வேலை வாய்ப்பு முகாம் மதுரையில் 8ம் தேதி நடக்கிறது| tnprivatejobs.tn.gov.in
வேலை வாய்ப்பு முகாம்
மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறையில் வேலை வாய்ப்பு பெறுவதற்கான முகாம் வரும் 8ம் தேதி நடக்கிறது. இந்த முகாமில் தனியார் முன்னணி நிறுவனங்கள் கலந்துகொண்டு கல்வி தகுதிக்கேற்ப வேலை நாடும் இளைஞர்களை தேர்வு செய்ய உள்ளன. முகாமில் 10ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு வரை முடித்த வேலைநாடுநர்கள், ஐடிஐட, சுருக்கெழுத்து தட்டச்சர் மற்றும் டிப்ளமோ நர்சிங், பிசியோதெரபி படித்த வேலைநாடுநர்கள் கலந்துகொண்டு தங்களது தகுதிக்கேற்ப தனியார் துறை நிறுவனங்களில் பணி நியமனம் பெறலாம்.
READ ALSO THIS: போலி மதிப்பெண் பட்டியல் மூலம் அரசு வேலையில் சேர்ந்த 200 பேர்
tnprivatejobs.tn.gov.in
வேலைநாடுநர்கள் மற்றும் வேலை வழங்கும் நிறுவனங்கள்
http://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது சுயவிவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். வேலை நாடுநர்கள் தங்களது கல்விச்சான்றிதழ், குடும்ப அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் புகைப்படத்துடன் வரும் 8ம் தேதி காலை மணிக்கு மதுரை கே.புதூாில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வர வேண்டும்.
இந்த முகாமில் மூலம் தனியார் துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதினால் ேவலை வாய்ப்பு அலுவலக பதிவு எவ்விதத்திலும் பாதிக்காது என மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய துணை இயக்குனர் சண்முக சுந்தர் தெரிவித்தார்.