Ennum Ezhuthum Online Assessment | பள்ளியில் உயிரிழந்த ஆசிரியை
Ennum Ezhuthum Online Assessment
திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றியத்தில் அரசு உதவிபெறும் பள்ளியில் பணியாற்றிய இடைநிலை ஆசிரியை அன்னாள் ஜெயமேரி பள்ளியிலேயே உயிரிழந்த சம்பவம் ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ஆசிரியர் வட்டாரங்கள் கூறியதாவது, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் நிர்வாக திறன்மையின்மை காரணமாக, பள்ளி கல்வித்துறை மோசமான நிலைக்கு போய் கொண்டிருக்கிறது. குறிப்பாக, மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்டம் கொண்டுவரப்பட்டு, அவர்களுக்கு ஆன்லைன் வழியாக மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது.
கிராமப்புற மாணவர்கள் போதிய இணையதள வசதியில்லாமல், ஆன்லைன் மூலம் மாணவர்களை மதிப்பீடு செய்ய முடியாமல் ஆசிரியர்கள் திணறி வருகின்றனர். இதுதவிர, சர்வர் பிரச்சனையாலும், மதிப்பீட்டு முறைகள் அவ்வப்போது முடங்கின. இதனால் ஆசிரியர்கள் பலர் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். ஆசிரியர்களும் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
Read Also: எண்ணும் எழுத்தும் ஆன்லைன் தேர்வுக்கு எதிராக போராட்டம்
இந்த நிலையில், திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றியத்தில் பணியாற்றும் ஆசிரியை அன்னாள் ஜெயமேரி ஆன்லைன் மதிப்பீட்டு முறையால் ஏற்கனவே மன அழுத்தத்தால் இருந்ததாக கூறப்படுகிறது. தமிழ் பாடத்திற்கான மதிப்பீடு செய்யப்பட்டு, அவர் நேற்று செயலியில் பதிேவற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது, பின்னர் மதிப்பீடு செய்யவில்லை என செயலியில் தோன்றியதால் கவலையில் இருந்ததாக கூறப்படுகிறது. ஆசிரியை புலம்பிகொண்டே, நாற்காலியில் அமர்ந்தபோது அவர் உயிரிழந்தாா், இவ்வாறு வட்டாரங்கள் தொிவித்தனர்.
இந்த நிகழ்வை அடுத்து, ஆசிரியர்கள் கல்வி அதிகாரிகள் மீது கொந்தளிப்பில் உள்ளனர். அதிகாரிகள் உள்ள வாட்ஸப், டெலிகிராம் குழுவில் கண்டனங்களை தெரிவித்த விதமாக உள்ளனர்.