தமிழகத்தில் கொேரானா தொற்று மீண்டும் பரவ ஆரம்பித்ததால், எந்த காரணம் கொண்டும் மாணவ, மாணவிகளை பள்ளிக்கு வரவழைக்க கூடாது என்று பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரம் அடைந்துள்ளதால், மாணவர்களை பள்ளிக்கு அழைக்க கூடாது என்று பள்ளி கலர்வித்துறை தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவித்துள்ளது.
மேலும், சுகாதாரம், சுற்றுச்சூழல், கொரோனா தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடத்தப்படும் கலை நிகழ்ச்சிகள், கட்டுரைப்போட்டி, பேச்சு போட்டி போன்றவற்றை காரணம் காட்டி எந்த பள்ளி மாணவர்களையும் பள்ளிக்கு வர வேண்டும் என்று கட்டாயப்படுத்தக்கூடாது என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இதற்காக, பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் தீரஜ்குமார் தனியாக ஒரு உத்தரவையும் வெளியிட்டுள்ளார். இந்த உத்தரவு பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் பள்ளிகளின் செயல்பாடுகளை ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் மூத்த கல்வி அதிகாரிகள் மாவட்ட அளவில் நியமிக்கப்பட்டு, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Join WhatsApp Group | WhatsApp Group |
To Follow Telegram : | Telegram Link |
To Follow Facebook | Facebook Link |
To Follow Twitter | Twitter Link |
To Follow Instagram | Instagram Link |
To Follow Youtube | Youtube Link |