் பரிசு பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பிக்க உள்ளார்.
மேற்கண்ட நிகழ்ச்சிகளை, பழனிசுவாமி, மாவட்ட அறிவியல் அலுவலர், மண்டல அறிவியல் மையம், ரமேஷ் கோவை – வானவியல் மன்றம், கண்ணபிரான், உடுமலை கலிலியோ அறிவியல் மன்றம், பேராசிரியர் லெனின்பாரதி, எஸ்என்எம்வி கல்லூரி, அறிவியல் மன்றம், கோயம்புத்தூர் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆகியோர் ஒருங்கிணைத்து ஒரு வார கால நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளார்.
இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.
Join WhatsApp Group | WhatsApp Group |
To Follow Telegram : | Telegram Link |
To Follow Facebook | Facebook Link |
To Follow Twitter | Twitter Link |
To Follow Instagram | Instagram Link |
To Follow Youtube | Youtube Link |