அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
33.7 C
Tamil Nadu
Saturday, September 23, 2023
அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

Illam Thedi Kalvi PDF Download| இல்லம் தேடி கல்வி திட்டம் என்றால் என்ன

Illam Thedi Kalvi PDF Download | இல்லம் தேடி கல்வி திட்டம் என்றால் என்ன

Table of Contents

Illam Thedi Kalvi PDF Download

கொரோனா பெருந்தொற்று பொது முடக்க காலங்களில், அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலுகின்ற மாணவர்களின் கற்றல் இடைடெவளி / இழப்புகளை குறைத்திடும் வகையில் “இல்லம் தேடி கல்வி” திட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படுகிறது.

“இல்லம் தேடி கல்வி” திட்டமானது, மாநில அரசின் 100 சதவீத நிதிப் பங்களிப்பின்கீழ், ரூ.200 கோடி மதிப்பீட்டில் தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்படும்.

இல்லம் தேடி கல்வி நோக்கம்

கொரோனா பெருந்தொற்று பரவல் சார்ந்த பொது முடக்க காலங்களில், அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலுகின்ற மாணவர்களின் கற்றல் இடைவெளி மற்றும் இழப்புகளைச் சரி செய்தல்.

Illam Thedi Kalvi இல்லம் தேடி கல்வி திட்டக்குறிக்கோள்

 • பள்ளி நேரங்களைத் தவிர, பள்ளி வளாகங்களுக்கு வெளியே, மாணவர்கள் வசிப்பிடம் அருேக சிறிய குழுக்கள் அடிப்பைடயில், சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் தன்னார்வலர்களின் பங்கேற்புடன் மாணவர்களுக்கு கற்றல் வாய்ப்பை வழங்குதல்.
 • மாணவர்கள், பள்ளிச் சூழலின்கீழ் ஏற்கனேவ பெற்றுள்ள கற்றல் திறன்களை ““இல்லம் தேடி கல்வி” திட்டச் செயல்பாடுகளின் வாயிலாக மீண்டும் வலுப்படுத்துதல்.
 • இத்திட்டம் 6 மாதகாலத்திற்கு, தினசரி குறைந்தபட்சம் 1 முதல் 1½ மணி நேரம் (மாலை 5 முதல் 7 மணி வைர) மாணவர்களுக்கு கற்றல் வாய்ப்பை வழங்கி அவர்களை அன்றாட கற்றல் செயல்பாடுகளில் எளிய முறையில் படிப்படியாக பங்கேற்க செய்தல்

இல்லம் தேடி கல்வி திட்ட செயல்பாட்டு வழிமுறைகள் :

