அரசாணை எண் 92 அமுல்படுத்தாத கல்லூரிகள் நடவடிக்கை தேவை மாவட்ட ஆட்சியரிடம் மனு
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் தனியார் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் எஸ்.சி எஸ்.டி மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசாணை எண் 92-ல் குறிப்பிட்டுள்ளது போல் கல்வி கட்டணம் விலக்கு அளிக்க வேண்டியும், கல்வி கட்டண விலக்கு அளிக்காமல் கட்டாய கல்வி கட்டணம் வசூலிக்கும் தனியார் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க
கோவை மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு அரசு மாநில தூய்மை பணியாளர் நல வாரிய உறுப்பினர் எஸ்.செல்வகுமார் மனு அளித்துள்ளார்.
அரசாணை எண் 92
கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் எஸ்.சி/எஸ்.டி மாணவர்களுக்கு கல்லூரி சேர்க்கையில் முறையாக அரசாணை எண் 92-ல் பின்பற்றபடுவதில்லை என குற்றச்சாட்டு எழுகின்றது. தமிழகத்தில் அதிகமாக கல்வி உதவிதொகை பெறும் மாவட்டங்களில் கோவை மாவட்டமும் ஒன்று. இங்கு 20,000திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி உதவி தொகைப் பெற்று கல்லூரி படிப்பை பயின்று வருகின்றனர்.தமிழக அரசு எஸ்சி/எஸ்டி மாணவ மாணவிகள் கல்வி மேம்பாடு அடைய வேண்டும் என்றான் நோக்கத்தொடு பெரும் முனைப்புடன் செயல்படுத்திக்கொண்டு இருக்கும் வேலையில் சில தனியார் மற்றும் சுயநிதி கல்லூரிகள் அரசாணை எண்92-யை பின்பற்றாமல் மாணவ மாணவிகளிடம் கட்டாய கல்வி கட்டணம் வசூல் செய்து வருகின்றனர்.
READ ALSO THIS: தற்காலிக ஆசிரியர் பணி (13,331 இடம்) |இல்லம் தேடி தன்னார்வலர்களுக்கு ஜாக்பாட்
இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளிக்கும் மாணவர்கள் மீது கல்லூரி நிர்வாகம் அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாக தகவல்கள் வருகின்றது. கடந்த காலகட்டங்களில் அனைத்து கல்லூரி முதல்வர்களையும் அழைத்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டம் நடத்தி கல்வி கட்டணம் வழங்குதல் மற்றும் பெறுவது குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரானா நோய்பரவலை காரணம் கட்டி எந்த கூட்டமும் நடைபெறவில்லை. இந்த சூழலை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு தமிழக அரசாணையை பயன்படுத்துவதில் இருந்து நிலைதடுமாறி செல்கின்றது. இது பட்டியல் இன மாணவ மாணவிகளை பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் என்ற பெயரில் மாணவ மாணவிகளிடம் முற்றிலும் எந்த விதமான கட்டணம் செலுத்தாமல் பட்டபடிப்பு பயிலும் வரை தொடர்ந்து உதவி செய்கிறோம் என தவறான வழிகாட்டுதலின் பெரில் திறனற்ற கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்த முகவர்களாக செல்படுவது வருந்தத்தக்க செயலாகும். இம்மாதிரியான செயல்கள் எஸ்சி/எஸ்டி மாணவர்கள் முழுமையான அளவு கல்வி தொடரமுடியாமல் பாதிப்பை ஏற்படுத்தும் செயலை செய்யும் முகவர்கள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது