You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் பள்ளி மேலாண்மை குழுவில் ஈடுபடுத்த உத்தரவு

இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள்|

இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் பள்ளி மேலாண்மை குழுவில் ஈடுபடுத்த உத்தரவு

பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு செய்தல் மற்றும் திறம்பட செயல்படுத்த இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களை ஈடுபடுத்த ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உத்தரவிட்டுள்ளது.

TO JOIN IN OUR TELEGRAM LINK - CLICK HERE

இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள்

மாநில திட்ட இயக்குனர் ஆர்.சுதன் வெளியிட்ட அறிக்கை : - 2009ல் நிறைவேற்றப்பட்ட கல்வி உரிமைச்சட்டம் 6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகள் அனைவருக்கும் இலவச கல்வியை அடிப்படை உரிமையாக்கியுள்ளது. பள்ளிகளின் அன்றாட செயல்பாடுகளை கண்காணிக்கவும் அனைத்து குழந்தைகளுக்கும் தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்யவும் ஆண்டுதோறும் வளர்ச்சி திட்டம் தயாரித்து செயல்படுத்தவும் அனைத்து அரசு பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழுவை அமைப்பதை கல்வி உரிமை சட்டம் கட்டாயமாக்கியுள்ளது.

பள்ளி மேலாண்மை குறித்து முழு தகவல்களை அறிய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து படிக்கவும்

பள்ளி மேலாண்மை குழு என்றால் என்ன?

அறிவோம் பள்ளி மேலாண்மைக் குழு பணிகள்

பள்ளி செல்லா குழந்தைகளின் சேர்க்கையில் பள்ளி மேலாண்மைக் குழுவின் பங்கு

பள்ளி மேம்பாட்டு திட்டம் என்றால் என்ன?

பள்ளி மேலாண்மை குழு சமூக தணிக்கை

அரசுப் பள்ளிகளில் உள்கட்டமைப்பு எப்படி இருக்க வேண்டும்?

பள்ளி சுகாதாரம் எவ்வாறு திறம்பட பராமரிப்பது?

குழந்தைகள் அடிப்படை உரிமைகள் என்ன ?

அறிவோம் பாலினச் சமத்துவம்

பள்ளி செயல்பாடுகள்பள்ளி மேலாண்மை குழு

பள்ளிகளில் பேரிடர் மேலாண்மை பங்கு என்ன?

பள்ளி மேலாண்மை குழுவை மறு சீரமைப்பு செய்து திறம்பட செயல்படுத்துவதற்காக முதன்மை பயிற்றுநர்களுக்கும், மாவட்ட கருத்தாளர்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டது.

தமிழ்நாட்டில் தற்போது அனைத்து மாவட்டங்களிலும் 1.70 லட்சம் தன்னார்வலர்கள் மூலம் இல்லம் தேடி கல்வி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பள்ளி மேலாண்மை குழுக்களை மறுசீரமைப்பு செய்வதற்கு பெற்றோர்களுக்கு விழிப்புணர்வும், பெற்றோர்களை பள்ளியில் நடைபெறும் விழிப்புணர்வு மற்றும் மறு சீரமைப்பு நடைபெறும் நாட்களில் பள்ளிக்கு அழைத்து வர தன்னார்வலர்கள் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து தன்னார்வலர்களுக்கு பள்ளி மேலாண்மை குழுச் செயல்பாடுகளை பற்றிய புரிதலை தன்னார்வலர்களுக்கு உருவாக்குவதற்கான வழிகாட்டுதல் பயிற்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள்
இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள்

இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் அறிவுரை

இல்லம் தேடி கல்வி மையங்களில் பள்ளி மேலாண்மை குழு குறித்த விளக்க கூட்டங்கள் நடத்துவதற்கான (மார்ச் 18 மற்றும் 19 அறிவுறுத்தல்கள்)

  • இல்லம் தேடி கல்வி மையம் அமைந்துள்ள குடியிருப்பு பகுதியை சேர்ந்த பெற்றோர்களுக்கு பள்ளி மேலாண்மை குறித்து எடுத்து கூறுதல்
  • பள்ளி மேலாண்மை குழு தொடர்பான முதலமைச்சரின் காணொளி மற்றும் பிற காணொளி படங்களை பெற்றோர்கள் பாா்க்கச் செய்தல்
  • பள்ளி மேலாண்மை குழுவின் பொறுப்புகளையும் கடமைகளையும் பெற்றோர்களுக்கு எடுத்து கூறுதல்
  • பள்ளி மேலாண்மை குழு மறுசீரமைப்பு குறித்து பெற்றோர்களுக்கு எடுத்துக்கூறி பள்ளியில் நடக்கும் பெற்றோர் கூட்டங்களில் அனைத்து பெற்றோர்களையும் பங்கேற்கச் செய்தல்
பள்ளி மேலாண்மை குழுக்களை வலுப்படுத்திட பள்ளிகளில் பெற்றோர் மார்ச் 20

  • இல்லம் தேடி கல்வி மைய தன்னார்வலர்கள், தங்களின் மையத்திற்கு வரும் குழந்தைகளின் பெற்றோர்களை இக்கூட்டத்திற்கு அழைத்து வருதல்.
  • இக்கூட்டம் காலை 10 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை 2 மணி நேரம் நடத்தப்பட வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை பள்ளியின் தலைமையாசிரியர் செய்திடல் வேண்டும்.
  • பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் முழுமையாக பங்கேற்பதை தலைமையாசிரியர் உறுதி செய்திடல் வேண்டும். அனைவருக்கும் தேநீர் மற்றும் சிற்றுண்டி வழங்கப்பட வேண்டும்.
  • பள்ளி மேலாண்மை குழு தொடர்பான முதலமைச்சரின் காணொளி மற்றும் பிற காணொளி படங்களை பெற்றோர்கள் பார்க்கச் செய்தல், கல்வித்துறை மூலம் வெளியிடப்படும் பிரசுரங்களை வழங்குதல்
  • ஒவ்வொரு குறுவள மைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தன்னார்வலர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூட்டங்களின் எண்ணிக்கையை தீர்மானிக்க வேண்டும்.
மேலும் பயிற்சிக்கான செலவினத்தை அந்தந்த மாவட்ட எம்எம்இஆர் நிதியிலிருந்து மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. பயிற்சிக்குரிய வழிகாட்டுதலை பின்பற்றி பள்ளி மேலாண்மை குழு விழிப்புணர்வு எவ்வித புகாருக்கும் இடமளிக்கா வண்ணம் சிறப்பாக நடத்திட அனைத்து மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.