அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
23.3 C
Tamil Nadu
Monday, December 11, 2023
அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

Kalai Thiruvizha |Palli Kalvi Thurai Kalai Thiruvizha |கலை திருவிழா | பள்ளி கல்வித்துறை கலை திருவிழா

Kalai Thiruvizha |Palli Kalvi Thurai Kalai Thiruvizha | கலை திருவிழா | பள்ளி கல்வித்துறை கலை திருவிழா

Kalai Thiruvizha

கலை திருவிழா என்றால் என்ன

சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவித்தபடி, மாணவர்களின் கலை திறன்களை வெளிக்கொணரும் விதமாக அரசு பள்ளிகளில் பயிலும் இலட்சக்கணக்கான மாணவர்கள் பயன்பெறும் வகையில் பள்ளி வட்டாரம், மாவட்டம், மாநில அளவில் கலை திருவிழா நடத்தப்படும். தமிழகத்தில் உள்ள பல்வேறு கலை வடிவங்களை அறிமுகப்படுத்தி, மாணவர்களின் கலை திறன்களை வெளிக்கொணரும் விதமாக கலை பண்பாட்டு கொண்டாடங்களை ஒருங்கிணைப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

எந்த மாணவர்களுக்கு கலைத் திருவிழா

அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 6 முதல் 9ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு கலை அரங்கம் நிகழ்வின் கீழ் கலை சார்ந்த பயிற்சிகளும் மற்றும் 6 முதல் 12ம் வகுப்புகளில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கலை திருவிழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Read Also: கலைச் செம்மல் விருது

கலை அரங்கம்

பள்ளி கல்வியில் நிகழ்வுகளை ஒருங்கிணைக்கும் விதமாக கலை செயல்பாடுகள், குழந்தைகள் பிற கற்றல் செயல்முறைகளில் மிகவும் சுறுசுறுப்புடனும் ஆழமாகவும் ஈடுபட உதவுகிறது. இவை குழந்தைகளின் முடிவெடுக்கும் திறனை மேம்படுத்துவதோடு மட்டுமின்றி அவர்களை தன்னம்பிக்கை கொண்டவர்களாக மாற்றுகிறது. மேலும் அவர்களுக்கு பிடித்த கலையை கற்றுக்கொள்வதால், அவர்களை சுற்றியுள்ள உலகத்தை குறித்து ஆழமான புரிதலை ஏற்படுத்துகிறது. ஏற்கனவே கூறியவாறு, இந்த கலை செயல்பாடுகளுக்கென ஒவ்வொரு வாரமும் இரு பாடவேளைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஒருங்கிணைப்பு பணிகள் என்னென்ன?

  • ஐந்து கலை வடிவங்களுக்கான (இசை, நடனம், காட்சிக்கலை, நாட்டுப்புற கலை மற்றும் நாடகம்) கலைஞர்களை தெரிவு செய்தல்
  • தெரிவு செய்யப்பட்ட கலைஞர்களை பள்ளிகளுடன் மற்றும் ஆசிரிய பயிற்றுநர்களுடன் இணைத்தல்
  • ஐந்து கலை வடிவங்களுக்கான பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு, சார்ந்த பள்ளிகள் மற்றும் கலைஞர்களுக்கு தக்க நேரத்தில் பகிர்தல்
  • கலை அரங்க நிகழ்வுகளுக்காக கைப்பேசி செயலியை வடிவமைத்து சார்ந்து பள்ளிகளுக்கு வழங்குதல்
  • காட்சி கலை, நாட்டுப் புறக்கலை, நாடகம் மற்றும் நடனம் ஆகிய கலை வடிவங்களுக்கு தேவையான பொருட்களுக்கு மாநில திட்ட இயக்கத்திலிருந்து நிதி விடுவிக்கப்படும். பள்ளி மேலாண்மை குழுவும் தேவைப்படும் போது/முடிந்த வரை காட்சி கலை, நாட்டுப் புறக்கலை, நாடகம் மற்றும் நடனம் ஆகிய அமா்வுகளுக்கான பொருட்களை வழங்குதல்

