You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

How To Know Your PLAYSCHOOL AMENITIES From Zero To Hero

PLAYSCHOOL AMENITIES norms|

How To Know Your PLAYSCHOOL AMENITIES From Zero To Hero மழலையர் பள்ளி வசதிகள்

இந்த பதிவில் நாம் மழலையர் பள்ளிகள் குழந்தைகளுக்கு என்னென்ன வசதிகள் இருக்க வேண்டும் என்பது விரிவாக காண்போம்.

  • Washing Facilities in PLAYSCHOOL
  • Drinking Water Facilities in PLAYSCHOOL
  • Water Storage Tank / Sump Maintenance in PLAYSCHOOL
  • Toilet Facility in PLAYSCHOOL
  • Diaper Facility in PLAYSCHOOL
  • Conclusion

Washing Facilities in PLAYSCHOOL

மழலை பள்ளி நிர்வாகம் மாணவர்களுக்கு என்று பிரத்யேகமாக கை கழுவும் குழாய் அமைத்திருக்க வேண்டும். இதுதவிர விதிகள் படி, சுத்தமான பாத்திரங்கள், தட்டு உணவு உண்ண மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

Drinking Water Facilities in PLAYSCHOOL

எந்த பள்ளியாக இருந்தாலும், அடிப்படையில் குழந்தைகளுக்கு சுத்தமான, பருகதக்க வகையில் குடிதண்ணீர் வழங்க வேண்டும். இதே நிலைான், மழலையர் பள்ளிகளுக்கு பொருந்தும். அதே சமயத்தில், குடிதண்ணீர் பள்ளி கழிப்பிடம் அருகில் இருக்க கூடாது என தெளிவாக கூறுகிறது.

Water Storage Tank / Sump Maintenance in PLAYSCHOOL

மேல்நிலை தேக்க தொட்டி மற்றும் இதர தொட்டிகள் இருந்தால், அடிக்கடி சுத்தம் செய்து முறையாக பராமரிக்க வேண்டும். நீண்ட நாள் தேக்கிவைப்பட்டிருந்த நீர் குழந்தைகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரக்கூடாது. குறிப்பாக, எந்தெந்த தேதியில் தொட்டிகள் பராமரிக்க வேண்டும் என தேதியிட்டு, அதனை பள்ளியில் பராமரிக்க வேண்டும் என்று விதிகள் கூறுகிறது. அதே சமயத்தில், பைப்களில் ஏதாவது உடைப்பு, விரிசல் இருந்தால், அதனை சரிசெய்து, தண்ணீர் வீணாகமல் பாதுகாக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொட்டிகள் மூடி வைத்திருக்க வேண்டும்.

Toilet Facility in PLAYSCHOOL

ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்களுக்கு கழிப்பறை இன்றியமையாதது. குறிப்பாக, மழலையர் பள்ளியில், கழிப்பிடம் நிச்சயமாக இருக்க வேண்டும். குழந்தைகள் பயன்படுத்தும் கழிப்பறைகள் கட்டப்பட்டிருக்க வேண்டும். மேலும், நோய் பாதிப்பு ஏற்படாத வகையில், தூய்மை பணியாளர்கள் கொண்டு கழிப்பறைகளை சுத்தம் செய்ய வேண்டும். கழிப்பறை பயன்பாடு குறித்து, ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இயற்கை உபாதை கழிக்க வேண்டும் என்று கூறினால், அவர்களை கழிவறைக்கு அழைத்து செல்ல வேண்டும்.

Diaper Facility in PLAYSCHOOL

மழலையர் பள்ளி விதி 2015, பள்ளிகளில் டையபர் வசதி ஏற்படுத்தி இருக்க வேண்டும். பெற்றோர் ஒப்புதலுடன், அதனை மாணவர்களுக்கு பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Conclusion

இந்த விதிகள் உங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் முறையான பின்பற்றப்படுகிறதா மற்றும் மேலும் என்னென்ன விதிகள் கூடுதலாக கொண்டு வந்திருக்க வேண்டும் என்று உங்கள் எண்ணோட்டத்தில் பிரதிபலித்திருந்தால் மறக்காமல், கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்.