தமிழக பள்ளி கல்வி ஆணையர் நந்தகுமார் அவர்கள் ஆகஸ்ட் 2ம் தேதி முதல் ஆசிரியர்கள் நாள்தோறும் பள்ளிக்கு வர வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
அந்த உத்தரவில் அவர் கூறியிருப்பதாவது, மாணவர் சோ்க்கை முன்னிட்டும், தலைமை ஆசிரியர்களுக்கு உதவியாக, ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பள்ளிக்கு வந்து பணிபுாிய வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
மேலும், கல்வி தொலைக்காட்சி பாட தொடர்பான அறிவுரைகள் மாணவர்களிடம் எடுத்து செல்வது, ஒப்படைப்பு வழங்குதல் உள்ளிட்ட பராமரிப்பு குறித்து அறிவுரை வழங்கப்பட்டன.
மேலும் அவரது உத்தரவில், பல்வேறு மாவட்டங்களில் ஆசிரியர்கள் கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பு நிகழ்ச்சிகளுடன், தாமே தன்னார்வத்துடன் மாணவர்களுக்கு கற்றல் செயல்பாட்டு மேம்படுத்த தொழில்நுட்ப வாயிலான கற்பித்தல் முறைக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாகும், அவர்கள் பாராட்டுக்குரியவர்கள என அவர் தெரிவித்துள்ளார்.
மாணவர் சேர்க்கை பணி, பள்ளி கால அட்டவணை தயாரிப்பு, கல்வி தொலைக்காட்சி பாட விவரங்கள் ஒப்படைப்பு, உள்ளிட்ட பணிகள் முன்னிட்டு, அனைத்து வகை பள்ளி ஆசிரியர்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, வரும் ஆகஸ்ட் 2ம் தேதி முதல் நாள்தோறும் பள்ளிக்கு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாற்றுதிறனாளிகள், புற்றுநோய், சீறுநீரகம் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள், இருதய நோய் சிகிச்சை மேற்கொண்டவர்கள், கோவிட் 19 ஆல் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்கள் பள்ளிக்கு தினமும் வருகை புரிவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
Join WhatsApp Group | WhatsApp Group |
To Follow Telegram : | Telegram Link |
To Follow Facebook | Facebook Link |
To Follow Twitter | Twitter Link |
To Follow Instagram | Instagram Link |
To Follow Youtube | Youtube Link |