கலை வடிவங்களுக்கான பாடத்திட்டம்

6 முதல் 9 வகுப்புகளுக்கான பாடத்திட்டத்திற்கு ஏற்றாற்போல் 5 கலை வடிவங்களுக்கு இசை, நடனம், காட்சிக் கலை, நாட்டுப்புறற கலை மற்றும் நாடகம் (Music, Dance, Visual Art, Folk Art and Theater) பாடத்திட்டம் தயாரிக்கப்படும். பாடப் பகுதியிலிருந்து கருத்துகள் தெரிவு செய்யப்பட்டு, மாணவர்களின் பங்கேற்பு மற்றும் புரிதலை மேம்படுத்தும் வகையில் பல்வேறு கலை வடிவங்களுக்கு ஏற்றவாறு அவைகள் மாற்றி அமைக்கப்படும். இதன் வாயிலாக மாணவர்கள் தெளிவை பெறுவதோடு மட்டுமின்றி பல்வேறு கலை வடிவங்களின் அம்சங்களையும் கூறுகளையும் கற்றுக்கொள்வார்கள்.

கல்வியை கலை ஒருங்கிணைப்பதற்கான அணுகுமுறை

  • பள்ளி செயல்பாட்டின் கால அட்டவணையில் கலை மற்றும் பண்பாட்டு செயல்பாடுகளை ஒருங்கிணைத்தல்
  • நாட்டுப்புற கலைஞர்கள், பயிற்சியாளர்கள், கலை- நெறியாளர்கள், வல்லுநர்கள், கலை தொடர்பான அரசு நிறுவனங்கள் போன்ற வளங்கள், பள்ளி, குறு மையம், வட்டாரம் அருகில் உள்ள இருக்கும் கலைஞர்களை கண்டறிந்து, அந்த கலைஞர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வந்து பயிற்சி அளிக்கும் வகையில் மாநில அளவில் முயற்சிகள் எடுக்கப்பட்டு சார்ந்த பள்ளிகளுடன் ஒருங்கிணைக்கப்படுவர்.
  • ஒவ்வொரு வாரமும் இரண்டு, மூன்று முக்கிய கலை வடிவங்களில் குழந்தைகளை ஈடுபடுத்த வாய்ப்புகள் தர வேண்டும்.
  • வாரத்தில் ஒரு நாள், கடைசி 2 பாடவேளைகள் கலை செயல்பாடுகளுக்காக ஒதுக்கப்பட வேண்டும்.
  • 6 முதல் 9ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் ஒருங்கிணைக்கப்பட்டு முழுமையாக பங்கேற்க வேண்டும். அதே வேளையில் அந்த வாரத்தில் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கும் 2 அல்லது 3 கலை வடிவங்களின்படி குழந்தைகளை குழுக்களாக பிரிக்க வேண்டும். பயிற்சிக்கான ஒட்டுமொத்த ஒருங்கிணைப்புகளை பள்ளயின் பகுதிநேர, முழு நேர கலை ஆசிரியர்கள் செய்ய வேண்டும். அவர்கள் இல்லாத பள்ளிகளில், பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர்களையும் அழைத்து இக்கலை பண்பாட்டு நிகழ்வுகளில் தன்னார்வத்துடன் செயல்பட விரும்பும் ஒரு ஆசிரியரை பொறுப்பு ஆசியராக தலைமை ஆசிரியர் தெரிவு செய்ய வேண்டும்.
  • தேர்வு செய்யப்படும் ஆசிரியர்கள் வெவ்வேறு அமர்வுகளை செயல்பாட்டு நடைமுறைகள் மூலம் எவ்வாறு ஒருங்கிணைக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
  • கல்வி செயல்பாடுகளில் கற்றல் கற்பித்தல் பாடவேளை இல்லாத மற்ற ஆசிரியர்கள் சிறிய குழுக்களை ஒருங்கிணைக்க துணை ஆசிரியராக செயல்படலாம்.