 • தமிழகத்தில் 92,297 குடியிருப்புகளில் உள்ள 34, 05,856 மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8ம் ஆம் வகுப்பு வரை கல்வி பயின்று வருகின்றனர். கொரோனா பெருந்தொற்று முடக்க காலங்களில் பள்ளிகள் செயல்படாததால் மாணவர்களிைடேய கடுமையான கற்றல் இழப்பை ஏற்படுத்தியது.
 • இந்த கிராமப்புற குடியிருப்பு அடிப்படையிலான வெளியீட்டு திட்டமானது, குழந்தைகள் இடையே கற்றல் இழப்புகளை குறைக்க உதவும். இது ஒரு தன்னார்வ அடிப்படையிலான திட்டம் என்பதால், இந்த திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த சமூகத்தில் தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.
 • கிராம அளவில் சமூக அமைப்புகளை ஈடுபடுத்தி சமுதாய ஒருங்கிைணப்பை ஏற்படுத்த வேண்டும். “இல்லம் தேடி கல்வி” திட்டத்தின் செய்தியை தெரு நாடகங்கள், பொம்மலாட்டம், நடனம் மற்றும் பாடல்கள் போன்றவற்றின் மூலம் உள்ளூர் நாட்டுப்புற கலைஞர்களின் உதவியுடன் பல்வேறு தகவல் தொடர்பு பிரச்சாரங்கள், கல்விசார் நிகழ்வுகள் மேற்கொண்டு கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
 • பள்ளி அளவில், திறன் மேம்பாட்டு செயல்பாடுகள், சுவர் ஓவியம் போன்றவை ஏற்பாடு செய்யப்பட உள்ளன. “இல்லம் தேடி கல்வி” திட்டம் சார்ந்த சுவெராட்டிகள், துண்டு பிரசுரங்கள் மற்றும் பதாகைகள் ,கிராமங்களில் அனைவருமும் காணும் வண்ணம் வைத்திட வேண்டும்.
 • இளைஞர்களின் கவனத்தை ஈர்க்க, மாவட்ட அளவில் மிதிவண்டி பேரணிகள் மற்றும் மராத்தான் தொடர் ஒட்டம் நடத்தப்பட உள்ளன. நடமாடும் மொபைல் வேன்களில் கலைஞர்களை கொண்டு கலை கலாச்சார நடனம் மற்றும் “இல்லம் தேடி கல்வி” உணர்வை பரப்பும் பாடல்கள் போன்றவை நடத்த  திட்டமிடப்பட்டுள்ளது.
 • மாநில அளவில், IEC நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, சமூக ஊடகங்களில் விளம்பர பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படும். தொலைக்காட்சி, வானொலி மற்றும் பிற தகவல் தொடர்புக் கருவிகள் வாயிலாக மாநிலத் தலைமை மற்றும் பிரபலங்கள் மூலம் செய்திகள் தயாரிக்கப்பட்டு ஒளிபரப்பப்படும்.
 • கிராம அளவில், பொருத்தமான “இல்லம் தேடிக் கல்வி” கற்பித்தல் இடங்கள் பாதுகாப்பான, சுகாதாரமான மற்றும் குழந்தைகளுக்கு அணுகக்கூடிய வகையில் தேர்வு செய்யப்பட வேண்டும். போதுமான மின்சாரம் மற்றும் தண்ணீர் வசதி உறுதி செயப்பட வேண்டும் மற்றும் தமிழக அரசால் வழங்கப்பட்ட கோவிட் தொடர்பான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.
 • தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் மதச்சார்பற்ற மற்றும் பாகுபாடற்றதாக இருக்க வேண்டும், இதனால் அந்த பகுதியில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் இடமளிக்க முடியும்.
 • கிராமக் குடியிருப்புகளுக்குள் அரசு கட்டிடங்கள், சமுதாயக் கூடங்கள் போன்றவற்றில் உள்ள இடங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இந்த திட்டம் முழுவதும் தன்னார்வலர்களின் தொண்டு உணர்வுகளின் அடிப்படையில் (spirit of volunteerism) இயக்கப்படும்.
 • “இல்லம் தேடி கல்வி” என்ற செய்தியை எடுத்துச் செல்வதை தவிர, IEC நடவடிக்கைகள் தன்னார்வலர்களுக்கு இந்த முயற்சியில் பங்கேற்க ஒரு சிறந்த அழைப்பை வழங்கும் தன்னார்வலரை பணியமர்த்தல் என்பது தன்னார்வலர் பதிவு, தன்னார்வலர் தேர்வு, தன்னார்வலர் பயிற்சி மற்றும் தன்னார்வலர் பின்னூட்டம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
 • தன்னார்வலரை பயன்படுத்துவதற்கான அனைத்து நிலைகளையும் எளிதாக்கும் பொருட்டு, “இல்லம் தேடி கல்வி” இணையதள போர்ட்டல் மற்றும் “இல்லம் தேடி கல்வி” விண்ணப்பம் வெளியிடப்படும். இவற்றை பயன்படுத்தி, பள்ளி-மாணவர் – தொண்டர் – கிராம தகவல் தொடர்பு தடையின்றி நடக்கும். ஒரு தன்னார்வலர் பணியில் இருந்து விடுபட விரும்பினால், அந்த இடைவெளியை பூர்த்தி செய்ய போதுமான தன்னார்வலர்கள் இருப்பில் உறுதி செய்தல் வேண்டும்.
 • இந்த தன்னார்வலர்களுக்கு குழந்தைகளை கையாள்வது மற்றும் கற்பித்தல் – கற்றல் பொருட்களை பயன்படுத்துதல் சார்ந்து தீவிரமான மற்றும் விரிவான பயிற்சி மாதத்திற்கு ஒருமுறை ஒன்றிய அளவில் வழங்கப்படும். இதேபால், வாரத்திற்கு ஒரு முறை பள்ளியுடன் தொடர்பு கொள்ள ஏற்பாடு செய்யப்பட வேண்டும். அதே பகுதியை சோ்ந்த பெண் தன்னார்வலர்களுக்கு முன்னுரிைம அளிக்கப்பட வேண்டும். 12 ஆம் வகுப்ப தேர்ச்சி பெற்ற தன்னார்வலர்கள், 1-5 வகுப்புகளில் படிக்கும் குழந்தைகளை கையாள தகுதியுைடயவர்கள்.
 • இதேபோல், பட்டப்படிப்பு தகுதி முடித்த தன்னார்வலர்கள் 6-8 வகுப்புகளில் படிக்கும் குழந்தைகளை கையாள தகுதியுைடயவர்கள். ஒரு பொதுவான விதிமுறையாக 20 குழந்தைகளை ஒரு தன்னார்வலர் கைாள வேண்டும். ஒரு கிராமத்தில் கற்பிக்க அதிகமான குழந்தைகள் இருந்தால், கூடுதல் தன்னார்வலர்களை தெரிவு செய்து நியமிக்க வேண்டும்.
 • ஒரு பகுதியில் உள்ள குழந்தைகள் வெவ்வேறு வயதினராக இருந்தால், குழந்தைகள் பின்வரும் 2 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு இக்குழந்தைகளுக்கு தனித்தனியே தன்னார்வலர்கள் நியமிக்கப்படுவார்கள் (1) – வகுப்புகள் 1 முதல் 5 வைர, (2) – வகுப்புகள் 6 முதல் 8 வரை.
 • ஒரு வருடத்திற்கும் மேலாக குழந்தைகள் வழக்கமான, முறையான கற்றலில் ஈடுபடாததால் அவர்கள் இடையே உருவாகியுள்ள கற்றல் இடைவெளியை இணைக்கும் பாலமாக தூண்டுதல் நுட்பங்கள் உள்ளடக்கிய கல்வியியல் உத்திகள் ஒவ்வொரு குழந்தைக்கும் உதவுகிறது.
 • இத்திட்டத்தின் முதல் 10 நாட்கள் கற்றல் கற்பித்தல் நிகழ்வுகள் பாடத்திட்டத்தை குழு சார்ந்த பங்கேற்பு, அனுபவ கற்றல் செயல்பாடு அடிப்படையிலான கற்றல் போன்றவற்றிக்கு முன்னுரிைம அளிக்கப்படும். இதன் தொடர்ச்சியாக எண்கள், அடிப்படை செயல்பாடுகள், அளவீடு, வடிவியல், பின்னங்கள் போன்றவைகள் படிப்படியாக கணிதத்தில் அறிமுகப்படுத்தப்படும்.
 • மொழி பாடமாக இருப்பின் கேட்டல், பேசுதல், வாசித்தல், எழுதுதல், புரிதல் ஆகியவைகள் வலியுறுத்தப்படும். சுற்றுச்சூழல் அறிவியல் அன்றாட வாழ்க்கை போன்றவற்றிலும் உள்ளீடுகள் வழங்கப்படும். மாநிலக் கல்விவியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் மூலம் “இல்லம் தேடிக் கல்வி” வகுப்புகளுக்குரிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. சராசரியாக, தன்னார்வலர்களின் மாணவர்களுடனான ஈடுபாடு வாரத்திற்கு குறைந்தது 6 மணி நேரம் இருக்க வேண்டும்.
Illam Thedi Kalvi PDF Download
Illam Thedi Kalvi PDF Download

