கோவை அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி) தேர்வு நெறியாளர் வீரமணி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,
2018-21 இல் பயின்ற மூன்றாம் ஆண்டு இளங்கலை, அறிவியல் மாணவ, மாணவியர் ஆறாம் பருவத்தில் மற்றும் 2019-2021ல் பயின்ற இரண்டாம் ஆண்டு, முதுகலை, அறிவியல் மாணவ, மாணவியர் நான்காம் பருவத்தில் ஏதேனும் ஒரு பாடத்தில் மட்டும் தேர்ச்சி பெற தவறியிருந்தால் உடனடி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
உடனடி தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ரூ.600 ஐ (இளங்கலை மாணவர்களுக்கு), ரூ. 900 ஐ ( முதுகலை மாணவர்களுக்கு) யூகோ வங்கியில் செலுத்தி தேர்வு நெறியாளர் அலுவலகத்தில் உரிய விண்ணப்பத்தில் செப்டம்பர் 1ம் தேதி முதல் செப்டம்பர் 7ம் தேதி மாலை 3 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
உடனடி தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் செப்டம்பர் 13ம் தேதி அன்று காலை தேர்வு நெறியாளர் அலுவலகத்தில் உடனடி தேர்வுக்கான நுழைவு சீட்டு பெற்றுக்கொள்ளவும். செப்டம்பர் 13ம் தேதி காலை 10 மணிக்கு நேரடி தேர்வுகள் நடைபெறும். இவ்வாறு, அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.