கலை திருவிழா வழிகாட்டு நெறிமுறைகள்

  • இசை, நடனம், நாடகம், காட்சிக் கலை, நாட்டுப்புறக்கலை  என பட்டியலிப்பட்டுள்ள பல்வேறு கலை வடிவங்களை கொண்ட ஒரு படிவத்தில் 6 முதல் 9ம் வகுப்பு வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் தங்களுக்கு பிடித்த கலை வடிவத்தை தெரிவு செய்ய ஆசிரியர்கள் உதவ வேண்டும். இதன் இடிப்படையில் குழந்தைகள்  குழுவாக பிரிக்கப்பட்டு வகுப்பு வாரியான பட்டியல் தயாரிக்கப்பட்டு பயிற்சி அளிக்க வேண்டும்.
  • அந்த வாரத்திற்கான அட்டவணையை பொறுத்து, 2 அல்லது 3 கலை வடிவங்கள் அறிவிக்கப்பட வேண்டும்
  • குழுக்களாக அடையாளம் காணப்பட்ட குழந்தைகள் அவர்களின் குழுவிற்கான அறைகளுக்கு செல்லும்படி தெரிவிக்கப்பட வேண்டும்.
  • ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு ஆசிரியர், பொறுப்பாளராக இருக்க வேண்டும் அவர் வெவ்வேறு குழுக்களுடன் வெவ்வேறு வாரங்களில் சுழற்சி முறையில் பங்கேற்க வேண்டும்.
  • அனைத்து அறைகளிலும் கலை வடிவங்களுக்கு ஏற்ப தேவையான பொருட்கள் இருப்பதை உறுதி செய்வதற்கு ஓட்டுமொத்த ஒருங்கிணைப்பாளர் ஒருவர் இருத்தல் அவசியமாகும்.
  • நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் பள்ளிகளில் கலை ஆசிரியர்கள் (சாா்ந்த பள்ளியின் இருப்பின்) இந்த செயல்முறையை ஒருங்கிணைத்தல் வேண்டும்.
  • 6 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாரந்தோறும் கீழ்காணும் கலை வடிவங்களில் பயிற்சிகள் அமர்வுகள் இருக்க வேண்டும்.
  • இசை – தமிழ் இசை
  • நாட்டுபுற கலை – உடுக்கை, பறை, ஒயில், கரகாட்டம், கும்மி, இன்ன பிற.
  • நடனம் – நாட்டியம் – மயிலாட்டம் – தேவராட்டம் – பரதநாட்டியம், இன்ன பிற
  • நாடகம் – பொம்மலாட்டம், தோல் பாவைகூத்து, தெருக்கூத்து, இன்ன பிற,
  • காட்சிக்கலை – புகைப்படம் எடுத்தல், குறும்படம் எடுத்தல், வரைதல், ஒவியம், களிமண் வேலை, இன்ன பிற,
  • சூழல் மற்றும் கலைஞர்களின் அடிப்படையில் பள்ளி அளவில் 2 அல்லது 3 கலை வடிவங்களை தேர்வு செய்தல் வேண்டும்.