அதாவது தினசரி 1 முதல் 2 மணி நேரம் வரை உள்ளூர் சூழலுக்கு ஏற்ப அமைக்கப்பட வேண்டும். மாணவர்களின் கற்றல் இடைவெளியை குறைக்கும் விதமாக இல்லம் தேடிக் கல்வி செயல்பாடு நடைபெறுகிறதா என்பதை உறுதி செய்ய பள்ளியில் குறிப்பிட்ட கால இடைவெளியில் மதிப்பீடு செய்யப்பட வேண்டும்.

இத்திட்டத்தை முழமையாக செயல்படுத்தும்போது தன்னார்வ தொண்டு உணர்வை கொண்டு குழந்தையின் கற்றல் இழப்பை பூர்த்தி செய்யும்.  அதே வேளையில் குழந்தைகளின் பெற்றோர்களின் மாணவர்களின் கட்டாய கல்வி உரிமைச் சட்ட விதிகள் மற்றும் பள்ளி மேலாண்மை குழுவின் ஒரு பகுதியாக பெற்றோர்களாகிய தங்களின் கடமை மற்றும் பொறுப்பு போன்றவை சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் மிகவும் அவசியமாகும். மேற்கூரிய அம்சங்களில் முழு கவனம் செலுத்த வேண்டும்.

