NEET UG Syllabus release in Tamil | இளநிலை நீட் தேர்வு பாடத்திட்டம் வெளியீடு
NEET UG Syllabus release in Tamil
இளநிலை நீட் தோ்வுக்கான பாடத் திட்ட விவரங்களை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப்படிப்பின் இகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.
அதபோன்று ராணுவ கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கு நீட் தோ்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
நீட் தோ்வை தேசிய தேர்வுகள் முகமை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதன்படி, 2024-25ஆம் கல்வியாண்டிற்கான நீட் தேர்வு அடுத்த ஆண்டு மே 5ம் தேதி நாடு முழுவதும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில் 180 வினாக்கள் கேட்கப்படும். ஒவ்வொரு வினாவுக்கும் தலா 4 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறுகிறது. தாவரவியல் மற்றும் விலங்கியலை உள்ளடக்கிய உயிரியல் பாடத்தில் இருந்து 360 மதிப்பெண்களுக்கும், இயற்பியல் மற்றும் வேதியியலில் தலா 180 மதிப்பெண்களுக்கு கேள்விகள் இடம்பெறும்.
இந்த நிலையில், அதற்கான பாடத்திட்்டங்கள் http://www.nmc.org.in என்ற இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் கேள்விகள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.