தலைமை ஆசிரியர் பணி / ஆசிரியர் பணி

  • தலைமை ஆசிரியர் பள்ளி அருகே உள்ள கலை வடிவங்கள் அல்லது கிடைக்கக்கூடிய வளங்களின் அடிப்படையில், குறைந்தபட்சம் இரண்டு அல்லது மூன்று கலை வடிவங்களாவது பள்ளியில் தேர்வு செய்யப்பட்டிருப்பதை  உறுதி செய்ய வேண்டும்.
  • அதன்படி இந்த நிகழ்வுகளை ஒருங்கிணைக்க பொறுப்பு ஆசிரியர் அடையாளம் காண வேண்டும். பள்ளியில் முழு சேர அல்லது பகுதிநேர கலை ஆசிரியர் இருப்பின் அவர்களை இந்த நிகழ்விற்கு பொறுப்பு ஆசிரியராக நியமிக்கலாம். இவர்கள் இல்லையென்றால், பொறுப்பு ஆசியரரை நியமிக்கலாம்.
  • இத்திட்டம் மற்றும் அவருடைய பொறுப்புகள் குறித்து முழு புரிதல் இருப்பதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்.
  • 6 முதல் 9ஆம் வகுப்புகளில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் கலை பண்பாட்டு நிகழ்வுகளில் அவர்கள் விரும்பும் கலை வடிவத்தில் பதிவு செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
  • குழுவாக பிரிக்கப்பட்ட அனைத்து மாணவர்களும் தாங்கள் தெரிவு செய்ய கலை வடிவக் குழுவில் தாங்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டம்.
  • குறைந்தப்பட்சம் ஒரு மாதத்திற்கான பாடத் திட்டம் முன்கூட்டியே தலைமை ஆசிரியருக்கு தெரிவிக்கப்படும். பாடத்திட்டம் தொடர்பாக ஏதேனும் பொருட்கள் தேவையிருப்பின் அவைகளை தயார் நிலையில் வைத்திருக்க ஏதுவாக அமையும். (பள்ளி மேலாண்மை குழு மூலமாக பொருட்களை பெறலாம்)
  • குறிப்பிட்ட கால பாட வேளைக்குள் இந்நிகழ்வுகள் முடிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
  • ஒரு மாதத்திற்கு தேவையான ஒரு குறிப்பிட்ட கலை வடிவத்திற்கான பொருட்களை முன்கூட்டியே வாங்கி வைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
  • கலை அரங்க நிகழ்வுகள் தொடங்க முன், தங்கள் பள்ளிக்கென அடையாளம் காணப்பட்ட கருத்தாளர்களை தொடர்பு கொள்ள வேண்டும்.
  • அந்தந்த கலை வடிவங்களுக்கான குழந்தைகளின் எண்ணிக்கையைப் பொறுத்து இடம்/வகுப்பறைகள் முன்கூட்டியே அடையாளம் காணப்பட்டு பொறுப்பு ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.
  • தலைமை ஆசிரியர், கலை அரங்க நிகழ்வுகள் தொடங்குவதற்கு முன் பள்ளி மேலாண்மை குழு, பொறுப்பு ஆசிரியர் மற்றும் பிற ஆசிரியர்களுடன் ஒரு முதற்கட்ட கூட்டம் நடத்தி, கலை நிகழ்வுகளுக்கு தேவையான அனைத்து திட்டங்கள், இடம், குழுக்கள், ஆகியன தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

பொறுப்பு ஆசிரியரின் பங்கு

  • பள்ளியில் கலை அரங்க நிகழ்வுகள் அனைத்தையும் ஒருங்கிணைக்க வேண்டும். பள்ளி அவர் மீது வைத்திருக்கும் எதிர்பார்ப்பினை முழுமையாக உணர்ந்து செயல்பட வேண்டும்.
  • மேற்குறிப்பிட்ட 3 முதல் 10 நடவடிக்கைகளுக்கு தலைமை ஆசிரியருக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.
  • தங்கள் பள்ளிக்காக அடையாளம் காணப்பட்ட கலைஞர்களை பற்றி விரிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
  • தங்கள் பள்ளிக்கான திட்டம் எந்த இடையூறுமின்றி சீராக செயல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். பொறுப்பு ஆசிரியர் ஒரு சிக்கலை எதிர்நோக்கினாலோ அல்லது அந்நாளுக்கான நிகழ்வினை ஒத்திவைக்க நேர்ந்தாலே சம்மந்தப்பட்ட அனைத்து பங்குதாரர்களிடமும் தொடர்பு கொண்டு, தேவையான மாற்று திட்டம் அல்லது ஏற்பாட்டை செய்தவதற்கு முன் தலைமை ஆசிரியரிடம் ஆலோசிக்க வேண்டும்.
  • அவ்வப்போது நடைபெறும் கலந்துரையாடல்கள் மற்றும் திட்டமிடல் கட்டாயமாக கலந்துகொள்ள வேண்டும்.
  • தலைமை ஆசிரியருடன் கலந்தாலோசித்து மாதாந்திரம் நடைபெறும் பள்ளி மேலாண்மை குழு கூட்டங்களில் கலை அரங்கத்தின் செயல்முறை மற்றும் முன்னேற்றம் குறித்து விளக்கப்பட வேண்டும்.
  • இச்செயல்பாட்டின்  முன்னேற்றத்தை கண்காணிப்பதற்காக உருவாக்கப்பட்டு வரும் செயலியில் நாள்தோறும் தரவுகள் புதுப்பிக்கப்படுவதையும், தகவல் பலகையில் உள்ள தகவலின் அடிப்படையில்  இடைவெளி தொடர்ந்து நிவா்த்தி செய்வதையும் உறுதி செய்ய வேண்டும்.

