15 முதல் 18 வயதுடைய சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்று பிரதமர் மோடி தனது உரையில் தெரிவித்துள்ளாார்.
25-12-2021 அன்று, பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சரியாக 9.45 மணியளவில் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களுடன் தனது உரையை தொடங்கினார்.
இந்த உரையில் அவர் இரண்டு முக்கியமான முடிவுகளை நாட்டு மக்களிடம் தெரிவித்தார்.
முன்னதாக ஒமைக்ரைன் பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது என்றும், இந்தியாவிலும் இந்த வைரஸ் பரவியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
நாட்டு மக்கள் பதட்டம் அடைய வேண்டாம் என்றும், சிகிச்சைக்கான படுக்கை வசதிகள் தயராக உள்ளது என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
அவரது முக்கியமான உரைகளில் ஒன்று
குறிப்பாக, 15 முதல் 18 வயது உடையவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்று அவர் தொிவித்துள்ளார். இதன் பணிகள் ஜனவரி 3ம் தேதி முதல் தொடங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் உரையில், இதனால் 15 முதல் 18 வயதுடைய குழந்தைகள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவார்கள் என்றும், பெற்றோர் கவலை தீரும் என்று அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் உரையில் கூறியுள்ளார்.
அதன்படி, பள்ளி கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தடுப்பூசி போடுவதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி15 வயது முதல் 18 வயது சிறார்கள் என்பதால், குறிப்பாக 10ம் வகுப்பு மாணவர்கள், 11ம் வகுப்பு மாணவர்கள், 12ம் வகுப்பு மாணவர்கள் மற்றும் தற்போது கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் மாணவர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.
மேலும் தடுப்பூசிகள் அந்த பள்ளகளிலேயே செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது வரை, இந்தியாவில் 18 வயதிற்கு மேற்பட்ட நபர்களுக்கு முதலாவது, இரண்டாவது என தடுப்பூசி செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Join WhatsApp Group | WhatsApp Group |
To Follow Telegram : | Telegram Link |
To Follow Facebook | Facebook Link |
To Follow Twitter | Twitter Link |
To Follow Instagram | Instagram Link |
To Follow Youtube | Youtube Link |
[…] […]