Kamarajapuram middle school Theni | காமராஜபுரம் நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்
Kamarajapuram middle school Theni
தேனி மாவட்டம், கடமலைக்குண்டு அருகே காமராஜபுரம் கிராமபுறத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி உள்ளது. இப்பள்ளியின் தலைமையாசிரியையாக ஈஸ்வரி உள்ளார். இப்பள்ளியில் கடந்த நான்கு ஆண்டுக்கான முன்னாள் மாணவர்களின் பழைய பாடபுத்தகங்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. 250 கிலோ எடையுள்ள பழைய பாடபுத்தகங்களை மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளின் அனுமதி பெறாமல் தலைைமயாசிரியை ஈஸ்வரி விற்பனை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
Read Also: தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்
இதுகுறித்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தினர் புகார் தெரிவித்தனர். இந்த புகாரின்பேரில், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் கலாவதி, ஈஸ்வரியிடம் நேஸ் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், 250 கிலோ எடையுள்ள பழைய பாடபுத்தகங்களை பழைய பேப்பர் வாங்குபவருக்கு எடைக்கு போட்டதை ஈஸ்வரி ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து முறைகேடாக பள்ளிக்கு சொந்தமான பழைய பாடபுத்தகங்களை விற்பனை செய்த தலைமையாசிரியை ஈஸ்வர் மீது, ஒழுங்கு நடவடிக்கையாக தற்காலிக பணி நீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வி) கலாவதி உத்தரவிட்டார்.