இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ராபர்ட் தமிழக முதல்வர் அவர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது,
தமிழக மக்களின் வாழ்வுரிமைக்காக சமூகநீதி, சம உரிமை, சகோதரத்துவத்தை நிலை நிறுத்துவதற்காகவும், தமிழகத்தை கல்வி, சுகாதாரம், மருத்துவம், விவசாயம், பொருளாதாரம் போன்றவற்றில் இந்திய தேசத்தில் முதன்மையான மாநிலமாக மாற்றுவதற்காக தமிழக மக்களின் நலன் காக்கவும், தாங்கள் எடுக்கவும் அனைத்து முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருந்து தமிழகத்தை முன்னேற்ற அரும்பாடுபடுவோம் என மனதார கூறிக்கொள்கிறேன்.
தமிழகம் சந்தித்த ஒவ்வொரு பேரிடர்களின் போதும் எங்களின் இயக்கத்தின் சார்பாக இதுவரை தொடர்ந்து பல்வேறு உதவிகளை செய்துவந்துள்ளோம். தற்போது கொரோனா தொற்றின் இரண்டாம் அலை மிக தீவிரமாக தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது காரணமாக ஆக்ஸிஜன் பற்றாக்குறையும் தடுப்பூசி பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது.
இரு நாட்களுக்கு முன்பாக, பொதுமக்கள் அனைவரும் தங்களால் இயன்ற உதவிகளை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நிதி அளிக்குமாறு தங்களால் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் சார்பாக பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களின் 2021 மே மாதத்தில் ஒரு நாள் ஊதியத்தை மனமுவந்து முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்குகின்றோம். பேரிடர் நிவாரண பணிக்களுக்காக இந்த நிதியை பயன்படுத்தி கொள்ளுமாறு பணிவுடன் வேண்டுகிறோம்.
இவ்வாறு, அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.
Join WhatsApp Group | WhatsApp Group |
To Follow Telegram : | Telegram Link |
To Follow Facebook | Facebook Link |
To Follow Twitter | Twitter Link |
To Follow Instagram | Instagram Link |
To Follow Youtube | Youtube Link |