Green Comet News in Tamil | பச்சை வால் நட்சத்திரம் என்றால் என்ன
Green Comet News in Tamil
50,000 ஆண்டுகளுக்குப் பின் பூமியை நெருங்கும் பச்சை நிற வால் நட்சத்திரம்
வானில் ஒரு புதிய விருந்தாளி பூமியை நெருங்கிக்கொண்டிருக்கிறது. பச்சை நிற வால் நட்சத்திரம் என அழைக்கப்படும் இந்த வால் நட்சத்திரம், 50 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் பூமியை நெருங்குகிறது. வால் நட்சத்திரங்கள் நீள்வட்டப் பாதையில் சூரியனைச் சுற்றி வருகின்றன. சூரியனை நெருங்கும்போது அவற்றுக்கு வால் போன்ற பகுதி தோன்றுகிறது. இது, வால் நட்சத்திரத்தில் உள்ள ஐஸ் கட்டி, சூரியனின் வெப்பத்தால் உருகுவதால் தோன்றுகிறது.
சில வால் நட்சத்திரங்கள் சூரியனை ஒருமுறை சுற்றிவர குறுகிய காலத்தை எடுத்துக்கொள்ளும். சில நட்சத்திரங்களுக்கு பல ஆயிரம் ஆண்டுகளாகும். நீண்டகால வரம்புடைய வால் நட்சத்திரங்கள் என இவை அழைக்கப்படுகின்றன. இந்த வால் நட்சத்திரம் மார்ச் 2022ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டது.
Read Also: சர்வதேச விண்கற்கள் கண்டறிதல் ஆய்வு
C/2022 E3 (ZTF) என்பது இந்த வால் நட்சத்திரத்தின் அறிவியல் பெயர். ஆனால், இது பச்சை நிறத்தைக் கொண்டிருப்பதால் பெரும்பாலானோர் இதை பச்சை வால் நட்சத்திரம் என்கின்றனர்.
இந்த வால் நட்சத்திரம் அதிக டயட்டோமிக் கார்பனை (இரண்டு கார்பன் அணுக்களின் ஜோடி) கொண்டுள்ளது. இதனால் சூரியனிலிருந்து வெளிப்படும் புற ஊதா கதிர்களால் இந்த வால் நட்சத்திரம் பச்சை நிறத்தில் ஒளிர்கிறது.
பிப்ரவரி 2 அன்று பூமிக்கு அருகே வரும். வடக்கு கீழ்வானத்தில் இரவு 10 மணிக்கு இந்த வால் நட்சத்திரம் எழும். காலை 11 மணி வரை இதைப் பார்க்க முடியும். இதை தொலைநோக்கிகள் வாயிலாகக் காணலாம்.

இந்த அரிய வான் நிகழ்வை வரவேற்க மத்திய அரசின் விஞ்ஞான் பிரசார், அறிவியல் பலகை மற்றும் தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் ஆகிய அமைப்புகளின் ஆலோசனையின் பேரில் SNMV கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயற்பியல் துறை மற்றும் எஸ்.என். எம். வி. சயின்ஸ் கிளப் சார்பில் பச்சை வால் நட்சத்திரத்தை வரவேற்போம் எனும் அறிவியல் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வை கல்லூரி முதல்வர் முனைவர் போ. சுப்பிரமணி அவர்கள் துவக்கி வைத்தார். மேலாண்மை துறை இயக்குநர் முனைவர் முத்துகுமார் அவர்கள் முன்னிலை வகித்தார். மேலும் பச்சை வால் நட்சத்திரத்தை வரவேற்கும் விழிப்புணர்வு அட்டைகளை மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் பொது மக்களுக்கு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வை இயற்பியல் துறை தலைவர் க. லெனின்பாரதி, உதவி பேராசிரியர் எம். சிவரஞ்சனி ஆகியோர் நிகழ்வை ஒருங்கிணைத்தனர் .