நீட் தேர்வு மாணவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
Table of Contents
நீட் தேர்வு
- நீட் அட்மிட் கார்டு 2022 (நுழைவுச்சீட்டு) மற்றும் அடையாள அட்டை சான்று தவிர வேறு எந்த ஆவணங்களும் தேர்வு அறைக்குள் எடுத்து செல்லக்கூடாது.
- நீட் 2022 தேர்வர்கள் இரண்டு முறை விடைத்தாளில் கைெயழுத்திட வேண்டும் – தேர்வின் தொடக்கத்தில் ஒரு முறை மற்றும் அதன் முடிவில் மீண்டும்.
- வருகைப்பதிவு தாளில் தேர்வர்கள் விரல் ரேகைகளை பதிவு செய்ய வேண்டும்.
- தேர்வர்களுக்கு, தேர்வுக்கு 15 நிமிடங்களுக்கு முன்பு வினாத்தாள் (test booklet) வழங்கப்படும், இதனால் அவர்கள் அதில் உள்ள குறிப்பிட்ட தகவல்களை பூர்த்தி செய்ய முடியும்.
- ஒவ்வொரு தேர்வர்களும் தேர்வு அறையில் தேர்வு எழுத பால்பாயிண்ட் பேனா வழங்கப்படும்.
- தேர்வு தொடங்குவதற்கு முன், மாணவர்கள் வினாத்தாள்-ல் உள்ள பக்கங்களின் எண்ணிக்கையை சரிபார்க்க வினாத்தாள் முத்திரையை திறக்க ஐந்து நிமிடங்கள் வழங்கப்படும்.
- தோ்வர்கள் வினாத்தாள் குறியீட்டை (code) ஐ, OMR தாளில் வழங்கப்பட்ட குறியீட்டுடன், ஒப்பிட்டு சரிபார்க்க வேண்டும். தேர்வு அறையை விட்டு வெளியேறுவதற்கு முன்பு OMR தாளை அறைகண்காணிப்பாளிடம் வழங்குவது கட்டாயமாகும்.
- தேர்வர்கள் OMR விடைத்தாளின் இருபுறமும் உள்ள விவரங்களை நிரப்ப வேண்டும்.
நீட் தேர்வு தடை செய்யப்பட்ட பொருட்கள்
- நீட் தேர்வானது கடுமையான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை கொண்டுள்ளது. தேர்வர்கள் மிகவும் உணர்வுதிறன் மெட்டல் டிடெக்டர்களின் உதவியுடன் நுழைவு வாயிலில் முழுமையாக பரிசோதிக்கப்படுவார்கள். தடை செய்யப்பட்ட பொருட்களின் பட்டியல் NTAவால் வெளியிடப்பட்டுள்ளது. அத்தகைய பொருட்களை வைத்திருப்பதாக கண்டறியப்பட்ட எந்தவொரு தடை செய்யப்பட்ட பட்டியல்கள் கீழே பட்டியலிப்பட்டன.
- நுழைவு சீட்டு தவிர, எந்த எழுதுபொருள் பொருட்கள், அச்சுகள், மற்ற பொருட்களை தேர்வு அறைக்கு உள்ளே எடுத்து செல்ல அனுமதி இல்லை.
- வடிவியல் பெட்டிகள், பென்சில் பெட்டிகள், கால்குலேட்டா்கள், பேனாக்கள், எழுதும் பட்டைகள், பென் டிரைவ்கள், அழிப்பான்கள் மற்றும் பல போன்ற பொருட்கள் தேர்வு அறைக்கு உள்ளே எடுத்து செல்ல அனுமதி கிடையாது.
- மொபைல் போன், ப்ளுடூத், கேமராக்கள் போன்ற தகவல் தொடர்பு சாதனங்கள் கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளன.
- கைக்கடிகாரங்கள், பணப்பைகள், கைப்பைகள், பெல்ட்கள், தொப்பிகள் மற்றும் ஆபரணங்கள் போன்ற பொருட்கள் எடுத்து செல்ல அனுமதி கிடையாது.
நீட் தேர்வு – பொது அறிவுறுத்தல்கள்
- வரிசை எண்ணுடன் ஒவ்வொரு தேர்வர்களுக்கும் ஒரு இருக்கை ஒதுக்கப்படும். ஒவ்வொரு தேர்வர்களுக்கு தனக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை சரியாக கண்டுபிடித்து அதில் அமர வேண்டியது முக்கியம்.
- தேர்வர்களின் வீடியோ பதிவு செய்யப்படுவார்கள்
- தேர்வர்கள் பின்வரும் ஆவணங்களை தேர்வு மையத்தில் சமா்ப்பிக்கப்பட வேண்டும்.
- நீட் நுழைவு தேர்வு (அட்மிட் கார்டின்) பிாிண்ட் அவுட்,
- பாஸ்போர்ட் அளவு புகைப்படம் (நீட் விண்ணப்ப படிவத்தில் பதிவேற்றப்படி)
- செல்லுபடியாகும் ஐடி ஆதாரம்.
- PWD சான்றிதழ் (பொருத்தமானவர்களுக்கு மட்டும்)
- தேர்வர்கள் தேர்வு முடிந்துவிடும் முன் தேர்வு மையத்தில் இருந்து வெளியேற அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
- தேர்வு அறையில் சாப்பிடுவது அல்லது குடிப்பது அனுமதிக்கப்படமாட்டாது. இருப்பினுமு் உண்மையான மருத்துவ நிலை கொண்ட தேர்வா்கள் மதிப்பீட்டிற்கு பிறகு அனுமதிக்கப்படுவார்கள்.
Join WhatsApp Group | WhatsApp Group |
To Follow Telegram : | Telegram Link |
To Follow Facebook | Facebook Link |
To Follow Twitter | Twitter Link |
To Follow Instagram | Instagram Link |
To Follow Youtube | Youtube Link |