அனைத்து நிலைகளிலும் பங்குதாரர்களை பாராட்டு சான்றிதழ்கள், விருதுகள் மூலம் பணமாக அல்லாமல் வழங்கி ஊக்குவிக்கும் செயல்திட்டத்தினை உருவாக்கிடவும் இத்திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் முடிவில் தன்னார்வலர்கள் மற்றும் சமூக அமைப்புகளுக்கு செயல்திறன் அடிப்படையிலான ஊக்கத் தொகையும் வழங்கப்பட உள்ளது.

“இல்லம் தேடிக் கல்வி” திட்டம் நவம்பர் 1, 2021 முதல் 2 வாரங்களுக்கு, 12 மாவட்டங்களில் தொடங்குவதற்கு (கல்வியில் பின்தங்கிய மாவட்டங்கள் கடலூர், திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், நீலகிரி, தஞ்சாவூர், திருச்சி மற்றும் விழுப்புரம்) திட்டமிடப்பட்டுள்ளது.

முன்னோட்ட திட்டமாக செயல்படுத்தப்பட்ட இத்திட்டத்தின் தாக்கம் மற்றும் விளைவுகளின் அடிப்படையில் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படும். மாநில அளவிலான இத்திட்டம் 2021-22 கல்வியாண்டுடன் இணைந்து மே 2022 வரை தொடரும்.

இல்லம் தேடி கல்வி திட்ட அமைப்பு முறை

இல்லம் தேடிக் கல்வி திட்டத்தை மாநிலம் முழுவதும் சிறப்பாகச் செயல்படுத்த 4 அடுக்கு குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

 • நிலை 1 – மாநில அளவிலான குழு
 • நிலை 2 – மாவட்ட அளவிலான குழு
 • நிலை 3 – ஒன்றிய அளவிலான குழு
 • நிலை 4 – பள்ளி மேலாண்மை குழு

நிலை 1 – மாநில அளவிலான குழு

llam Thedi Kalvi
llam Thedi Kalvi

மாநில அளவிலான குழுவின் பொறுப்புகள்

 • மாநில அளவில் நடைமுறைப்படுத்துவதற்காக உத்திகளை திட்டமிடல்.
 • “இல்லம் தேடி கல்வி” செயல்திட்டம் சார்ந்த வழிகாட்டுதல்கள் வழங்குதல்.
 • மாநிலம் முழுவதும் தகவல், கல்வி மற்றும் தகவல் தொடர்பு செயல்பாடுகளை உருவாக்குதல்.
 • தன்னார்வலர்கைள தேர்ந்தெடுத்தல், இத்திட்டத்தில் ஈடுபடுத்துதல் மற்றும் பயிற்சியளித்த சார்ந்த வழிகாட்டுதல்கைள வழங்குதல்.
 • இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில் (மாவட்டம், ஒன்றியம் மற்றும் SMC) ஈடுபட்டுள்ள அனைத்து குழுக்களுக்கும் பயிற்சி அளித்தல் செயல்படுத்துதல்.
 • மாவட்ட அளவிலான குழு / மாவட்ட பிரதிநிதிகளுடன் அவ்வப்போது கூட்டங்கள் நடத்தி இல்லம் தேடி சென்று செயல்பாடுகளை கண்காணித்தல் கண்காணித்தல்.
 • குறிப்பிட்ட கால இடைவெளியில் தாக்கம் சார்ந்து மதிப்பீடு நடத்துதல்.
 • அனைத்து நிலைகளிலும் வெவ்வேறு பங்குதாரர்களுக்கு ஊக்க தொகை கட்டமைப்பை திட்டமிடுதல்
 • நிதி மேலாண்மை திட்டமிடல்
 • READ ALSO: Illam Thedi Kalvi Thittam Guide PDF Download

மாநில அளவில் கல்விசார் மற்றும் தொழில்நுட்ப உதவி

1. கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் (TLM )

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், ஏற்கனேவ உள்ள கற்றல் கற்பித்தல் உபகரணங்கைள அடையாளம் கண்டு, ஒருங்கிணத்து தேவையின் அடிப்படையில் புதிய உபகரணங்கைள ஆலோசனை குழுவின் உதவியுடன் தயாரிக்கும். பள்ளிகளில் ஏற்கனேவ உள்ள கற்றல், கற்பித்தல் உபகரணங்கைளயும் உபேயாகிக்கலாம்.

