You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

School Reopening in Tamil Nadu - பள்ளிகள் திறப்பு, ஆசிரியர்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியவை...

school reopening

பள்ளிகள் திறப்பு - தலைமையாசிரியர்களுக்கான சுற்றறிக்கை - பள்ளிக்கல்வித்துறை வெளியீடு 
பள்ளிக் கல்வித் துறை பள்ளிக் கல்விமுதன்மைக் செயலாளர் மற்றும் ஆணையர் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற கூட்டம் : 

01.09.2021 முதல் அனைத்துவகைப் பள்ளியைதிறப்பது தொடர்பாக அனைத்துவகைப் பள்ளி தலைமையாசிரியர்கள் / முதல்வர்களுக்கு சுற்றறிக்கை

* வாரத்தில் 6 நாட்கள் பள்ளி வேலைநாட்கள் 
* 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு தினமும் வகுப்புகள் நடைபெறும்.
* ஒவ்வொரு வகுப்பறையிலும் 20 மாணாக்கர்கள் மட்டுமேசமூக இடைவெளி பின்பற்றி அமரவைக்க வேண்டும்.
* போதிய இடவசதிஇல்லை எனில் , 9 ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப் பெறவேண்டும்.
* உயர்நிலைப்பள்ளிகளில் 9 - ம் வகுப்பு மற்றும் 10 - ம் வகுப்பு தினமும் செயல்படவேண்டும் , போதிய இடவசதி இல்லாத பள்ளிகளில் மட்டும் 9 - ம் வகுப்பு சுழட்சி முறையில் செயல்படவேண்டும் 
* தனியார் பள்ளிகளில் மட்டும் , பள்ளிக்கு வருகை புரிய இயலாத மாணவர்களுக்கு தொடர்ந்து இணையவழி ( Online Class ) வகுப்புகள் நடத்தப்படவேண்டும்.
* மாணவர்கள் கட்டாயமாக முகக்கவசம் ( Mask ) அணியவேண்டும்.
* மாணவர்கள் வகுப்பறைக்கு செல்லும் முன் கட்டாயமாக கிருமிநாசினி ( Sanitizer ) சோப்புகளைக் கொண்டு கைகளை சுத்தம் செய்யவேண்டும்.
* பள்ளிவளாகத்தில் அனைவரும் SOP தவறாது பின்பற்ற வேண்டும்.
* அனைத்து ஆசிரியரல்லாத பணியாளர்கள் கட்டாயமாக கோவிட் -19 தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.
* பள்ளிக்கு வருகை புரிவதிலிருந்து விலக்கு பெற்ற ஆசிரியர்கள் 01.09.2021 முதல் பள்ளிக்கு தவறாது வருகைபுரிய வேண்டும்.
* கோவிட் -19 தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் கட்டாயமாக சார்ந்த பள்ளித் தலைமையாசிரியரிடம் சமர்ப்பிக்கவேண்டும்.
* கோவிட் -19 கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுவர்கள் 90 நாட்கள் கழித்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.
* கோவிட் -19 தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத ஆசிரியர்கள் , அதற்கான விலக்குகோரும் சான்றினை மாவட்டசுகாதாரத் துறை இணை இயக்குநரிடம் பெற்றுசமர்ப்பிக்க வேண்டும்.
 * 100 நாள்வேலைவாய்ப்புத் திட்டப் பணியாளர்களைக் கொண்டு பள்ளிவளாகம் மற்றும் வகுப்பறைகள் சுத்தப்படுத்த வேண்டும்.
* EMIS இணையதளத்தில் ஆசிரியர்களின் வருகைப் பதிவு கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.
* மருத்துவ உதவிமைய எண் மற்றும் அருகிலுள்ள ஆரம்பசுகாதார நிலைய அலைபேசி எண் ( Help Line ) உள்ளிட்டவிவரங்கள் தகவல்பலகையில் மாணவர்கள் / ஆசிரியர்கள் / அலுவலகப் பணியாளர்கள் அனைவரும் தெளிவாக பார்வையிடும் வகையில் இருத்தல் வேண்டும் . 
* EMIS விவரங்களை நாள்தோறும் உடனுக்குடன் புதுப்பித்தல் வேண்டும்.
* மாணவர்களுக்கு நாள்தோறும் உடல் வெப்பநிலை கண்காணித்து உரிய பதிவேட்டில் பராமரித்தல் வேண்டும்.
* EMIS இணையதளத்தில் தடுப்பூசி செலுத்தியவர்களின் விவரங்கள் தவறாது பதிவேற்றம் செய்திருத்தல் வேண்டும்.


* சமூக இடைவெளியை தவறாது கடைபிக்க வேண்டும்.
* P.E.T. , N.S.S. , N.C.C. , தொடர்பான செயல்பாடுகள் பள்ளிவளாகத்தில் செயல்படுதல் கூடாது.
* மாணவர்களுக்கான சமூக இடைவெளியினை கடைபிடித்து வகுப்பறையில் அமரவைக்க வேண்டும். 
* தேவைப்படின் RBSK தொடர்புகொண்டு சிறப்பு முகாம் நடத்தி மாணவர்களின் உடல்நிலை | ஆரோக்கியத்தை பரிசோதிக்க வேண்டும்.
* மாணவர்களுக்கு தொற்று ஏற்படாதவண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். 
* மாணவர்கள் தங்கும் விடுதிகளில் சமூக இடைவெளி , SOP நடைமுறைகளை பின்பற்றப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.
* மாணவர்களுக்கான இலவச பேருந்துபயண அட்டை பெற்று வழங்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.
* சத்துமாத்திரைகள் மாணவர்களுக்கு வழங்கப்படும் . 
* 45 நாட்களுக்கு மாணவர்களுக்கான Bridge Course கற்றல் கற்பித்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
* கொரோனாபாதிப்புஏற்பட்டநாளிலிருந்து 90 நாட்களுக்குப் பிறகேதடுப்பூசிசெலுத்துவதை உறுதிசெய்யவேண்டும்.
* அவ்வபோது பள்ளிகளை ஆய்வு செய்ய உயர் அலுவலர்கள்வருகைதரஉள்ளதால் , மேற்காணும் அனைத்துதொடர்நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அனைத்துவகைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் / முதல்வர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.