அதிமுக சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில் தமிழக முதல்வர் அதிமுகவின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். கல்வி சார்ந்த அறிவிப்பு குறித்து காணலாம்.
9, 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிய உணவு திட்டம் விரிவுப்படுத்தப்படும்.
தொடக்க பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
வீட்டில் ஒருவருக்கு அரசு பணி உறுதியாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
மாணவர் நலன் காக்க கல்விகடன் ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.
அனைத்து பள்ளிகளில் பத்தாம் வகுப்பு வரை தமிழ் பாடம் கட்டாயமாக்கப்படும்.
நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும்.
காயிதே மில்லத் பெயரில் பல்கலைக்கழகம் உருவாக்கப்படும்
பள்ளி மாணவர்களுக்கு பால் வழங்கப்படும்
அரசு பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு ஓராண்டாக உயர்த்தப்படும்.
திறன் வளர்ப்புக்கென பல்கலைக்கழகம் உருவாக்கப்படும்.
உலக புகழ் பெற்ற ஹார்வேர்டு, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக உடன் இணைந்து 10 சர்வதேச பல்கலைக்கழகம் அமைக்கப்படும்.
போட்டித் தேர்வில் பங்கேற்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்தில் தனி பயிற்சி மையம் அமைக்கப்படும்.
சுயநிதி பிரிவில் படிக்கும் மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்கப்படும்.