கொரோனா காலகட்டத்தில் பள்ளி, கல்லூரி நிலையங்கள் மூடப்பட்டு, பூட்டுபோடப்பட்டது. பயன் அளிக்காத ஆன்லைன் கல்வியை தனியார் பள்ளிகள் தலையில் தூக்கிவைத்து ஆடியது. சில மாதங்களில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளில், ஆன்லைன் கல்வியால் எந்த பயனும் இல்லை என்பது உறுதியானது.
அதே நேரத்தில், அரசு பள்ளி மாணவர்களுக்கான கல்வியும் தடைப்பட்டது. குறிப்பாக, கொரோனா தளர்வுக்குபின் அரசு பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களின் மீதான அக்கறை அளப்பறியது. பெரும்பாலான அரசு பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு கல்வியை விட முதலில் மாணவர்களின் பசியை ஆற்ற வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள், உணவு வழங்கி அவர்களின் குடும்பங்களுக்கு கொடுத்து உதவியது மறக்க முடியாதது ஒன்று. அனைவரும் போற்றதலுக்குரியவர்கள். அதன்பின்னர், அதையும் தாண்டி சில ஆசிரியர்கள் மாணவர்களின் கல்வி எந்த நிலையிலும் பாதிக்க கூடாது என்பதற்காக மாணவர்களுக்கு வீட்டிற்கே சென்று கல்வி கற்பித்தது சேவையின் உச்சம். அவர்கள் கூறுவது என்னவென்றால், மாணவர்கள் கல்வியை தொடரவில்லை என்றால், கற்றதையும் மறப்பார் என்பதே. இதை கண்டு தனியார் பள்ளியில் படிக்க வைத்துகொண்டிருந்த பிள்ளையை, அரசு பள்ளியில் சேர்த்தனர். இதுபோன்று பல வியத்தகு சம்பவங்களும் நடந்தன. பள்ளிக்கல்வித்துறை அவர்களை ஊக்குவிக்கும் வகையில், குறைந்தபட்சம் ஒரு பாராட்டு சான்றிதழாவது அவர்களுக்கு வழங்கி ஊக்கப்படுத்திருக்க வேண்டும். அது, அவர்களை மேலும் கல்வி சேவையாற்ற தூண்டுதலாக இருந்திருக்கும். இதற்கிடையில், தேனி மாவட்டத்தில் கொரோனா காலத்தில் கற்பித்த ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி நாளிதழக்கு அளித்த பேட்டியில், தேனி மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மற்றும் ஸ்ரீ அரபிந்தோ சொசைட்டி சார்பில் ஆசிரியர்களுக்கான புதுமை பாடசாலை திட்டம் கடந்தாண்டு அக்டோபர் மாதம் செயல்படுத்தப்பட்டு வருகிறது, என்றார். இதற்காக பயிற்சியாளர்கள் தினேஷ், மணிமேகலை ஆகியோரால் தேர்வு செய்யப்பட்ட 15 தொடக்க நிலை பள்ளிகளில் பணிபுரியும் 58 ஆசிரியர்களுக்கான 12 வார பயிற்சி முடிக்கப்பட்டுள்ளது, என தெரிவித்தார். இந்த நிலையில், கொரோனா காலத்தில் சிறப்பாக செயலாற்றிய ஆசிரியர்களுக்கு புதுமை பாடசாலை திட்டம் மூலம் கொரோனா வாரியர்ஸ் எஜூகேஷன் என்ற விருது வழங்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.