You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

கல்வி கட்டணம் குறித்து கவலை வேண்டாமே

கல்வி கட்டணம் குறித்து கவலை வேண்டாமே

சாதாரண வேலை செய்பவர்கள் கூட பிள்ளைகளை தனியார் பள்ளியில் படிக்க வேண்டும் என்பது கனவு. என்ன காரணம் என்பது அது வேறு விவாதம்.

தற்போது சராசரி மாத வருவாய் ஈட்டும் குடும்பத்தினர் குழந்தைகள் பெருமளவில் தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். கொரோனா தொற்று வாழ்வாதரத்தை முடக்கி, பொருளாதார ரீதியாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

குறிப்பாக பலர் பள்ளி கல்வி கட்டணம் செலுத்த முடியாமல், தங்களது குழந்தைகளை அரசு பள்ளி நோக்கி அழைத்து செல்கின்றனர். காரணம் தனியார் பள்ளி கொடுக்கும் நெருக்கடி கட்டணம் செலுத்தியே ஆக வேண்டும் என்று.

சமீபத்தில் தனியார் பள்ளி நிர்வாகிகள் பெற்றோரிடம் கட்டணம் வசூல் செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆகஸ்ட் 30ம் தேதி முதல் 40 சதவீதம் கட்டணம், பள்ளி திறந்த பிறகு 35 சதவீதம் கட்டணம் பெறலாம் என நீதியரசர் இடைக்கால உத்தரவை பிறப்பித்தார்.

வழக்கம்போல், தனியார் பள்ளிகள் தங்களுக்கு உரிய பாணியில் கட்டண வசூல் வேட்டையில் இறங்கினர். தாக்குபிடிக்க முடியாத பெற்றோர் கல்வி அதிகாரியிடம் புகார் அளிக்க, எந்த பலனும் இல்லை. வழக்கபோல் விசாரிக்கப்படும் என்ற தாரக மந்திரத்தை பெற்றோரிடம் ஊதி தள்ளினர்.

இதை அறிந்த அரசு வழக்கறிஞர் அன்னலட்சுமி அவர்கள் வழக்கை விசாரித்து வரும் நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலை வழக்காடும் மன்றத்திற்கு எடுத்து சென்றார். அப்போது நீதியரசர் நீதிமன்றம் உத்தரவு மீறி 40 சதவீதம் வசூலித்த தனியார் பள்ளிகள் பட்டியலை சமர்பிக்க வேண்டும் எனவும், பெற்றோர்கள் கட்டணம் தொடர்பான புகார்களை வாய்மொழியாக தெரிவிக்கலாம் எனவும், இதுகுறித்து கல்வி அதிகாரிகள் உடனடியாக விசாரித்து சம்மந்தபட்ட தனியார் பள்ளி மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவில் அவர் குறிப்பிட்டுள்ளார்

தனியார் பள்ளிகள் கட்டணம் செலுத்தக்கோரி வற்புறுத்தினால், நீதிமன்ற உத்தரவு மேற்கொள் காட்டி சம்மந்தப்பட்ட பள்ளிகள் மீது வாய்மொழியாக புகார் அளிக்கலாம்.

கல்வி கட்டணம் குறித்து கவலை வேண்டாமே.....