29.4 C
Tamil Nadu
Friday, August 12, 2022
அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

பணிவரன்முறை குறித்து இயக்குனரின் முக்கிய அறிவிப்பு

தொடக்க கல்வி இயக்குனர் அவர்கள் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியதாவது: 2009-10ம் ஆண்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் கணிதம், அறிவியல் மற்றும் ஆங்கிலம் பாட பட்டதாரி ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட்டு பார்வை-3ல் காண் செயல்முறைகள் மூலம் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது.

2008-09ம் ஆண்டில் ஆசிரியர் தோ்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டு நியமனம் செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு தனியாக பணிவரன்முறை செய்ய வேண்டிய அவசியமில்லை என ஏற்கனவே செயல்முறைகளின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, 2009-10 ஆண்டில் ஆசிரியர் தோ்வு வாரியம் மூலம் முறையாக நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு தனியே பணிவரன்முறை செய்ய வேண்டியதில்லை. மேலும், தற்காலிக அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு வழங்கப்படும் நியமனங்களுக்கு நீதிமன்ற வழக்குகள் மற்றும் வேறு சில நிர்வாக காரணங்களுக்காக வழங்கப்படும் நியமனங்களுக்கு தனியே பணிவரன்முறை செய்யப்பட வேண்டும்.

இந்த செயல்முறைகளின் நகல்கள் சம்மந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும், வட்டார கல்வி அலுவலர்களுக்கும், அனுப்பிவைப்பதோடு மட்டுமின்றி, உரிய பதிவுகளை மேற்கொள்ள ஏதுவாக தொடர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுகொள்ளப்படுகிறார்கள். இச்செயல்முறையினை, பெற்றமைக்கு ஒப்புதல் கொண்டமைக்கு அனுப்பிவைக்கும்படி கேட்டுகொள்ளப்படுகிறது, இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Join WhatsApp Group WhatsApp Group
To Follow Telegram : Telegram Link
To Follow Facebook Facebook Link
To Follow Twitter Twitter Link
To Follow Instagram Instagram Link
To Follow Youtube Youtube Link

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Posts