பள்ளி கல்வித்துறையின் கீழ் செயல்படும் அலுவலக பணியாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதில் இணை இயக்குனர் (பணியாளர் தொகுதி) சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது, அலுவலக செயல்முறை கடிதத்தின் மீது அனைத்து முதன்மை கல்வி அலுவலரின் கவனம் ஈர்க்கலாகிறது. 10.03.2020 முன்னர் கணக்கு தேர்வு பாகம் 1-ல் தேர்ச்சி பெற்று முன் ஊதிய உயர்வு வழங்கப்படாத தகுதிகாண் பருவம் முடிக்கப்படாத இளநிலை உதவியாளர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை –- 3 பணியாளர்களின் விவரங்களை சில முதன்மை கல்வி அலுவலர்கள் அனுப்பாமல் இருப்பது அறிய வருகிறது. அவ்வாறு ஏதும் விடுபட்டிருப்பின் இவ்வலுவலக 23.10.2020 நாளிட்ட கடிதத்துடன் அனுப்பப்பட்ட படிவத்தில் (எக்ஸல் பார்மட்) பூர்த்தி செய்து 17.03.2021க்குள் இணை இயக்குனர் (பணியாளர் தொகுதி) அவர்களின் பெயரிட்ட முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.