அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
29 C
Tamil Nadu
Saturday, September 23, 2023

புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்ய கோரி, 2500 அஞ்சல் அட்டைகள் முதல்வருக்கு அனுப்பி வைப்பு

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யகோரி, திண்டுக்கலில் முதல்வருக்கு 2500 அஞ்சல் அனுப்பி வைக்கும் போராட்டம் நேற்று நடந்தது. தமிழகத்தில் கடந்த 2003ம் ஆண்டு முதல் அரசு பணியில் சேரும் ஊழியர்கள் புதிய ஒய்வூதிய திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டு வருகின்றனர். இந்த திட்டத்தை ரத்து செய்துவிட்டு, மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர் சங்கங்கள், ஆசிரியர்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசு எவ்வித நடவடிக்கைவில்லை.

இதனை கண்டித்து புதிய ஓய்வூதிய (சிபிஎஸ்) ஒழிப்பு இயக்கம் சார்பில் தமிழக முதல்வருக்கு 2,500 அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் நேற்று நடந்தது. ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களிடம் இருந்து பெறப்பட்ட 2500 அஞ்சல் அட்டைகள் திண்டுக்கல் தலைமை நிலையத்தில் இருந்து அனுப்பப்பட்டன. 3வது கட்டமாக இதே கோரிக்கை வலியுறுத்தி மாவட்ட தலை நகரங்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அதன் மாநில ஒருங்கிணைப்பாளர் பி.பிரெடரிக் ஏங்கல்ஸ் தெரிவித்துள்ளார்.

மாணவா்களுக்கு தரும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகையை மாநில அரசுகளுக்கு அதிகாித்து தர வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

பொது பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வில் நான்காவது நாளான நேற்று தரவரிசை எண் 1702 முதல் 2150 வரை உள்ள 450 பேர் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டதில் 436 போ் கலந்து கொண்டு கல்வி நிறுவனங்களை தேர்வு செய்தனர்.

திமுக ஆட்சிக்கு வந்ததும் அரசு ஊழியர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என திமுக கொள்கை பரப்பு செயலாளர் மோகன் செங்கல்பட்டில் நடந்த அரசு ஊழியர் குறை கேட்பு கூட்டத்தில் பேசினார்.

தமிழ்நாடு உயர் நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில தலைவர் பீட்டர் ராசா பதவி உயர்வு மற்றும் பணிமாறுதல் கலந்தாய்வை பள்ளி கல்வித்துறை உடனடியாக நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

நீலகிாி மாவட்ட உள்ள சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு மத்திய அரசின் கல்வி உதவி தொகை பெற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வரும் 31ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது எனவும் மாணவர்கள் தவறாமல் பயன்படுத்தி கொள்ளவும் என அதன் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உடுமலை அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் உடும்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது, பின்னர் வனத்துறையினர் பிடித்து திருமூர்த்தி மலை பகுதியில் அதனை விடுவித்தனர்.

Read, Comment and Share. To receive education information promptly subscribe www.tneducationinfo.com. Follow us Facebook /Twitter / Instagram. Send education news, government orders, information to tneducationinfo@gmail.com

Related Articles

Latest Posts