கலைஞர்களின் பங்கு

  • கலைஞர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை தொடர்பு கொள்ள வேண்டும். தங்களுக்கான படிவத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். அப்பள்ளியின் பள்ளி மேலாண்மை குழுவின் ஒப்புதலை பெற்று, உண்மையான நிகழ்விற்கு ஒரு நாளைக்கு முன்னதாகவே பள்ளிக்கு சென்று ஆயத்த பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
  • அடுத்த மாதத்திற்கு தேவையான அனைத்து பாடத்திட்டங்களையும் தயாரிப்புகளையும் முந்தைய மாதத்திலேயே தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். (பள்ளி கல்வித்துறை சார்பில் கலை வடிவங்களுக்காக வழங்கப்பட்ட பாடதிட்டம்)
  • குறிப்பிட்ட நாளில் பள்ளிக்கு வர இயலவில்லை என்றால், தலைமை ஆசிரியருக்கு முன்கூட்டியே தெரிவித்து, மாற்று திட்டத்தை செயல்படுத்துவதற்கு பொறுப்பு ஆசிரியருடன் இணைந்து தேவையான ஏற்பாட்டை செய்ய வேண்டும்.
  • கலைஞர்கள் ஒரு குறிப்பிட்ட வாரத்தில் செயல்படுத்தப்பட வேண்டிய பாடத்திட்டத்திலிருந்து ஏதேனும் மாற்றம் செய்ய விரும்பினால், சார்ந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் பொறுப்பு ஆசிரியர்களிடம் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்.
  • அவ்வப்போது நடைபெறும் கலந்துரையாடல்கள் மற்றும் திட்டமிடல் நிகழ்வுகளில் கட்டாயமாக கலந்துகொள்ள வேண்டும்.
  • கலை அரங்க நிகழ்வுகள் பள்ளியின் தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன் பள்ளியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

மாணவர்களின் பங்கு

  • மாணவர்கள் தாங்கள் விரும்பும் கலை வடிவத்தை முடிவு செய்து அதில் சேரலாம். அவர்கள் ஒரு வருடத்திற்கு ஓரு குறிப்பிட்ட கலை வடிவத்தில் பயில வேண்டும் என்பதையும், அடுத்த ஆண்டில் மட்டுமே எந்த ஒரு மாற்றமும் நிகழ முடியும் என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும்.
  • மாணவர்கள் தாங்கள் விரும்பும் கலை வடிவத்தின் குழுவை நினைவில் வைத்துக்கொண்டு அந்த அமர்வில் கலந்துகொள்ள வேண்டும்.
  • மாணவர்கள் ஒவ்வொரு அமர்விலும் தாங்கள் கற்றுக்கொண்டதை ஆவணப்படுத்த ஒரு குறிப்பேடு வைத்திருக்க வேண்டும்.
  • மாணவர்கள் தங்கள் கலை வடிவ அடிப்படையிலான வாராந்திர பணிகளை விடாமுயற்சியுடன் முடிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
  • மாணவர்கள் தாங்கள் கற்றுக் கொண்ட கலை வடிவத்தினை பற்றி தங்கள் பெற்றோருடனும், மற்றவர்களிடமும் அருகில் உள்ள பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

பள்ளி மேலாண்மை குழுவின் பங்கு

  • தங்கள் பள்ளியில் கலை பண்பாட்டு செயல்பாடுகள் தொடங்குவது சார்பு தீர்மானம் நிறைவேற்றப்படுவதை பள்ளி மேலாண்மை குழு உறுதி செய்ய வேண்டும்.
  • அவர்களுக்கு ேதவையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தேவைப்படும் போது முடிந்தவரை காட்சிக் கலை, நாட்டுப் புறக்கலை, நாடகம் மற்றும் நடனம் ஆகிய அமா்வுகளுக்கான பொருட்களை வழங்க வேண்டும்.
  • இந்த திட்டத்தை திறம்பட பள்ளிகள் செயல்படுத்துவதற்கு பள்ளி மேலாண்மை குழு ஊக்கமளிக்க வேண்டும்.
  • இந்நிகழ்வில் பங்கு பெறும் மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்.
  • பள்ளி மேலாண்மை குழு கூட்டங்களில் பள்ளியில் நடைபெறும் விழாக்களில், பள்ளியில் நடத்தப்படும் போட்டிகளில் மாணவர்கள் தாங்கள் கற்றுக் கொண்ட கலை சார்ந்து தங்களின் கருத்துகளை பகிர்ந்து கொள்ளலாம் நிகழ்த்தி காட்டலாம்.

