முதலமைச்சர் மாநில இளைஞர் விருது பெறுவது எப்படி How To Get CHIEF MINISTER’S STATE YOUTH AWARD
Table of Contents
முதலமைச்சர் மாநில இளைஞர் விருது உருவானது எப்படி?
விருது என்பது ஒருவரது திறமை, உன்னதமான செயல்பாடுகளை சமுதாயத்தில் அங்கீகரித்து, ஊக்குவிப்பதே விருதுக்கான அடையாளமாக கருதப்படுகிறது.
அந்த வகையில், 30.07.2014 அன்று தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதி 110ன் கீழ் “சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு, மாநில இளைஞர் விருது வழங்கப்படும் என்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் அறிவித்தார்.
READ ALSO: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நோக்கம்
முதலமைச்சர் மாநில இளைஞர் விருது எப்போது வழங்கப்படும்?
தேர்வு செய்யப்படும் இளைஞர்கள் ஒவ்வொரு சுதந்திர விழான்று மாநில முதல்வர்களால் இந்த விருது வழங்கப்படுகிறது.
முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்க வயது?
15 வயது முதல் 35 வயதுடையவர்கள் மட்டுமே இந்த விருது பெற முடியும். இந்த விருதுக்கு 3 ஆண்கள், 3 பெண்கள் என ஆறு பேருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கான தகுதிகள்

- 15 வயது முதல் 35 வயது வரையுள்ள ஆண், பெண் என இருபாலர் விண்ணப்பிக்கலாம்.
- இவர்கள் சமுதாய நலனுக்கான தொண்டாற்றியிருப்பவர்களாக இருத்தல் வேண்டும்
- அவ்வாறு அவர்கள் செய்த தொண்டு, சமூக, சமுதாயத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தினை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.
- அவர்கள் செய்த சேவையின் தாக்கம் தெளிவாக கண்டறியப்படக் கூடியதாகவும், அளப்பரியதாகவும் இருத்தல் வேண்டும்.
- பள்ளி, கல்லூரி, பொது துறை நிறுவனங்கள், மத்திய, மாநில அரசு பணியில் உள்ளவர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்க தகுதியற்றவர் ஆவர்.
- சமுதாய மக்களிடம் அவர்களுக்குள்ள மதிப்பினை இவ்விருதிற்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும்.
மாநில இளைஞர் விருதுக்கான பரிசு
மாநில இளைஞர்களுக்கான பரிசு ரூ.50 ஆயிரம் ரொக்கம் மற்றும் பாராட்டு பத்திரம்.
விண்ணப்பம் பெறுவது எப்படி
விருதுக்கான விண்ணப்பங்கள் www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்யலாம்.
Join WhatsApp Group | WhatsApp Group |
To Follow Telegram : | Telegram Link |
To Follow Facebook | Facebook Link |
To Follow Twitter | Twitter Link |
To Follow Instagram | Instagram Link |
To Follow Youtube | Youtube Link |
அந்த இணைப்பில் விண்ணப்பப் படிவம் காணவில்லையே ஐயா
We will upload sir soon,
எப்போது விண்ணப்பம் வெளியிடப்படும் குறிப்பிட்ட கணிப்பான தேதி கூற இயலுமா..?
விண்ணப்பம் எப்போது வெளியிடப்படும் ஐயா..?