தமிழகத்தில் 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்புகள் முழுமையாக செயல்பட்டு வரும் நிலையில், பள்ளி கல்வித்துறை திடீரென இன்று பிளஸ்2 பொதுத்தேர்வுக்கான அட்டவணை வெளியிட்டது.
அதன்படி பொது தேர்வுகள் மே 3ம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
முன்னதாக, பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தேர்தல் தேதி அறிவிப்பிக்கு பின், பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என்று கூறியிருந்தார்.
இதற்கிடையில், பள்ளி கல்வி அமைச்சர் இன்று நிருபர்களிடம் கூறியதாவது, பிளஸ் 2 பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டதில் எந்த குழப்பமும் இல்லை என்றார்.
மேலும், பொது தேர்வு அட்டவணை ஏற்கனவே தயாரித்து வைத்திருந்தோம் என்று விளக்கம் அளித்தார்.
இதுதவிர, நூலகங்களில் உள்ள காலிபணியிடங்கள் தற்காலிக முறையில் நிரப்பப்படும் என அவர் தெரிவித்தார்.
தேசிய திறனாய்வு தேர்வு கட்டணத்தை அரசே செலுத்துவது குறித்து, முதல்வருடன் வரும் 23-ம் தேதி ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
மூன்றாம் பாலினத்தவர்கள் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க எந்த நிபந்தனையும் இல்லை என்றும் கூறியிருந்தார்.