25.5 C
Tamil Nadu
Wednesday, July 6, 2022

How to get the Certified Copy of Marks (CCM) from the Directorate of Government Examinations ? – மதிப்பெண் சான்றிதழ்களின் சான்றிட்ட நகல் பெறுவது எப்படி ?

What is Certified Copy of Marks (CCM)? – மதிப்பெண் சான்றிதழ்களின் சான்றிட்ட நகல் என்றால் என்ன?

அரசு தேர்வுகள் இயக்ககத்தால் வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழ்களை தவறவிடும் தேர்வர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்களின் சான்றிட்ட மதிப்பெண் நகல் (CCM) வழங்கப்படுகிறது.

What is eligible to get a Certified Copy of Marks (CCM)? – மதிப்பெண் சான்றிதழ்களின் சான்றிட்ட மதிப்பெண் நகல் பெற விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் என்ன ?

அரசு தேர்வுகள் இயக்ககத்தால் வழங்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழ்களை மீள திரும்ப பெற வாய்ப்பு இல்லாத நிலையில் தவறவிட்ட மாணவர்கள் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் ஆவர்.

How to apply to get the Certified Copy of Marks (CCM)? – மதிப்பெண் சான்றிதழ்களின் சான்றிட்ட மதிப்பெண் நகல் பெற எப்படி விண்ணப்பிக்க வேண்டும் ?

மதிப்பெண் சான்றிட்ட மதிப்பெண் நகல் விண்ணப்பங்களை அரசு தோ்வுகள் இயக்ககம் மற்றும் அதன் மண்டல அலுவலகங்களில் கட்டணமின்றி பெற்றுக்கொள்ளலாம். மேலும் நமது இணையதளத்தில் அதன் விண்ணப்பம் வகுப்பு வாரியாக (10, 12 மற்றும் தொடக்க கல்வி பட்டய தேர்வு) கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தேவைப்படுவர்கள் பதவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.

மேல்நிலை மற்றும் பத்தாம் வகுப்பு தேர்விற்கான மதிப்பெண் சான்றிதழ்களின் சான்றிட்ட மதிப்பெண் நகல் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, பள்ளி தேர்வர்கள் தலைமை ஆசிரியரிடமும், தனித்தேர்வர்கள் அவரவா் கடைசியாக பயின்ற அல்லது அருகில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியரிடம் அத்தாட்சி சான்றிதழ் பெற்று அதற்கான கட்டண தொகையினை செலுத்தி, அசல் செலுத்து சீட்டினை விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

இதில் தொடக்க பட்டய தேர்வர்கள் விண்ணப்பத்தில் உள்ள விவரங்களை பூர்த்தி செய்து மதிப்பெண் சான்றிதழ் நகலினை இணைத்து கட்டண தொகையை செலுத்தி, அசல் செலுத்து சீட்டினை சம்மந்தப்பட்ட மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

How much is the fee for applying to get the Certified Copy of Marks (CCM)? – மதிப்பெண் சான்றிதழ்களின் சான்றிட்ட மதிப்பெண் நகல் பெற விண்ணப்ப கட்டணம் எவ்வளவு?

முதல் முறை விண்ணப்பித்து பெறுவதற்கு – ரூ. 305

இரண்டாவது முறை விண்ணப்பித்து பெறுவதற்கு – ரூ. 405

மேற்காண் சான்றிதழுக்கும் மேற்காண் செலுத்து சீட்டுன் மூலம் கருவூல வங்கி கிளைகளில் செலுத்தப்பட வேண்டும்.

அணுக வேண்டிய அலுவலர்கள் யார் ?

பத்தாம் வகுப்பு – தொடக்க கல்வி பட்டயத் தேர்வர்கள் – கல்வித்துறை இணை இயக்குனர் (பணியாளர்) அவர்களை அணுக வேண்டும்.

ஆங்கிலோ இந்தியன், மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் படித்தவர்கள் – கூடுதல் செயலாளர் (மெட்ரிக்) அவர்களை சந்திக்க வேண்டும்.

மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் (பன்னிரென்டாம் வகுப்பு) – இணை இயக்குனர் (மேல்நிலை) அவர்களை அணுக வேண்டும்.

விண்ணப்பங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த பதிவில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்தவும்.

Join WhatsApp Group WhatsApp Group
To Follow Telegram : Telegram Link
To Follow Facebook Facebook Link
To Follow Twitter Twitter Link
To Follow Instagram Instagram Link
To Follow Youtube Youtube Link

Related Articles

2 COMMENTS

  1. சான்றிதழ் எவ்வாறு இருக்கும். அதில் என்ன விவரங்கள் அச்சிட பட்டு இருக்கும். எத்தனை நாட்களில் கிடைக்கும். CCM க்கும் இரண்டும் படி சான்றுக்கும் என்ன வித்தியாசம்.pls tel me sir.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Posts