அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
29.8 C
Tamil Nadu
Friday, December 8, 2023

Palli Kalvi Thurai Nirvaga Aluvalar Sanagam | ஊதியமின்றி அலுவலக பணியாளர்கள் அவதி

Palli Kalvi Thurai Nirvaga Aluvalar Sanagam | ஊதியமின்றி அலுவலக பணியாளர்கள் அவதி

Palli Kalvi Thurai Nirvaga Aluvalar Sanagam

நிர்வாக சீரமைப்பின்படி, பள்ளி கல்வித்துறையின் கீழ் உள்ள மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்கள், மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களான மாவட்ட கல்வி அலுவலர், இடைநிலை கல்வி, தொடக்க கல்வி மற்றும் தனியார் பள்ளிகள் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு, புதிய பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டு, கடந்த அக்டோபர் மாதம் செயல்பட்டு வருகின்றன.

Read Also: BEO School Inspection Form PDF Download

இந்த அலுவலகங்களில் மற்றும் பள்ளிகளில் பணிநிரவல் /பணிமாறுதல் / பதவி உயர்வு மூலம் பணியாளர்கள் 1.10.2022 முதல் பணியேற்று பணிபுரிந்து வருகின்றனர். ஆனால், கடந்த அக்டோபர் மற்றும் தற்போது நவம்பர் மாதத்திற்கான ஊதியம் வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக, சங்கத்தினர் இந்த குறைபாட்டை நீக்கவும், ஊதியம் பெற்று வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலமுறை பள்ளி கல்வி இணை இயக்குனர் (பணியாளர் தொகுதி) சந்தித்து மனு அளித்தனர். ஆனால், இதுதொடர்பாக இணை இயக்குனர் எவ்வித நடவடிக்கை எடுக்காததால் பொருளாதார ரீதியாக பாதிப்படைந்துள்ளனர். குறிப்பாக, மாத தவணை, வீட்டு வாடகை, வங்கி கடன் உள்ளிட்டவை செலுத்த முடியாமல் பரிதவிக்கின்றனர்.

குறிப்பாக, பெரும்பாலான மாவட்டங்களில் முழுமையான ஊதியம் பெறப்படவில்லை எனவும், ஒரு சில மாவட்டங்களில் பகுதி அளவில் பணியாளர்கள் ஊதியம் அனுமதிக்கப்பட்டதாக பள்ளி கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதனை கண்டித்து, பள்ளி கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கம் வரும் டிசம்பர் 5ம் தேதி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Posts