தமிழக அரசின் கீழ் பணிபுரியும் அரசு ஊழியர்கள்/ ஆசிரியர்கள் தங்கள் கல்வித்திறனை மேம்படுத்தவும், பாடம் சார்ந்து அல்லது துறை சார்ந்து அறிவினை புதுப்பித்துகொள்ளவும், அதனை மாணவர்களிடம் கொண்டு சென்று அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தவும் உயர்கல்வி பயின்று வருகின்றனர்.
சமீபத்தில், பள்ளி கல்வித்துறையின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்களில் ஏறக்குறைய 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பள்ளி கல்வித்துறையிடம் உயர்கல்வி பயில எவ்வித முன் அனுமதியும் பெறாமல் உயர்கல்வி பயின்றதாக சமூக வலைதளங்கள், ஊடகங்கள், நாளிதழ்கள் வாயிலாக செய்திகள் வெளியாகின. பொதுவெளியில் ஆசிரியர்கள் ஏதோ ஒரு குற்றத்தை நிகழ்த்தியதுபோல் பிம்பம் உருவானதை உணர முடிந்தது.
முதலாவதாக உயர்கல்வி பயில முன் அனுமதி கோரி விண்ணப்பிக்கும் முழுமையான நடைமுறையை ஆசிரியர்கள், அலுவலர்கள் அறிந்துள்ளனரா என்பதே இங்கு சந்தேகமாகத்தான் உள்ளது.
அதனால்தான், உயர்கல்வி விண்ணப்பிக்கும்போது, பல இடர்பாடுகளை ஆசிரியர் சமுதாயத்தினர் சந்திக்க நேரிடுகிறது. சில சமயங்களில், உயர் கல்வி பயில வேண்டுமா என்ற வினாவும் அவர்கள் மனதில் எழுகிறது.
இந்த சந்தேகங்கள் மற்றும் பல்வேறு குழப்பங்களுக்கு இந்த அரசாணை எண் நிலை 200 ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மத்தியில் குறைந்தபட்சம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் என்று நம்புகிறோம்.
தமிழ்நாடு அரசு பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை அரசாணை நிலை எண் 200 – நாள் 19.11.1996 (உயர் கல்விக்கு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் முன் அனுமதி ஆணை பெறுவதற்கான கால அவகாசம்) வெளியிடப்பட்டது.
மேற்கண்ட அரசாணையின் படி, ஒரு ஆசிரியரோ அல்லது அரசு ஊழியரோ துறை சார்ந்த உயர் அலுவலர்களிடம் உயர் கல்வி பயில முறையான முன் அனுமதி கோரி விண்ணப்பிக்கும்போது பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து தெளிவுரை வழங்கியுள்ளது.
அதாவது உயர்கல்வி பயில அனுமதிகோரி விண்ணப்பித்த விண்ணப்பதாரருக்கு 15 நாட்களுக்குள் உரிய துறை முன் அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும், ஒருவேளை உயர் கல்வி பயில விண்ணப்பித்த விண்ணப்பதாரரின் முன் அனுமதி கடிதத்தில் ஏதாவது குறைபாடுகள் இருந்தாலும் அல்லது மேலும் கூடுதல் விபரங்கள் தேவைப்பட்டாலும், மேற்கண்ட அசல் விண்ணப்பத்தினை /மனுவினை உாிய விதிகளுக்கு உட்பட்டு மூன்று தினங்களுக்குள் அவர்களிடம் அசல் விண்ணப்பம் /மனு திருப்பட வேண்டும் என்பது அலுவலக விதியாகும். ஆசிரியரின் விண்ணப்பம் /மனு குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு மீண்டும் அலுவலகத்தில் திரும்ப சமர்ப்பிக்கப்படும் நாளிலிருந்து மீண்டும் 15 நாட்கள் முடிவதற்குள் உரிய உயர் கல்வி முன் அனுமதி ஆணை வழங்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கண்ட அரசாணையின்படி 15 நாட்கள் கால அவகாசத்தில் உயர் கல்வி பயில அனுமதி வழங்கப்படாத பட்சத்தில், உயர்கல்வி பயில அனுமதி கோரி விண்ணப்பித்தவர்களுக்கு உயர் கல்வி அனுமதி பயில ஆணை வழங்கப்பட்டதாக (Deemed Permission)கருதிகொள்ள வேண்டும் என்பதாக தெளிவுப்படுத்தியுள்ளது.
மேலும், உயர்கல்வி பயில அனுமதி கோரி விண்ணப்பித்தவர்களில் தகுதியுள்ளவர் / தகுதியற்றவர் முறையாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், தவறும்பட்சத்தில் சார்ந்த அலுவலரே பொறுப்பாவார் என்பத அரசாணை குறிப்பிட்டு கூறியுள்ளது.
இனிவரும் காலங்களில் ஆசிரியர்கள்/ அரசு ஊழியர்கள் உயர்கல்வி பயில விண்ணப்பிக்கும்போது, இந்த மூன்று முக்கியமான விஷயங்களை கவனத்தில் வைத்துகொண்டால், பிரச்னைகளை தவிர்க்கலாம்.
அடுத்தடுத்த கட்டுரையில், உயர் கல்வி பயில விண்ணப்பிக்கும் நடைமுறை, பிரச்னை தீர்ப்பு குறித்து அரசாணை மேற்கோள் காட்டி தகவல் தொகுப்பாக வெளியிடப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக கேள்விகள் அல்லது சந்தேகம் இருந்தால் கீழ் உள்ள கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்தவும். பிடித்திருந்தால் பகிரவும், தவறுகள் அல்லது முரண்பாடுகள் இருக்கும்பட்சத்தில் கமெண்ட் பாக்ஸில் சுட்டிகாட்டவும்.
Personnel & Administrative Reforms department GO 200,
அரசாணை பதிவிறக்கம் செய்ய
Join WhatsApp Group | WhatsApp Group |
To Follow Telegram : | Telegram Link |
To Follow Facebook | Facebook Link |
To Follow Twitter | Twitter Link |
To Follow Instagram | Instagram Link |
To Follow Youtube | Youtube Link |
ஊதியம் இல்லா விடுப்பில் 2 வருட உயர்கல்வி பயில முடிமா .அரசாணை வெளியிடவும்
Sure mam will check and publish
Sir pls reply
quickly
Non teaching staff can do higher studies with leave on loss pay
Sir pls reply
quickly
Non teaching staff can do higher studies with leave on loss pay