கொரோனா கோரதாண்டவம் ஆடிய தொடங்கியதிலிருந்தே கல்விதுறை உள்பட பல துறைகள் ஆட்டம் கண்டன. ஆன்லைன் கல்வியால் சமாளிக்க முடியும் என்ற திட்டம் எல்லாம் கல்வி கட்டணம் வசூல் செய்வதற்கே என்று பல நாட்களுக்கு பின்னரே நம்மூர் பெற்றோர்களுக்கு தெரியவந்தது. ஒரு பக்கம் உண்மையாகவே ஏழை மாணவர்களுக்கு கொரோனா காலத்தில் கல்வி என்பது எட்டா கனியாகவே இருந்தது உண்மைதான். அதேசமயத்தில் நாடு முழுவதும் உள்ள முன்னணி தனியார் பள்ளி ஸ்தாபனங்கள் பள்ளியை திறந்தே ஆக வேண்டும் என அரசை நிர்பந்தம் செய்தது மறுபக்கத்தின் மறுக்கப்படாத உண்மை.
அவர்கள் எதற்கு பள்ளிகள் திறக்க வேண்டும் என்று உங்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறேன். என்னதான் குழந்தைகளாக இருந்தாலும், நவீன பெற்றோர்கள் சிலர் கொரோனா காலத்திலும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவோம் என்று வீம்பு பிடித்தது கடந்த காலங்கள் நம்மை மறக்கவிடிக்கவில்லை.
இதன் எதிரொலியாக, மத்திய அரசு வழிகாட்டுதல் பேரில், ஒவ்வொரு மாநிலமும் பள்ளிகள் வரிசையாக திறக்க தொடங்கின, சில மாநிலங்களில் திறக்கப்பட உள்ளது.
அந்த வகையில்தான், மத்திய பிரதேச அரசு கடந்த டிசம்பர் 18ம் தேதி பள்ளிகள் திறந்தது. 9 முதல் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு வகுப்புகள் துவங்கப்பட்டன. 50 சதவீத மாணவர்கள் மட்டுமே பள்ளிக்குள் அனுமதி, ஒரு நாள் விட்டு ஒரு நாள் மாறி, மாறி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மத்திய பிரதேசத்தில் பிட்யுல் மாவட்டத்தில், ஷாப்பூர் என்ற இடத்தில் அரசு நடத்தில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. அந்த பள்ளியில் படிக்கும் 12ம் வகுப்பை சேர்ந்த 10 மாணவிகள் கொரோனவால் பாதிக்கப்பட்டது கொரோன பரிசோதனை மூலம் தெரியவந்தது. இது சக மாணவிகளுக்கும், பெற்றோர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
பள்ளி முதல்வர் விரேந்திர நம்டோ கூறும்போது, மத்திய பிரதேச தலை நகரத்தில் இருந்து 36 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. ஜனவரி 13ம் தேதியன்று, பள்ளி மாணவிகளுக்கு கொரோன பரிசோதனை நடத்தப்பட்டதில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தற்போது, அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டனர். உள்ளூர் அதிகாரிகள் ஒரு வாரத்திற்கு பள்ளியை மூட அறிவுறுத்தி உள்ளனர்.
மேலும் 25 பள்ளி மாணவர்களின் கொரோனா பரிசோதனை முடிவுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். சுகாதாரத்துறை அறிவுறுத்திலின்பேரில், பள்ளி மூடப்பட்டு, கிருமிநாசினியால் சுத்தம் செய்யும் பணி தொடங்கி உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Join WhatsApp Group | WhatsApp Group |
To Follow Telegram : | Telegram Link |
To Follow Facebook | Facebook Link |
To Follow Twitter | Twitter Link |
To Follow Instagram | Instagram Link |
To Follow Youtube | Youtube Link |