ஆசிரியர் பயிற்றுநர்களின் பங்கு

  • சம்மந்தப்பட்ட அனைத்து பள்ளிகளிலும் கலை பண்பாட்டு நிகழ்வுகள் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
  • பள்ளி மற்றும் கலைஞர்களுக்கு இடையில் ஒரு பாலமாக இருந்து இச்செயல்பாடுகள் பள்ளிகளில் திறம்பட செயல்பட உறுதுணையாக இருக்க வேண்டும்.
  • இச்செயல்பாட்டின் முன்னேற்றத்தை கண்காணிப்பதற்காக உருவாக்கப்பட்டு வரும் செயலில் தரவுகள் நாள்தோறும் புதுப்பிக்கப்படுவதையும், தகவல் பலகையில் உள்ள தகவலின் அடிப்படையில் இடைவெளி தொடர்ந்து நிவர்த்தி செய்வதையும் உறுதி செய்ய வேண்டும்.
  • முதற்கட்டமாக இக்கலை அரங்க நிகழ்வுகள் அக்டோபர் மாதம் இரண்டாம் வாரத்திலிருந்து சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர், கடலூர், திண்டுக்கல், ஈரோடு, மதுரை, நாமக்கல், இராமநாதபுரம், திருவள்ளுர், திருவண்ணமாலை, சேலம், விழுப்புரம், திருச்சி, காஞ்சிபுரம் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் துவங்கப்பட உள்ளது.
  • இரண்டாம் கட்டமாக மீதம் உள்ள 22 மாவட்டங்களில் அக்டோபர் மாதம் நான்காம் வாரத்தில் இருந்து தொடங்கப்பட உள்ளது.

கலை திருவிழா

  • டிசம்பர் மாதம் முதல் வாரத்திலிருந்து பல்வேறு கலை வடிவங்கள் சார்ந்துபோட்டிகள் நடத்தப்படும். தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை பயிலுமு் மாணவர்களுக்கு மூன்று பிரிவுகளாக போட்டிகள் நடத்தி, பள்ளி, வட்டாரம், மற்றும் மாவட்ட அளவில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் பங்கேற்புடன் ஆண்டு தோறும் மாநில அளவிலான கலை திருவிழா நடத்தப்படும்.
  • பிரிவு 1 –  6 முதல் 8ஆம் வகுப்பு வரை
  • பிாிவு 2 –  9 மற்றும் 10ஆம் வகுப்பு வரை
  • பிாிவு 3 – 11 மற்றும் 12ம் ஆம் வகுப்பு வரை
  • மாணவர்களுக்கு அவர்களின் திறமைக்கு அங்கீகாரம் அளிக்கும் ஒரு மேடையாக இத்திருவிழா நடத்தப்படும். இக்கலை திருவிழா பல்வேறு கலை வடிவங்களுக்கு ஊக்கமளிப்பதற்கும், தமிழகத்தின் கலை வடிவங்கள் மற்றும் பண்பாட்டை குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ள இச்சசெயல்பாடுகள் வழிவகுக்கும்.

கலை திருவிழா போட்டி தேதி

  • டிசம்பர் மாதம் மூன்றாம் வாரம் பள்ளி அளவில்
  • டிசம்பர் மாதம் நான்காம் வாரம் வட்டார அளவில்
  • ஜனவரி மாதம் முதல் வாரம் மாவட்ட அளவில்
  • ஜனவரி மாதம் இரண்டாம் வாரம் மாநில அளவிலான கலை திருவிழா போட்டி நடத்தப்படும்.

மாநில அளவிலான போட்டியில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் மற்றும் கலையரசன், கலையரசி என்ற விருதுகளும், மாநில அளவில் தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்டு மாணவர்களின் கலைத்திறன்கள் ஊக்கப்படுத்தப்படும். மாநில அளவில் வெற்றி பெறும் 20 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுவார்கள் என்று பள்ளி கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Posts