அரசு பள்ளி ஆசிரியர்களை கண்காணிக்க மாவட்ட அளவில் கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும் என்று பள்ளி கல்வித்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை செவ்வாயன்று உத்தரவிட்டுள்ளது.
சென்டர்களில் டியூஷன் எடுப்பது, பகுதி நேரமாக வருவாய் ஈட்டும் நோக்கில் யூடூப் சானல்கள் நடத்துவது ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
வீடுகளில் டியூசன் எடுக்கும் ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லப்பட்டிருக்கும் நிலையில், இதற்காக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாவட்டந்தோறும் கண்காணிப்பு குழுவை ஏற்படுத்தவும் உயர்நீதிமன்ற கிளை பள்ளி கல்வித்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
தஞ்சையை சேர்ந்த ராதா என்பவர் தனது இடமாறுதல் கோரிக்கை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு மனுவினை தொடா்ந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதி எஸ்.எம். சுப்பரமணியம் இந்த உத்தரவையும், கருத்துகளையும் பிறப்பித்திருந்தார்.
அது மட்டுமின்றி, அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்தவும் அவர்களுக்கான ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கான ஊதியத்தை வழங்கவும் அரசு சந்தேகத்திற்கிடமின்றி போதுமான அளவு தொகையை ஒதுக்குகிறது. ஆனால், ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பத்திலிருந்து வரும் மாணவர்களுக்கு அந்த அளவிற்கான தரமான கல்வியை ஆசிரியர்கள் வழங்குகிறார்களா என்பதே கேள்விக்குறியாக உள்ளது என்பது போன்ற கருத்துக்களையும் நீதிபதி தெரிவித்திருந்தார்.
இதன் தொடர்ச்சியாக பள்ளிக்கல்வித்துறையில் முதன்மை செயலர், மாவட்டம் தோறும் சிறப்புக்குழு ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்று அரசு பள்ளி ஆசிரியர்கள் தனியாக தொழில் செய்வது பகுதி நேர வேலைகளை செய்வது, டியூஷன் சென்டர் நடத்துவது, வீடுகளில் டியூசன் எடுப்பது போன்றவை தொடர்பான தகவல்கள் புகார்கள் ஆவணங்களை சேகரித்து தொடர்புடைய ஆசிரியர்கள் மீது துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
Join WhatsApp Group | WhatsApp Group |
To Follow Telegram : | Telegram Link |
To Follow Facebook | Facebook Link |
To Follow Twitter | Twitter Link |
To Follow Instagram | Instagram Link |
To Follow Youtube | Youtube Link |