அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
28.2 C
Tamil Nadu
Tuesday, May 30, 2023

How to Get Approval to Play School from Government ? – ப்ளே ஸ்கூலுக்கு அங்கீகாரம் பெறுவது எப்படி ?

How to Get Approval to Play School from Government ? – ப்ளே ஸ்கூலுக்கு எப்படி அங்கீகாரம் பெறுவது ?

  1. School Approval Process
  2. School Approval Competent Authority
  3. What is the Period to inspect School?
  4. Conclusion

School Approval Process – பள்ளி அங்கீகாரம் பெறுவதற்கான நடைமுறை

முன்னதாக விளையாட்டு பள்ளி அடிப்படை விதிகள் அறி்ந்துகொள்ள, இங்கு கிளிக் செய்யவும்

If like to start to open the play schools or nursery and primary schools, applicants should get permission from educational officer – நீ்ங்கள் ஒரு மாவட்டத்தில் விளையாட்டு பள்ளி அல்லது ப்ளே ஸ்கூல் நடத்த விரும்பினால், மாவட்ட பள்ளி கல்வித்துறையிடம் துவக்க அனுமதி பெற்று, அதிகாரிகள் ஆய்வுக்கு பின், விதிமுறைகள் சரியாக உள்ளதா என்று சாிபார்த்து பின்புதான் அனுமதி பெற்று நடத்த முடியும். அதேபோன்று கொடுக்கப்பட்ட விதிமுறைகள் பின்பற்றப்படாமல் பள்ளிகள் செயல்பட்டு வந்தால், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளால் சம்மந்தப்பட்ட பள்ளிகளை மாவட்ட ஆட்சியர் அனுமதி பெற்று பள்ளியை மூட அதிகாரம் அவருக்கு உண்டு.

யாரிடம் அனுமதி பெற வேண்டும் என்ற சந்தேகம் உங்களுக்கு எழும். 2018ம் ஆண்டு முன்பு மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் என்ற பதவியிடம் இருந்தது. இவரிடம் தான் பள்ளிகள் அங்கீகாரம் பெற்று வந்தனர். தற்போது அந்த பணியிடம் கல்வித்துறையால் நீக்கப்பட்டது. அதற்கு பதிலாக மாவட்ட கல்வி அலுவலரிடம்தான் தற்போது பள்ளி துவங்குவதற்கு அங்கீகாரம் பெற வேண்டும்.

School Approval Competent Authority – பள்ளிக்கு அங்கீகாரம் கொடுக்கும் முதன்மை கல்வி அலுவலர்

பள்ளிக்கு அங்கீகாரம் கொடுக்கும் அதிகாரம் படைத்தவர் முதன்மை கல்வி அலுவலர் ஆவர். நீங்கள் பள்ளிக்கு விண்ணப்பிக்கும் போது, விண்ணப்பம் கட்டணமாக ரூ 5 ஆயிரம் செலுத்த வேண்டும் என பள்ளி கல்வித்துறை தெரிவிக்கிறது. நீங்கள் விண்ணப்பம் வழங்கிய பின்னர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவின் பேரில், குழு அமைத்து விதிமுறைகள் சரியாக பின்பற்றப்பட்டுள்ளதா என்பதை பள்ளிகளில் ஆய்வு செய்வார்கள். இந்த குழுவில், மாவட்ட கல்வி அதிகாரிகள், வட்டார கல்வி அதிகாரிகள், மூத்த தலைமையாசிரியர்கள் உள்ளிட்டோர் இடம்பெறுவார்கள்.

What is the Period to inspect the play School? – கல்வி அதிகாரிகள் பள்ளியில் ஆய்வு செய்ய என்ன கால அவகாசம்

அதாவது விதி என்ன சொல்கிறது என்றால், புதிய பள்ளி தொடங்க விண்ணப்பம் கொடுத்து முதல் நாளில் இருந்து, முப்பது நாட்களுக்குள் கல்வி அதிகாரிகள் பள்ளியில் ஆய்வு பணிகள் முடித்து, பள்ளிகள் துவங்க அனுமதி இருக்கிறதா இல்லையா என்பதை விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்க வேண்டும். அவ்வாறு, அதிகாரிகள் தங்களது கடமையை செய்ய தவறினால், பள்ளி கல்வி ஆணையர் அவா்களிடம் கடிதம் வாயிலாக எழுத்து வடிவில் புகார் தெரிவித்து உங்கள் பள்ளிகளை ஆய்வு செய்ய வைக்க முடியும்.

Conclusion

அரசு கொடுத்துள்ள விதிமுறைகள் சரியாக பின்பற்றினால், பள்ளிக்கு நல்லது, படிக்க வரும் மாணவர்களுக்கும் பாதுகாப்பாக இருக்கும். அதே போன்று கல்வி அலுவலர்கள் பள்ளிகள் ஆய்வு செய்யும்போது அனைத்தும் சரியாக உள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும். பணத்திற்கு விலைபோகாமல், சரியாக கடமையை செய்தால் யாருக்கு எந்த பிரச்னையும் எழாது. – How to Get Approval to Play School from Government தொடா்ந்து அடுத்த பதிவில் வரிசையாக பார்க்க உள்ளோம்.

Related Articles

1 COMMENT

Comments are closed.

Latest Posts