2. “இல்லம் தேடி கல்வி செயலி

மாநில அளவிலான குழு “இல்லம் தேடிக் கல்வி” செயலிக்கான தேவகைளையும் செயல்முறைகளையும் நிர்ணயிக்கிறது.

நிலை 2– மாவட்ட அளவிலான குழு;

llam Thedi Kalvi PDF 2022
llam Thedi Kalvi PDF 2022

மாவட்ட அளவிலான குழுவின் பொறுப்புகள்

 • மாவட்ட, ஒன்றிய மற்றும் பள்ளி அளவில் (தகவல் கல்விசார் மற்றும் தகவல் தொடர்பு) செயல்பாடுகள், பயிற்சி, தன்னார்வலர் பதிவு (சேவை மையங்கள் சம்பந்தப்பட்டவை) உட்பட இல்லம் தேடி கல்வி செயல்பாடுகளை திட்டமிடல் செயல்படுத்தல்.
 • ஒன்றிய அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்தல்.
 • மாவட்ட அளவிலான குழுவின் ஒரு அங்கம் வகிக்கும், கல்வி சார் மற்றும் சமூக ஒருங்கிணைப்பில் மிகுந்த அனுபவம் உள்ளவர்கள் மற்றும் மாவட்ட மற்றும் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்களுடன் இணைந்து செயல்பட் வேண்டும்.
 • இல்லம் தேடி கல்வி மையங்களுக்கு தேவையான வளங்கள் மற்றும் நிதியினை ஒன்றிய மற்றும் பள்ளி மேலாண்மை குழுவிற்கு வழங்குதல்.
 • மாவட்ட அளவிலான குழுக்கள் மாதம் குறைந்த இருமுறையாவது கூட வேண்டும்
 • இல்லம் தேடி கல்வியை சிறப்பாக செயல்படுத்துவதை உறுதி செய்யும் வகையில் மாவட்ட அதிகாரிகள் மற்றும் மாவட்ட அளவிலான குழுவினர் அவ்வப்போது பார்வையிடுதல் வேண்டும்.
 • இல்லம் தேடிக் கல்வியின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்தல், கண்காணித்தல் மற்றும் ஆவணப்படுத்துதல்.
 • ஒன்றிய மற்றும் மாநில அரசுகளால் வழங்கப்பட்டுள்ள கொரோனா தொற்று தொற்று பரவலை தடுப்பதற்கான சமீபத்திய நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றப்படுவதை உறுதி செய்தல்.
 • மாவட்டம் முழுவதும் உள்ள தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் ஈடுபடுவதை உறுதி செய்தல்.
 • தன்னார்வலர்களுக்கு முதற்கட்டமாக ஒன்றிய அளவிலும், அடுத்த கட்டமாக குறு வள மைய அளவிலும் பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும்.
 • மாவட்ட அளவில் இத்திட்டத்திற்கென பிரத்யேகமான ஒரு ஆசிரியர் மாற்றுப் பணியில் அமர்த்தப்பட வேண்டும்.

நிலை 3 – ஒன்றிய அளவிலான குழு;

llam Thedi Kalvi PDF 2022
llam Thedi Kalvi PDF 2022

ஒன்றிய அளவிலான குழுவின் பொறுப்புகள்;

