இந்திய கல்வி மேம்பாட்டுக்கான கூட்டமைப்பு மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் இணைந்து பொறியியல் மேலாண்மை படிப்புகளுக்கான கல்வியாளர்கள், துணைவேந்தர்கள் ஆலோசனை கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது.
தொழில்நுட்ப கல்வி இயக்கக தலைவர் அனில் தத்ராயா சஹஸ்ர புத்தே நிருபர்களிடம் கூறியதாவது, தேசயி புதிய கல்வி கொள்கை 12ம் வகுப்பில் வேதியியல், கணிதம் படிக்காதவர்களும் பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர ஊக்குவிப்பதாகவும், அந்த வகையில் தொழிற்கல்வி மாணவர்களும் பொறியியல் படிப்பில் சேரலாம்.
பொறியியல் படிப்பில் சேர இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்கள் கட்டாயமில்லை என்று வெளியான தகவல் தவறாக புரிந்துகொள்ளப்பட்டு உள்ளது. தொழிற்கல்வி மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேரும்போது அவர்கள் முதலாம் ஆண்டில் பொறியியல் படிப்பிற்கு அடிப்படையாக விளங்குகிற கணிதம், இயற்பியல் வேதியியல் ஆகிய பாடங்களை கட்டாயம் தேர்ச்சி அடைய வேண்டும்.
மேலும் அனைத்து வகை உயர் கல்வி படிப்புகளிலும் மாணவர்கள் சேருகிறபோது, அவர்களின் திறனை அறியும் வகையில் நுழைவுத் தேர்வு அடிப்படையிலான ஒரு திறனறி தேர்வு நடத்தப்பட்டு, அந்த மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடத்தப்படும், இவ்வாறு அவர் கூறினார்.
(நுழைவு தேர்வுக்கும், திறனறிவு தேர்வுக்கும் என்ன வித்தியாசம் என்று கருத்து தெரிவியுங்கள், அவர் சூசகமாக கூறுவது தேர்வு வைத்துதான் உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை இருக்கும் என்பதை உறுதி செய்ய முடிகிறது.)
Join WhatsApp Group | WhatsApp Group |
To Follow Telegram : | Telegram Link |
To Follow Facebook | Facebook Link |
To Follow Twitter | Twitter Link |
To Follow Instagram | Instagram Link |
To Follow Youtube | Youtube Link |