விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் ஒன்றியத்தில் அரசுப்பள்ளி ஆசிரியராக பணிபுரியும் அப்துரஷீத். இவரது மகன் A.ரியாஸ் முகமது திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகிறார்.
இந்த ஊரடங்கு காலத்தில் பயனுள்ள வகையில் தன்னால் இயன்ற அளவு low-cost material மூலம் சில அறிவியல் கண்டுபிடிப்புகளை தனக்கென்று உருவாக்கி அதனை அறிவியல் அரட்டை என்னும் YouTube channel ல் பதிவேற்றம் செய்து வருகிறார் மாணவன் A.ரியாஸ் முகமது.
இந்த நிகழ்வுகளை மாவட்ட ஆட்சியர் திரு.சந்தீப் நந்தூரி அவர்களும் கண்டுவந்துள்ளார். பின்னர் ஆட்சியர் அவர்களே தொலைபேசி வாயிலாக ஆட்சியர் அலுவலகத்திற்கு அம் மாணவன் A.ரியாஸ் முகமதுவை வரவழைத்து மாணவனின் கண்டுபிடிப்புகளுக்கு செயல்வடிவம் கொடுக்க வைத்தும், தயாரித்த விதம் மற்றும் இப்பொருள்களால் சமுதாயத்திற்கு ஏற்படும் பயன்கள் ஆகியவற்றை கேட்டு கலந்துரையாடியுள்ளார்.
பின்னர், அந்த மாணவன் வழங்கிய பதிலைக் கண்டு வியந்து பின் பாராட்டி வாழ்த்தி சிறப்பித்தார் மாவட்ட ஆட்சியர். மேலும் மாவட்ட கல்வி அலுவலர் பங்கேற்று சிறப்பித்தார்.
தற்போதைய தேர்தல் பணி நேரத்தில் மாணவனுக்காக நேரம் ஒதுக்கி மாணவனின் உற்சாகத்தையும் உத்வேகத்தையும் போற்றும் விதமாக வாழ்த்துக்களையும் வழங்கி சிறப்பித்தமைக்கு மாவட்ட ஆட்சியர் திரு.சந்தீப் நந்தூரி IAS, திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அருட்செல்வம் அவர்களுக்கும் மாணவன் நன்றி தெரிவித்தார்.
இதுகுறித்து, மாணவரின் தந்தையும், ஆசிரியருமான அப்துரஷீத் கூறும்போது, எனது மகன் ஆட்சியரிடம் பாராட்டுதலையும் வெகுமதியுடன் வாழ்த்துக்களையும் பெற்றது, மிக்க மகிழ்ச்சியாக உள்ளது, என்றார்.
கூடுதல் சிறப்பம்சம், அரசுப்பள்ளி ஆசிரியராக இருந்துகொண்டு பிள்ளைகளை அரசுப்பள்ளியில் படிக்கவைத்ததற்காக மாவட்ட ஆட்சியா் அவரது தந்தையையும் பாராட்டினார்.
TN Education Info – குழு சார்பில் பெற்றோர், மாணவனுக்கு பாராட்டுகள்
Join WhatsApp Group | WhatsApp Group |
To Follow Telegram : | Telegram Link |
To Follow Facebook | Facebook Link |
To Follow Twitter | Twitter Link |
To Follow Instagram | Instagram Link |
To Follow Youtube | Youtube Link |
Super da thambi