 • மாவட்ட அளவிலான குழுவுடன் ஒருங்கிணைத்து, இல்லம் தேடி கல்வியை செயல்படுத்த பள்ளி மேலாண்மை குழுக்களுக்கு உதவுதல்.
 • வட்டார அளவில், வளமைய மேற்பார்வையாளர் மற்றும் அனைத்து  வளமைய  ஆசிரியப் பயிற்றுநர்களும் தன்னார்வலர்கள் மற்றும் ஆசிரியர்களை ஊக்கப்படுத்தி புத்தாக்கப் பயிற்சி அளிக்க பொறுப்பேற்றல்.
 • தற்போதுள்ள பள்ளி மேலாண்மை குழுக்களுக்கு புத்தாக்கப் பயிற்சி செய்தல்.
 • பள்ளி மேலாண்மை குழுக்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் “இல்லம் தேடிக் கல்வி” மையங்களுக்கு பொருத்தமான இடங்கைள உறுதி செய்தல்.
 • இல்லம் தேடிக் கல்வி மையங்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தை கண்காணித்தல்.
 • இல்லம் தேடி கல்வி சிறப்பாக செயல்படுத்துவதை மாவட்ட அளவிலான குழுவினர் அவ்வப்போது பார்வையிடுதல்.
 • ஒன்றிய மற்றும் மாநில அரசுகளால் வழங்கப்பட்டுள்ள கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கான சமீபத்திய நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்தல்.
 • கிராம அளவில், பெரு நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வை ஏற்படுத்தி இத்திட்டத்தை செயல்படுத்துதல்

நிலை 4: பள்ளி மேலாண்மை குழு : (ஏற்கனேவ இருக்கும் அமைப்பு)

பள்ளி மேலாண்மை குழு பொறுப்புகள்:

பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட செயலியை பயன்படுத்தி இல்லம் தேடி கல்விக்கான தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும் (உள்ளூர் தொண்டர்கள், பெண் தன்னார்வலர்கள், தன்னார்வத் தொண்டுக்கான ஆர்வம் மற்றும் கல்வி போன்றவற்றிற்கு விருப்பம் கொண்டவர்களுக்கு முன்னுரிமை அளித்தல்).

 • சமூக ஒருங்கிணைப்பு மற்றும் தகவல், கல்விசார், தகவல் தொடர்பு செயல்பாடுகளுக்கு உதவுதல்.
 • கிராமங்களுக்கு அருகில் உள்ள இல்லம் தேடி கல்வி மையங்களுக்கான இடத்தை அடையாளம் காணுதல்
 • தண்ணீர், மின்சாரம் மற்றும் மையங்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் போன்ற தேவையான அனைத்து வசதிகளும இருப்பதை உறுதிப்படுத்துதல்.
 • குழந்தைகளுடன் தன்னார்வலர்களை இணைத்தல் மற்றும் தன்னார்வலர்கள் வருகை தராத நிலையில் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்.
 • குழந்தைகள் மற்றும் தன்னார்வலர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல்.
 • இல்லம் தேடி கல்விக்காக ஒரு நிகழ்ச்சி / விழாவை ஏற்பாடு செய்தல்.
 • குழந்தைகளுடனான தன்னார்வப் பிணைப்பை வலுப்படுத்த நடவடிக்கைகள் எடுத்தல் மற்றும் அதுேபாலவே ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கும் குழந்தைகளுடனான தன்னார்வப் பிணைப்பை வலுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுதல்
 • பள்ளி மற்றும் சமூக அளவிலான நடவடிக்கைகளின் போது தன்னார்வலர்கைள ஈடுபடுத்துதல்.
 • மத்திய மற்றும் மாநில அரசுகளால் வழங்கப்பட்டுள்ள கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கான சமீபத்திய நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் நெறிமுறைகள் பின்பற்றப்படுவைத உறுதி செய்தல்

தலைமை ஆசிரியர்கள் பொறுப்புகள்:

 • மாணவர்களுக்கு இல்லம் தேடி கல்வி மையங்களின் சுத்தம், சுகாதாரம் மற்றும் அணுகலை உறுதி செய்தல்
 • வாரந்தோறும் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கைள ஈடுபடுத்துதல்.
 • பள்ளிகளில் இருந்து தன்னார்வலர்கள் / மையங்களுக்கு கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் வழங்கப்படுவைத உறுதி செய்தல்
 • மையங்களின் செயல்பாடு மற்றும் குறைகளை நிவர்த்தி செய்வது குறித்து மாணவர்களுடன் தொடர்ந்து தொடர்பு கொள்வது.
 • ஒரு இல்லம் தேடி கல்வி மையத்திற்கு தெரிவு செய்யப்படும் சார்ந்த தன்னார்வலர் பிற இல்லம் தேடி கல்வி மையத்திற்கு நியமிக்கப்படாததை குறு வள தொகுப்பு தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்.

Illam Thedi Kalvi PDF 2021 – இல்லம் தேடி கல்வி திட்டம் PDF 2021

Related Articles

15 COMMENTS

Comments are closed.

Latest Posts