25.5 C
Tamil Nadu
Wednesday, July 6, 2022

பட்டதாரி, இன்ஜினியர்களை நியமிப்பதால் பணிகள் பாதிப்பு – ஐகோா்ட் கிளை கருத்து

அரசு பணி நியமனம்:

கூடுதல் கல்வி தகுதி பெற்றவர்களுக்கு அரசு வேலை வழங்கப்படுவதாக தொடர்பான வழக்கை விசாரித்த ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி எஸ்.எம் சுப்ரமணியன் பிறப்பித்த உத்தரவு: கடைநிலை பணிகளுக்கு அதிக தகுதியுடையோரை நியமிப்பதால் அரசு பொதுபணி பெரிதும் பாதிக்கிறது. இளங்கலை மற்றும் முதுகலை பட்டதாரிகள், பொறியியல் பட்டதாரிகள், அலுவலக உதவியாளர், துப்பரவாளர், தூய்மை பணியாளர் போன்ற பணியாளர் போன்ற பணிகளில் சேர்கின்றனர். இவர்களால் அந்த பணியை சரிவர கையாள முடியில்லை. ஆனால், வாி செலுத்தும் அளவுக்கு கவுரவமான சம்பளத்தை பெறுகின்றனர்.

சமீபத்தில் ஐகோா்ட் நீதிபதிகளின் இல்லங்களில் பணியாற்ற உதவியாளர்கள் நியமிக்கப்பட்டனர். அதிக கல்விதகுதியுடைய இவர்களால் நிர்வாகம் மிகுந்த சிரமத்தை சந்திக்கிறது. கடைநிலை பணிகளுக்கு கூடுதல் தகுதி பெற்றவர்கள் நியமிப்பதை தவிர்த்து, அந்த பணியின் தகுதிக்கு ஏற்ப உரிய கல்வி தகுதியை பெற்றவர்கள் மட்டும் நியமிக்கப்படுகிறார்கள் என்பதை அரசு உறுதிப்படுத்திட வேண்டும், இவ்வாறு அவர் உத்தரவிட்டார்.  

பள்ளி கல்வி அமைச்சர் பேட்டி:

பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கோபியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: அரசு பள்ளிகளில் அரையாண்டு தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் விரும்பினால் ஆன்லைன் மூலமாக அரையாண்டு தேர்வு நடத்துவதில் ஆட்சேபனை இல்லை. மாணவர் சேர்க்கைக்கு பிறகு, தேவையான ஆசிரியர்களை தவிர கூடுதலாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு மாற்றப்பட உள்ளனா்.
“இன்றைய சூழ்நிலையில் 50 சதவீதம் பாடதிட்டம் குறைக்கப்பட்டுள்ளது. அதில் இருந்துதான் தேர்வுக்கு கேள்விக்கு கேட்கப்படும். அதற்கான அட்டவணை 2 நாட்களில் வெளியிடப்படும்,” என்று கூறினார்.

வேலை வாய்ப்பு முகாம்:

தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த டிப்ளமோ மற்றும் பொறியியல் பட்டம் முடித்த வேலையில்லா பட்டதாரிகளுக்கு சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் வரும் 15ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் நடைபெற உள்ள இந்த முகாமில் சென்னை, காஞ்சிபுரம், கோவை உள்ளிட்ட தொழில் நகரங்களில் இருந்து பிரபலமான எம்என்சி நிறுவனங்கள் கலந்துகொண்டு நேர்காணல் முறையில் தங்கள் காலிபணியிடங்களை நிரப்ப உள்ளனர். மேலும் விவரங்களுக்கு 04362-237037 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் என கலெக்டர் கோவிந்தராவ் தெரிவித்துள்ளார்.

அரசு பள்ளி கட்டிடத்திற்கு பூமி பூஜை:

பென்னாகரம் ஏரியூர் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் ராமாகொண்டஅள்ளி அரசு உயர்நிலை பள்ளிக்கு ரூ.2.80 கோடி மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைகள், ஆய்வகம், குடிநீர் வசதி சுற்றுசுவர் கட்டும்பணியை உயர் கல்வித்துறை கே.பி அன்பழகன் நேற்று துவக்கிவைத்தார்.

ஆசிரியர்களுக்கு ஸ்மார்ட் கார்டு:

அனைத்து வகையான அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் பள்ளி கல்வி அலுவலகங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய மேம்படுத்தப்பட்ட திறன் அட்டைகள் (Smart Card) விரைவில் வழங்கப்பட உள்ளது.

கவிதை போட்டியில் மாணவி வெற்றி:

கோவை பாரதியார் பல்கலைக்கழக தமிழ்த்துறை சார்பில், பாரதியார் பிறந்தநாள் விழா முன்னிட்டு பல்கலைக்கழக துறைகள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டன.  

வெற்றி பெற்றவர்களுக்கு பல்கலைக்கழக கலையரங்கில் நடைபெற்ற, பாரதியார் பிறந்தநாள் விழாவில் இளம் பாரதி விருதுகள் வழங்கப்பட்டன. இதன்படி, ‘புவியனைத்தும் போற்றி’ என்ற தலைப்பில் கவிதை வாசித்து வெற்றி பெற்ற, கோவை அரசு கலைக் கல்லூரி தமிழ்த்துறை முதுகலை முதலாமாண்டு மாணவி கவிதாவுக்கு, பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் காளிராஜ், ‘இளம் பாரதி விருது’ வழங்கினார். விருது பெற்ற மாணவிக்கு, கல்லூரி முதல்வர் சித்ரா மற்றும் பேராசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர். 

Join WhatsApp Group WhatsApp Group
To Follow Telegram : Telegram Link
To Follow Facebook Facebook Link
To Follow Twitter Twitter Link
To Follow Instagram Instagram Link
To Follow Youtube Youtube Link

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Posts